அல்சர் என்பது செரிமான உறுப்பு/குழலின் உட்சுவர்களில் ஏற்படும் புண்கள்/ரணம் ஆகும். அல்சர் பெரும்பாலும் பொதுவாக டியோடினத்தில் (அதாவது சிறுகுடலின் முதல் பகுதியில்) ஏற்படும்.
அல்சர் ஏற்படுத்துபவைகள் யாவை?
ஹெலிகோபாக்டென் பைலோரை எனப்படும் ஒரு வகை பாக்டீரியா பலவகை அல்சர்களை ஏற்படுத்துகிறது.
வயிற்றில் சுரக்கும் அமிலம் மற்றும் திரவச்சாறு செரிமான மண்டலத்தின் உட்சுவரினை எரித்து, அரிப்பதும் அல்சர் ஏற்படுவதில் பங்கு வகிக்கிறது. இது உடலில் மிக அதிகமான அமிலம் உற்பத்தியாவதினாலோ அல்லது செரிமான மண்டலத்தின் உட்சுவரானது பிறவழிகளில் சிதைவுறுவதினாலோ ஏற்படுகிறது.
உடல் ரீதியான மற்றும் உளரீதியான அழுத்தமும், ஒரு நபரில் ஏற்கனவே அல்சர் இருப்பின், அதனை அதிகரிக்கிறது.
சில மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதினாலும் அல்சர் ஏற்படுகிறது.
அல்சரில் ஏற்படக்கூடிய அடையாளங்கள்
சாப்பிடும் போது அல்லது தண்ணீர் குடிக்கும் போது நன்றாய் இருக்கும், ஆனால் 1 அல்லது 2 மணி நேரம் கழித்து, நிலமை மோசமாகும் (டியோடினல் அல்சர்).
சாப்பிடும்போது மற்றும் குடிக்கும் போது நிலைமை மோசமாதல் (காஸ்டிரிக் அல்சர்).
இரவு தூக்கத்தை பாதிக்கும் அளவுக்கு வயிற்று வலி ஏற்படுதல்.
வயிறு கனத்தல் போன்ற உணர்வு, வயிறு உப்புதல், வயிறு எரிச்சல், அல்லது மந்தமான நிலையில் வயிற்றில் வலி.
வாந்தி
எதிர் பாராத உடல் எடை இழப்பு.
கடைப்பிடிக்க எளிய ஆலோசனைகள்
புகைபிடிக்கக் கூடாது
மருத்துவர் பரிந்துரைக்காத பட்சத்தில் அழற்சியை தடைசெய்கிற மருந்துகளைத் தவிர்க்கவும்.
காஃபீன் மற்றும் மதுவகைகளைத் தவிர்க்கவும்
நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.
அல்சர் மோசமடைதலின் எச்சரிக்கையான அடையாளங்கள்
இரத்த வாந்தி ஏற்படுதல்.
சில மணி நேரங்களுக்கு முன் அல்லது நாளுக்கு முன் உட்கொண்ட உணவினை வாந்தி பண்ணுதல்.
வழக்கத்திற்கு மாறான பலவீனம் அல்லது தலைசுற்றல்.
மலத்தில் இரத்தம் வருதல் (மலத்தில் இரத்தம் வருவதால் மலத்தின் நிறம் கருப்பு அல்லது தார் போன்று மாறுதல்)
தொடர்ந்து கொமட்டல் அல்லது திரும்பத்திரும்ப வாந்தி
திடீரென மோசமான வலி
தொடர்ந்து எடை குறைவு
மருந்து உட்கொண்டாலும், வலி நீங்காமலிருத்தல்
வலி உடலின் பின்பக்கம் வரை சென்றடைதல்.
No comments :
Post a Comment