அல்சர் வருவதற்கு காரணம் | Reason for Ulcer | குடல் புண் (அல்சர்) |

'நாம் சாப்பிட்ட உணவு 4 மணி நேரத்தில் செரிமானம் ஆகிவிடும். அதன் பிறகு மீண்டும் வயிற்றுக்குள் உணவை தள்ள வேண்டியது அவசியம். இது எப்படி என்றால் வண்டிக்கு பெட்ரோல் போடுவது போல்தான். ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டாச்சு.. வண்டியோட மைலேஜ்படி 50 கி.மீ. வண்டி ஓடிவிட்டது என்றால் அடுத்து பெட்ரோல் போட்டால்தான் தொடர்ந்து ஓடும். அதுபோல்தான் மனிதனின் வயிறும். சிலர் மதியம் சாப்பிடாமல் இருப்பார்கள். அல்லது சாப்பிடத் தாமதம் ஆகும். அதனால் காலையிலே சேர்த்து சாப்பிடுகிறேன் என்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

மொத்தமாக சாப்பிடுவதால், அந்த நேரத்தில் மந்தமாக இருக்குமே தவிர, எதிர்பார்க்கிற விஷயம் நடக்காது. தினசரி மூன்று முறை உணவு சாப்பிடுவது அவசியம். காலை 9 மணிக்கு சாப்பிட்டால் அடுத்து மதியம் 1 மணி வாக்கில் அவசியம் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடவில்லை என்றால் சுறுசுறுப்பு குறையும். மூளை, உள்ளிட்ட உறுப்புகள் சோர்வடைந்துவிடும். இது நீண்ட நேரம் தொடர்ந்து பணியாற்றும் அனைவருக்கும் பொருந்தும். சாப்பிடவில்லை என்றால் எபெக்டிவ் ஆக செயல்பட முடியாது. ஒர்க் பெர்பாமன்ஸ் குறைந்துவிடும். சந்தையில் ரிஸ்க் எடுக்கலாம். ஆனால், சாப்பாட்டில் ரிஸ்க் எடுக்கக் கூடாது!'' என்றவர் சரியான நேரத்துக்கு சாப்பிடவில்லை என்றால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி விளக்கினார்.

'' சிலர் உணவை தவிர்த்துவிட்டு குளிர் பானம் அல்லது சின்னதாக ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் கணிசமான கலோரி உடலில் சேரும். ஆனால், அடுத்து கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடும் போது ஏற்கெனவே சாப்பிட்டதை கணக்கில் கொண்டு குறைவாக சாப்பிட மாட்டார்கள். ஒரு முழு கட்டு கட்டி விடுவார்கள். அது செரிப்பதற்கான உடல் உழைப்பு இல்லை என்றால் அது  கொழுப்பாக மாறிவிடும். இதனால், உடல் பருமன் ஏற்படும். கூடவே, நீரிழிவு, ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்ற பிரச்னைகளும் வரக்கூடும்!

நீண்ட நேரமாக சாப்பிடவில்லை என்றால் வயிற்றில் உணவு செரிமானம் ஆவதற்காக சுரந்த அமிலம் குடலை பாதிக்க ஆரம்பிக்கும். நாளடைவில் குடலில் புண் ஏற்படும். தேவையில்லாத எரிச்சல், வாந்தி, மயக்கம் போன்ற உணர்வுகள் ஏற்படும். சில சமயம் மயக்கம்கூட வரும்.

அல்சர் வந்துவிட்டால் முதலில் குடல் புண் ஆற மருந்து தருவோம். அதன் பிறகு முறையாக உணவு எடுத்துக்கொள்வது அவசியம். புகை, மதுப் பழக்கங்களை உடனடியாகக் கைவிட்டால், அல்சர் முழுமையாக குணமாகும். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் குழைய வேக வைத்த அரிசி சாதம், கஞ்சி போன்றவற்றோடு கீரை, காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. காரம் சேர்க்காத மோர் எடுத்துக் கொள்ளலாம். எண்ணெயில் வதக்கிய, பொரித்த உணவுகள், இனிப்பு பலகாரங்கள், காரமான குழம்பு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சாப்பாட்டை ஆறு வேளையாகப் பிரித்து சாப்பிடுவது நல்லது. சரியான நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அல்சரை தவிர்ப்பதோடு, இதர லைஃப் ஸ்டைல் நோய்களிலில் இருந்தும் தப்பிக்க முடியும்!'' - நம்பிக்கையாகச் சொல்கிறார் டாக்டர் ஹரிஹரன்.

இதுவும் காரணம்

1986-ம் ஆண்டுக்கு முன்பு வரை அல்சர் வருவதற்கு ஒரே காரணம் நேரம் தவறி சாப்பிடுவதுதான்! பிறகு அல்சர் வருவதற்கு ஹெலிக்கோபேக்டர் பைலோரை என்கிற தொற்றுக் கிருமியும் காரணம் என கண்டறியப்பட்டது. அதிகம்பேருக்கு இந்த கிருமி மூலம்தான் அல்சர் பரவி வருகிறது. சிலர், 'நான் நேரத்துக்கு சரியாக சாப்பிட்டும் எனக்கு அல்சர் வந்துவிட்டது’ என்று வருந்துவதற்கான காரணம் உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.

காரணங்கள் பல..!

தலைவலி, காய்ச்சலுக்கு கண்டபடி மாத்திரைகளை எடுத்துக்கொள்வது...

ஆன்ட்டி பயாடிக் மாத்திரையை பிகாம்ப்ளக்ஸ் மாத்திரை உடன் சேர்த்து சாப்பிடாதது...

உணவைத் தவிர்த்து காபி, தேநீர் என அதிகம் பருகுவது...

பர்கர், ஃபிரைட் ரைஸ் என செரிக்கக் கடினமான உணவுகளை உண்பது...

தொடர்ந்து பீடி, சிகரெட் புகைத்தல்...

பாட்டில் பானங்களை அதிகமாகப் பருகுவது...

ஊறுகாய் உள்ளிட்ட காரமான உணவுகள் சாப்பிடுவது.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf