ஊழல் மற்றும் குடும்ப அரசியலுக்கு தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்தார்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதற்கு சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், "ஊழல் மற்றும் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக மக்கள் அதிமுகவுக்கு மகத்தான வெற்றியை தந்துள்ளனர்," என்றார்.
குஜராத்தைப் போல தமிழகம் முன்னேறிய மாநிலமாக மாறுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, "ஜெயலலிதா மிகத் திறமையான பெண்மணி. அவரது கடின உழைப்பும், திறமையும் தமிழகத்தை நிச்சயம் முன்னேறும். தமிழகம் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெறும்," என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் ஜெயலலிதா பெற்றுள்ள வெற்றி, நிச்சயம் தேசிய அரசியலிலும் எதிரொலிக்கும்," என்றார் நரேந்திர மோடி.
No comments :
Post a Comment