Tamil Jokes part 2 - தமிழ் ந‌கைச்சுவை: துணுக்குக‌ள் - 2 | Tamil Nagaichuvai Thunukkugal Part 2

0 comments
தமிழ் நகைச்சுவை துணுக்குகள். Tamil Comedy and Tamil Nagaichuvai in Tamil language. வாசகர்கள் தங்கள் படித்து, ரசித்து, அனுபவித்து, சிரித்து, மகிழ்ந்த அனைத்து மக்களும் படித்து மகிழும்படியாக தமிழ் நகைச்சுவை இங்கே:


தமிழ் ஜோக்ஸ்
Tamil Jokes
ந‌ண்ப‌ர் 1:  வருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். 
ந‌ண்ப‌ர் 2: அது என்னைக்கு? 
ந‌ண்ப‌ர் 1: 'வாலன்டைன்ஸ்டே' அன்றைக்கு!

ந‌ண்ப‌ர் 1: குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம்? 
ந‌ண்ப‌ர் 1 குன்னக்குடி-வயலினிஸ்ட்! காந்திஜி-non வயலினிஸ்ட்!


தேள் திரவப்பொருளா? திடப்பொருளா? 
தெரியவில்லையே 
திரவப்பொருள்!' 
அதெப்படி? 
கொட்டுமே!

மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது! 
ஏன் அப்படி சொல்றே? 
மயிலுக்கு தமிழ் தெரியாதே!


கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி
நீ பரவாயில்லே.
என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா.

என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு.
பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..? 
ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை.
என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க? 
நான் தான் சொன்னேன்ல. பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!


எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு
எங்க தலைவரு 'சிக்கனோட' பயன்படுத்துவாரு.

உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்? 
அது 'ஈஸி' சேராச்சே!

உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க? 
படுத்த படுக்கையாக...

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா
தெரியலையே.என்னது? 
தலையிலே முடி இருக்கிறது தான்...!

இந்த ரோடு எங்கே போகிறது? 
எங்கும் போகலை. நான் பிறந்ததிலிருந்து இன்று வரை இங்கு தான் இருக்கிறது.


எதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே? 

எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா.

என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு.
அட நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!

More Tamil Jokes part 2 - தமிழ் ந‌கைச்சுவை: ந‌ண்ப‌ர் ந‌கைச்சுவை துணுக்குக‌ள் - 2 | Tamil Nagaichuvai Thunukkugal Part 2

சிறந்த தமிழ் ந‌கைச்சுவை மற்றும் தமிழ் ஜோக்ஸ் அனைத்து தமிழ் வாசகர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் உடைய அனைத்து நண்பர்களும் எங்களின் ஃபேஸ்‌புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்.

Tamil Jokes - தமிழ் ந‌கைச்சுவை: ந‌ண்ப‌ர் ந‌கைச்சுவை துணுக்குக‌ள் | Tamil Nagaichuvai Thunukkugal |

0 comments
Tamil Jokes
தமிழ் ந‌கைச்சுவை Tamil Jokes என்ப‌து ந‌ம் பார‌ம்ப‌ரிய வாழ்விய‌லின் ஒரு ப‌குதியாகும், கீழே எழுத‌ப்பட்டுள்ள‌ தமிழ் ந‌கைச்சுவை துணுக்குக‌ள் Tamil Jokes அனைத்தும், கேட்ட‌ பார்த்த‌ ப‌டித்த‌ தமிழ் ந‌கைச்சுவை விச‌ய‌ங்க‌ளின் பிர‌திப‌லிப்பே. Tamil Jokes என்ப‌து ந‌ம் பார‌ம்ப‌ரிய வாழ்விய‌லின் ஒரு ப‌குதியாகும், கீழே எழுத‌ப்பட்டுள்ள‌ தமிழ் ந‌கைச்சுவை துணுக்குக‌ள் அனைத்தும், கேட்ட‌ பார்த்த‌ ப‌டித்த‌ தமிழ் ந‌கைச்சுவை விச‌ய‌ங்க‌ளின் பிர‌திப‌லிப்பே.

ந‌ண்ப‌ர் 1: ந‌டிக‌ருக்கும் ம‌ருத்துவ‌ருக்கும் என்ன‌ ஒற்றுமை ?
ந‌ண்ப‌ர் 2: தெரிய‌லையேடா?
ந‌ண்ப‌ர் 1:இரண்டு பேருமே ஏதோ ஒரு தியேட்ட‌ர்ல‌ யாரையாவ‌து போட்டு அறுத்துகிட்டு இருப்பாங்க‌.

ந‌ண்ப‌ர் 1: நேற்று என்னோட‌‌ க‌ச்சேரிக்கு நீங்க‌ வ‌ருவீங்க‌ன்னு ரொம்ப‌ எதிர்பார்த்தேன் ?
ந‌ண்ப‌ர் 2: வ‌ர‌னும்னுதான் நெனைச்சேன் சார், ஆனா அதுக்குள்ள‌ வேற‌ ஒரு கஸ்டம் வந்திருச்சு

தோழி 1 : உன் வீட்டுக்கார‌ர் காலையில‌ கோல‌மெல்லாம் போடுறாராமே?
தோழி 2 : உன‌க்கு அத‌ யார் சொன்னாடி?
தோழி 1 : என் வீட்டுக்கார‌ர்தான், காலையில‌ கோல‌ம் போடும்போது பார்த்தாராம்.

தோழி 1 : என்ன‌டி இது அனியாய‌மா இருக்கு, உன் வீட்டு வேலைக்காரி லீவு போடறா அன்னைக்கி உன் வீட்டுக்கார‌ரும் லீவு போட‌றாரா?
தோழி 2 : சும்மா இருடி. நான்தான் அவ‌ரை லீவு போட‌ வைப்பேன்,என்னா வேலைக்காரி விட்டுப் போன‌ வேலையை யாரு செய்ற‌து.

ந‌ண்ப‌ர் 1: பொண்ணு கிளி மாதிரின்னு த‌ர‌க‌ர் சொன்ன‌தை ந‌ம்பி க‌ல்யாண‌ம் ப‌ண்ணிய‌து த‌ப்பா போச்சுப்பா?
ந‌ண்ப‌ர் 2: ஏண்டா என்ன‌ ஆச்சு?
ந‌ண்ப‌ர் 1: கிளி மாதிரி பேசின‌தையே திரும்ப‌ திரும்ப‌ பேசி க‌ழுத்தை அருக்கிறாடா.

இய‌க்குன‌ர் : யோச‌னை இல்லாம‌ மெகா சீரிய‌ல் மாதிரி ப‌ட‌ம் எடுத்திட்டோம்?
ந‌ண்ப‌ர் : அப்புற‌மா?
இய‌க்குன‌ர் : நாலு த‌ட‌வை இடைவேளை விடுற‌தா முடிவு ப‌ண்ணிட்டோம்.

ம‌க‌ன் அப்பாவிட‌ம்: அப்பா உன‌க்கு இருட்டில‌ எழுத‌ முடியுமா?
அப்பா : ஓ முடியுமே.
ம‌க‌ன் : அப்ப‌டின்ன‌ என்னோட‌ ரேங்க் கார்டுல‌ இப்ப‌ கையெளுத்து போடுங்க‌.

டாக்ட‌ர் : அந்த‌ நோயாளி ர‌ஜினி ரசிக‌ர்னு நினைக்கிறேன்?
ந‌ர்ஸ் : எப்ப‌டி சொல்லுரீங்க‌ டாக்ட‌ர்.
டாக்ட‌ர் : ஊசி போட்டு முடிச்ச‌தும் "என் வ‌லி த‌னி வ‌லின்னு சொல்றாறே.

காத‌ல‌ன் : உங்க‌ அப்பாக்கு க‌ட‌ன் த‌ர்ற‌தும் உன‌க்கு முத்த‌ம் த‌ர்ற‌தும் ஒன்னுதான்?
காத‌லி : எதனால‌ அப்ப‌டி சொல்றீங்க‌?
காத‌ல‌ன் : ரெண்டு பேருமே திருப்பிக் கொடுக்க‌ற‌து இல்ல‌யே.


குடிகார‌ர் 1 : குடி குடியை கெடுக்கும்கிற‌து ச‌ரியாப் போச்சு?
குடிகாரர் 2 : எதனால‌ப்பா?
குடிகார‌ர் 2 : க‌ல்யாண‌ம் ஆன‌ உட‌னேயே எம் பொண்டாட்டி என்ன‌ குடிக்க‌ கூடாதுன்னு சொல்லிட்டா .

பைய‌ன் : உங்க‌ குடும்ப‌ ந‌ன்மையை உத்தேசித்து இந்த‌ கேள்வி?
பெண் : கேழுப்பா
பைய‌ன் : எப்ப‌ நீங்க‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ப் போரீங்க‌?
பெண் : செருப்பாலே அடிப்பேன், அதைக் கேட்க‌ நீ யாரு
பைய‌ன் : உங்க‌ த‌ங்க‌ச்சியோட‌ ல‌வ்வ‌ர்.

ம‌னைவி : ந‌ம‌க்கு க‌ல்யாண‌ம் முடிஞ்சி இன்னியோட‌ ப‌த்து வ‌ருச‌ம் ஆகுது?
க‌ண‌வ‌ன் : என‌க்கு அதெல்லாம் ம‌ற‌ந்து போச்சு.
ம‌னைவி : இது கூட‌வா?
க‌ண‌வ‌ன் : ஆமாண்டி, ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ளை ம‌ட்டும் தான் நான் ஞாப‌க‌ம் வ‌ச்சிக்குவேன்.


