ரஜினிகாந்துக்கு பாதிப்பு | Actor Rajnikanth is in serious condition - it's not true |

தமிழகத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மே 13-ல் நடிகர் ரஜினி உடல்நிலைப் பற்றி தமிழ்நாடு முழுவதும் வதந்திகள் பரவின. அந்த வதந்திகளை அவருடைய மனைவி லதா ரஜினி மறுத்தார். ரஜினி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், அவர் டி.வி.யில் தேர்தல் முடிவுகளை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் லதா ரஜினி தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் ரஜினி போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.ரஜினியின் நுரையீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருடைய கால்கள் வீங்கியிருப்பதாகவும், இதற்காகவே ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

ரஜினி உடல்நிலை பற்றி மருத்துவர் நிர்வாகம் சார்பில் நேற்று ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், "புகழ்பெற்ற திரைப்பட நடிகர் ரஜினி மூச்சுக்குழாய் தொற்று கிருமி தாக்குதல் (ரெஸ்பிரேட்டரி இன்பக்ஷன்), வயிற்றில் குடல் பிரச்னைகள் ஆகியவற்றுக்காக தீவிர பரிசோதனை செய்வதற்காக, ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாக அவர் இந்த கோளாறுகளால் அவதிப்படுகிறார். அவருக்கு தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அல்லாமல், வார்டில் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவர் உடல்நிலை முன்னேறி வருகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், முழு ஓய்வு எடுக்கும்படி ஆலோசனை கூறியிருக்கிறார்கள்," என்று குறிப்பிட்டு இருந்தது.

போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரஜினி 15 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஜினியை பார்ப்பதற்காக நடிகர் விஜயகுமார் நேற்று போரூர் மருத்துவமனைக்கு வந்தார். அவர் பின்னர் கூறுகையில், "ரஜினிகாந்துக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்பதற்காகவே நான் இதுவரை அவரை வீட்டில் போய் பார்க்கவில்லை. வெளியில் அவர் உடல்நிலை பற்றி பல்வேறு விதமாக பேசப்படுவதால், ஒரு நண்பராக மருத்துவமனை போய் அவரை பார்த்தேன்.

நான் சென்ற போது, ரஜினி நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அதனால் அவரை தொந்தரவு செய்யாமல், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்திடம் உடல் நலம் விசாரித்தேன். ரஜினி நலமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். ரஜினி தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை. வார்டில் உள்ள ஒரு அறையில் சிகிச்சை பெற்று வருகிறார்," என்றார்.

ரஜினிகாந்துக்கு இந்த அளவுக்கு திடீர் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது பற்றி அவருடைய அண்ணன் சத்யநாராயணா, "ராணா படத்தில், ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார். இதற்காக, அவர் உடல் எடையை குறைப்பதற்காக, கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டார்.

இருபதே நாட்களில், பதினைந்து கிலோ எடை குறைந்தார். இதுதான் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட காரணம் என்று கருதுகிறேன்," என்று கூறினார்.'ராணா' படத்தின் டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார், "ரஜினி உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மை. ஆனால், வெளியில் பேசப்படுகிற அளவுக்கு அவர் உடல்நிலை மோசமாக இல்லை. அவர் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பி வந்து, சில நாட்கள் ஓய்வு எடுத்தபின், 'ராணா' படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.

படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்வதற்காக, நான் தாய்லாந்து மற்றும் புக்கட் தீவுக்கு சென்று வந்தேன்," என்று கூறினார்.இந்த நிலையில், தமிழக முதல்வராக ஜெயலலிதா 3வது முறை பதவியேற்கும் விழா இன்று நடைபெற்றது.முன்னதாக, இன்றும் ரஜினியின் உடல் நிலை குறித்து வதந்திகள் வெகுவாக பரவின. இதனால், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பொது மக்களும் பரபரப்புடன் விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். இதுவும் வதந்தியே என்று ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.

Thanks - Vikatan | http://new.vikatan.com

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf