2009 - 10 ஆம் ஆண்டு தொகுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கர்நாடகத்தைவிட தமிழ்நாடு அரசு முதலிடத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு 3733 டன் இயற்கை உரங்களை உற்பத்தி செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலம் 3696 டன் இயற்கை உரம் தயாரித்துள்ளது.
கேரள மாநிலம் 1937 டன்னையும், மகாராஷ்டிரா 1861 டன்னையும், மத்திய பிரதேசம் 1588 டன் இயற்கை உரங்களை தயாரித்துள்ளன.
இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் 10 முதல் 20 சதவீதம் வரை வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இயற்கை உரங்களை பயன்படுத்துவதினால் மண்ணின் தரம் அதிகரிப்பதுடன் நுன்னுயிர்கள் வளர்ச்சிக்கும் உதவுகின்றன என்று தெரியவந்துள்ளது.விவசாயிகளிடையே ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து வேளாண்மையின் மூலம் நேரடி விளக்கம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதனால் இயற்கை உர பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இயற்கை உர தயாரிப்பு நிலையங்களை ஏற்படுத்துவதற்கான நிதி ஆதாரங்கள் நபார்டு வங்கி மூலம் அளிக்கப்படுகிறது. இதற்காக ரூ.40 லட்சம் வரை நிதி உதவியை இந்த வங்கி வழங்குகிறது. இதில் 25 சதவிகிதம் மானியமாகவும் வழங்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவிக்கிறது.
No comments :
Post a Comment