காத‌ல‌ன் : க‌ண்ணே உன‌க்காக‌ இம‌ய‌ம‌லைய‌ கூட‌ தாண்டுவேன்?
காத‌லி : ச‌ரி அது கெட‌க்க‌ட்டும்? இப்ப‌ எதுக்காக‌ காலை நொண்டுரீங்க‌
காத‌ல‌ன் : உங்க‌ வீட்டு கேட்டை தாண்டும் போது த‌டுக்கி விழுந்த்திட்டேன்.

தொண்ட‌ர் : க‌வ‌ர்ன‌ர் ப‌த‌விக்கு உங்க‌ பெய‌ர் அடிப‌டுது த‌லைவ‌ரே, நீங்க‌ என்ன‌டான்னா, ரொம்ப‌ சோக‌மா இருக்குரீங்கலே த‌லைவ‌ரே?
த‌லைவ‌ர் : இந்த‌ த‌ட‌வையாவ‌து எப்ப‌டியாவ‌து ஜெயிச்சிட‌னும்கிற‌ க‌வ‌லைதான்.

Marriage Day Jokes |சர்ச் நகைச்சுவை | திருமண நகைச்சுவை

0 comments
சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு
சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:

'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?'

'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு
வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன்
போட்டுருக்கு'

'அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'

Tamil Jokes [You Must Laugh] | ஜோக்ஸ் |Part 1 of the Tamil Jokes Series

0 comments
Tamil Jokes are here, now read the latest Tamil Jokes which i took from some sites for your Tamil Jokes Collection, read these Tamil Jokes and Laugh like Any think

"தலைவர் ரொம்ப கோபமா இருக்காரே...ஏன்?"
"அந்த மீடிங்க்ல நோட்டு மாலையா போடுறத சொலிட்டு,ஸ்கூல் நோட்புக்கை மாலையா கட்டி போட்டுடங்களாம்..."

"திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு ஏன் போலீஸ் வந்திச்சி?"
"சிறந்த நீலப்பட விருதுகளும் வழங்கிநாங்களாம்!"

"தலைவர் செம கோபமா இருக்காரே?..ஏன்
"அவர் எழுதின காதல் கடிதங்களை எல்லாம் தொகுத்து மகளிர் அணி தலைவி தனி புத்தகமாக வெளியிட்டுடாங்களாம்..."

"கணக்கு பரீட்சை எழுதசொன்ன ஏண்டா டான்ஸ் ஆடுறாய்?"
"ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் மார்க்க உண்டென்னு நீங்கதானே சொன்னிங்க சார்"..அது தான் ஆடுறன்..

"தொகுதியில தண்ணி கேட்டு மறியல் பண்ணியவங்க கிட்ட தலைவர் போய் என்ன சொல்லிடாரென்று அவங்க கோபபட்டாங்க?..."
"உங்களுக்கெல்லாம் என்னென்ன "பிராண்டு" வேணும்னு கேட்டாராம்..."

"மன்னர் மினரல் வாட்டர் பாட்டிலை அரியணையில் வைத்து தாளம் போடுறாரே..ஏன்?"
"தண்ணியடிக்க போக வேண்டும்,சீக்கிரமாக அரசவை கூட்டத்தை முடியுங்கள் என்று சிம்பாலிக்காக சொல்கிறாராம்..."

"நீதிபதி ஏன் அந்த வக்கீலை கண்டிக்கிறார்?"
"போலி டாக்டர்,போலி மருந்து என போலிகள் பெருகிவிட்ட இந்த யுகத்தில்,போலி சாட்சிகளையும் நீதிமன்றத்தில் அனுமதிக்கணும் யுவர் ஆனார்னு பேசிட்டாராம்..."

"தலைவர் "கிளினிக்"குக்கு போலாமான்னு கேக்கறாரே.... உடம்புக்கு முடியலையா?"
"ம்ஹும்... அவருக்கு டாக்டர் பட்டம் குடுத்ததுலயிருந்து, கட்சி ஆபீஸ் போறதை இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்காரு!"

"கபாலி ரொம்ப உணர்ச்சிவசப்படறானா... அப்படி என்ன செய்தான்?"
"திருடப் போற இடத்துல எல்லாம், "என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இன்ஸ்பெக்டர் ஐயாவுக்கு நன்றி"ன்னு எழுதி வச்சுட்டு வந்துடறான்..!"

கபாலியோட சம்சாரம் சரியான சினிமா பைத்தியம்னு எப்படிச் சொல்றே?"
"பின்னே.... 'கபாலி சென்னைக்குப் போயிருக்கான்'கிறதை 'களவாணி மதராசபட்டினம் போயிருக்கு'ன்னு சொல்றாளே!"

"எதுக்குய்யா ஒவ்வொரு ரீல்லயும் படத்தோட டைரக்டர் நடுவுல வந்து ஏதாவது ஒரு கேரக்டரை தொட்டுட்டுப் போறாரு?"
"அவரோட போன படத்துல, டைரக்டறோட "டச்"சே இல்லைன்னு விமர்சனம் எழுதிட்டாங்களாம்.... அதான்....!"
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf