Tamil Jokes |
நண்பர் 1: நடிகருக்கும் மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை ?
நண்பர் 2: தெரியலையேடா?
நண்பர் 1:இரண்டு பேருமே ஏதோ ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துகிட்டு இருப்பாங்க.
நண்பர் 1: நேற்று என்னோட கச்சேரிக்கு நீங்க வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன் ?
நண்பர் 2: வரனும்னுதான் நெனைச்சேன் சார், ஆனா அதுக்குள்ள வேற ஒரு கஸ்டம் வந்திருச்சு
தோழி 1 : உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே?
தோழி 2 : உனக்கு அத யார் சொன்னாடி?
தோழி 1 : என் வீட்டுக்காரர்தான், காலையில கோலம் போடும்போது பார்த்தாராம்.
தோழி 1 : என்னடி இது அனியாயமா இருக்கு, உன் வீட்டு வேலைக்காரி லீவு போடறா அன்னைக்கி உன் வீட்டுக்காரரும் லீவு போடறாரா?
தோழி 2 : சும்மா இருடி. நான்தான் அவரை லீவு போட வைப்பேன்,என்னா வேலைக்காரி விட்டுப் போன வேலையை யாரு செய்றது.
நண்பர் 1: பொண்ணு கிளி மாதிரின்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணியது தப்பா போச்சுப்பா?
நண்பர் 2: ஏண்டா என்ன ஆச்சு?
நண்பர் 1: கிளி மாதிரி பேசினதையே திரும்ப திரும்ப பேசி கழுத்தை அருக்கிறாடா.
இயக்குனர் : யோசனை இல்லாம மெகா சீரியல் மாதிரி படம் எடுத்திட்டோம்?
நண்பர் : அப்புறமா?
இயக்குனர் : நாலு தடவை இடைவேளை விடுறதா முடிவு பண்ணிட்டோம்.
மகன் அப்பாவிடம்: அப்பா உனக்கு இருட்டில எழுத முடியுமா?
அப்பா : ஓ முடியுமே.
மகன் : அப்படின்ன என்னோட ரேங்க் கார்டுல இப்ப கையெளுத்து போடுங்க.
டாக்டர் : அந்த நோயாளி ரஜினி ரசிகர்னு நினைக்கிறேன்?
நர்ஸ் : எப்படி சொல்லுரீங்க டாக்டர்.
டாக்டர் : ஊசி போட்டு முடிச்சதும் "என் வலி தனி வலின்னு சொல்றாறே.
காதலன் : உங்க அப்பாக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒன்னுதான்?
காதலி : எதனால அப்படி சொல்றீங்க?
காதலன் : ரெண்டு பேருமே திருப்பிக் கொடுக்கறது இல்லயே.
குடிகாரர் 1 : குடி குடியை கெடுக்கும்கிறது சரியாப் போச்சு?
குடிகாரர் 2 : எதனாலப்பா?
குடிகாரர் 2 : கல்யாணம் ஆன உடனேயே எம் பொண்டாட்டி என்ன குடிக்க கூடாதுன்னு சொல்லிட்டா .
பையன் : உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்த கேள்வி?
பெண் : கேழுப்பா
பையன் : எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போரீங்க?
பெண் : செருப்பாலே அடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு
பையன் : உங்க தங்கச்சியோட லவ்வர்.
மனைவி : நமக்கு கல்யாணம் முடிஞ்சி இன்னியோட பத்து வருசம் ஆகுது?
கணவன் : எனக்கு அதெல்லாம் மறந்து போச்சு.
மனைவி : இது கூடவா?
கணவன் : ஆமாண்டி, நல்ல விசயங்களை மட்டும் தான் நான் ஞாபகம் வச்சிக்குவேன்.
காதலன் : கண்ணே உனக்காக இமயமலைய கூட தாண்டுவேன்?
காதலி : சரி அது கெடக்கட்டும்? இப்ப எதுக்காக காலை நொண்டுரீங்க
காதலன் : உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்த்திட்டேன்.
தொண்டர் : கவர்னர் பதவிக்கு உங்க பெயர் அடிபடுது தலைவரே, நீங்க என்னடான்னா, ரொம்ப சோகமா இருக்குரீங்கலே தலைவரே?
தலைவர் : இந்த தடவையாவது எப்படியாவது ஜெயிச்சிடனும்கிற கவலைதான்.
No comments :
Post a Comment