6 National awards for Aadukalam |
முதன் முறையாக தேசிய விருது வாங்கியது குறித்து கருத்து தெரிவித்துள்ள தனுஷ் "இந்த செய்தியை இப்போதைக்கு என் காதில் வைத்திருக்கிறேன். சூப்பர் ஸ்டார் வீடு திரும்பியபின் என் மனதுக்கு எடுத்துச்செல்வேன்.அப்போது தான் எனக்கு சந்தோஷம். இந்த விருது கிடைத்ததற்காக என் அப்பா அம்மாவுக்கு நன்றி. எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த என் அண்ணன் செல்வராகவனுக்கு நன்றி. எனக்கு முதுகெலும்பாகவும், என் வாழ்க்கையில் பக்கபலமாகவும் இருக்கிற என் மனைவி ஐஸ்வர்யாவுக்கு நன்றி. என் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் என் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த விருதை சூப்பர் ஸ்டாருக்கு அவர் பரிபூரண குணமடைந்து வருவதற்காக அர்ப்பணிக்கிறேன். என்னை சிறந்த நடிகராக தேர்வு செய்த நடுவர் குழுவுக்கு நன்றி. என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.
Thanks : Vikatan
No comments :
Post a Comment