"தலைவர் ரொம்ப கோபமா இருக்காரே...ஏன்?"
"அந்த மீடிங்க்ல நோட்டு மாலையா போடுறத சொலிட்டு,ஸ்கூல் நோட்புக்கை மாலையா கட்டி போட்டுடங்களாம்..."
"திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு ஏன் போலீஸ் வந்திச்சி?"
"சிறந்த நீலப்பட விருதுகளும் வழங்கிநாங்களாம்!"
"தலைவர் செம கோபமா இருக்காரே?..ஏன்
"அவர் எழுதின காதல் கடிதங்களை எல்லாம் தொகுத்து மகளிர் அணி தலைவி தனி புத்தகமாக வெளியிட்டுடாங்களாம்..."
"கணக்கு பரீட்சை எழுதசொன்ன ஏண்டா டான்ஸ் ஆடுறாய்?"
"ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் மார்க்க உண்டென்னு நீங்கதானே சொன்னிங்க சார்"..அது தான் ஆடுறன்..
"தொகுதியில தண்ணி கேட்டு மறியல் பண்ணியவங்க கிட்ட தலைவர் போய் என்ன சொல்லிடாரென்று அவங்க கோபபட்டாங்க?..."
"உங்களுக்கெல்லாம் என்னென்ன "பிராண்டு" வேணும்னு கேட்டாராம்..."
"மன்னர் மினரல் வாட்டர் பாட்டிலை அரியணையில் வைத்து தாளம் போடுறாரே..ஏன்?"
"தண்ணியடிக்க போக வேண்டும்,சீக்கிரமாக அரசவை கூட்டத்தை முடியுங்கள் என்று சிம்பாலிக்காக சொல்கிறாராம்..."
"நீதிபதி ஏன் அந்த வக்கீலை கண்டிக்கிறார்?"
"போலி டாக்டர்,போலி மருந்து என போலிகள் பெருகிவிட்ட இந்த யுகத்தில்,போலி சாட்சிகளையும் நீதிமன்றத்தில் அனுமதிக்கணும் யுவர் ஆனார்னு பேசிட்டாராம்..."
"தலைவர் "கிளினிக்"குக்கு போலாமான்னு கேக்கறாரே.... உடம்புக்கு முடியலையா?"
"ம்ஹும்... அவருக்கு டாக்டர் பட்டம் குடுத்ததுலயிருந்து, கட்சி ஆபீஸ் போறதை இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்காரு!"
"கபாலி ரொம்ப உணர்ச்சிவசப்படறானா... அப்படி என்ன செய்தான்?"
"திருடப் போற இடத்துல எல்லாம், "என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இன்ஸ்பெக்டர் ஐயாவுக்கு நன்றி"ன்னு எழுதி வச்சுட்டு வந்துடறான்..!"
கபாலியோட சம்சாரம் சரியான சினிமா பைத்தியம்னு எப்படிச் சொல்றே?"
"பின்னே.... 'கபாலி சென்னைக்குப் போயிருக்கான்'கிறதை 'களவாணி மதராசபட்டினம் போயிருக்கு'ன்னு சொல்றாளே!"
"எதுக்குய்யா ஒவ்வொரு ரீல்லயும் படத்தோட டைரக்டர் நடுவுல வந்து ஏதாவது ஒரு கேரக்டரை தொட்டுட்டுப் போறாரு?"
"அவரோட போன படத்துல, டைரக்டறோட "டச்"சே இல்லைன்னு விமர்சனம் எழுதிட்டாங்களாம்.... அதான்....!"
No comments :
Post a Comment