Dev Anand, Bollywood Veteran Dev Anand Dies

0 comments
Dev Anand Dies
Dev Anand, Died today of cardiac arrest, Dev Anand aged 88 has died today at london, Dev Anand famous for his romantic movies is a veteran actor from Bollywood. Dev Anand is an winner of padmabushan and dadasagep palge awards.

Dev Anand became famous with his films dere gar samney and manzil, Dev Anand encountered romantic relationship with suraiya in the late 40's anf Dev Anand came to the silver screen with ziddi.

Avan Ivan Movie Download: Avan Ivan(2011) Tamil Movie, Download & Watch Online Links

0 comments
Avan Ivan Movie Downlo
Avan Ivan Movie Download is on process so do please check back in this blog for more details, as Avan Ivan Movie Download is not hosted by us, we are trying to find the Avan Ivan Movie Download link and update with the latest link.

More to that if any one of you having Avan Ivan Movie Download links, do share, i can reupload it in a compressed format for Avan Ivan Movie Download to others easily download. Heard that Avan Ivan Movie Download is the movie for vishals break through same like vikram.

Will this Avan Ivan Movie Download story line as read from http://tamil.galatta.com/entertainment/review/reviewnews/n/829671076/movie/AvanIvan.html , and wait for the links here.

ஒரு பேச்சுலரின் கடைசி பக்கங்கள் | Life lessons after marriage in view of bachelor |

0 comments
கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க மச்சான்..இப்பதாண்டா எதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது..வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது.....பொண்டாட்டி முன்னாடி இப்டி சொல்லிட்டு......அவங்க kitchen  உள்ள போன உடனே,கையெடுத்து கும்புட்டு தயவு செஞ்சு அந்த தப்ப மட்டும் பண்ணி மாட்டிக்காத மச்சின்னு கெஞ்சற நண்பன்.

எவ்ளோ நிம்மதியா இருந்தேன்..கல்யாணத்த பண்ணி வெச்சு என்ன என் புருசனுக்கு அடிமையகிட்டாங்க.என் தோழி ஒருத்தி......!

தம்பி அடுத்த வருஷம் ஜூன் குள்ள கல்யாணத்த முடிசிரனும்டா..
நல்ல பொண்ணு கிடைச்சுதுன்னா விட்ற  கூடாது-னு....! என் அம்மா

டேய் கல்யாணத்துக்கு நெறைய செலவாகும்..வழக்கம் போல பெருந்தன்ம மயிரா நீங்களே பார்துகங்கப்பானு சொல்லிட்டு போய்டாத,
மரியாதைய காச சேர்த்து வை.....! என் அப்பா  
சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா...
காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ் போடலாம்னு,
 நானும் ரெண்டு வருசமா வெயிட் பன்றேனு.... சொல்லிட்டு,
மூதேவி, இதுவும் பண்ணிக்கமாட்டேங்குது... எனக்கும் பண்ணி வைக்கமாட்டேங்குது.....!
மனசுக்குள்ள முனுமுனுக்கிற - தங்கச்சி
கல்யாணம்லாம் சும்மா பிரதர்...வெத்து மேட்டரு...ஒன்னும் இல்ல,
இதுல... பார்ல சிகரெட் ஓசி வாங்குன ஒருத்தர் பண்றார் அட்வைஸ்
கல்யாணம்..கல்யாணம்...கல்யாணம் ..... 

27 வது வயசுல ஒரு பேச்சுலர  லேசா பயமுறுத்தி, அதிகமா பதட்டபடுத்தி,
கொஞ்சமா ஷாக் அடிக்க வைக்கற ஒரு வார்த்த கல்யாணம்...... 
அப்படி என்னதாங்க இருக்கு இந்த கல்யாணத்துல   
முதல் 3 மாதம்... 
திடீர்னு ஒரு நாள் ஒரு பொண்ணு போண்டாட்டிங்க்ற பேர்ல என்னோட  வீட்டுகுள்ள வருவா.......
ஒரு கூட்டமே வந்து விட்டுட்டு போகும்...., என்  வீட்லயே என்னோடவே தங்குவா......
பீரோ குள்ள என்னோட துணிய நகர்த்தி வெச்சுட்டு அவ துணிய அடுகிக்குவா.......
என்னோட பாத்ரூம்ல அவ சோப்பும் பிரஷ்-உம்  எடத்த புடிச்சுக்கும்........
அடுத்த நாள் ஆபீஸ் போகும்போது சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்கன்னு
குழைஞ்சு குழைஞ்சு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே சொல்லுவா........
ஊர்ல டம்மி பிகர் கூட மதிக்காத நம்மள இந்த புள்ளைக்கு இவ்ளோ புடிசிருகேன்னு,  நானும்  வழிஞ்சுகிட்டே சீக்கிரம் வர ஆரம்பிப்பேன்......
(இது அடிமையாகரதொட முதல் கட்டம்...)

அப்பறம் என்ன  அடிமையாக்கரதுக்கு,உண்டான பணிகள் வேகம் வேகமா கனஜோர்ல நடக்கும்.....

(அவ கூட படிச்ச வில்லிங்கல்லாம் வேற இதுக்கு ரூம் போட்டு ஐடியா குடுப்பாளுக 
மற்றொரு அழகான மாலை பொழுதுல புது பொண்டாட்டிய ஷாப்பிங் கூட்டிட்டு போவேன்.....
அது 3 வருசமா வாங்க நெனச்சு வாங்காம இருந்த எல்லாத்தையும் அப்பதான் வாங்கும்....
அவ வாங்கற நெய்ல் பாளிஷ்க்கும் பாடி ஸ்ப்ரெயெர்க்கும் நான் தான்  தெண்டம் அழுகனும்...கடுப்பாதான் இருக்கும்.....!என்ன பண்றது...பொண்டாட்டியா  போய்ட்டா.......
ஒவ்வொரு சினுங்களுக்கும் கிரெடிட் கார்ட் கிழிய கிழிய தேய் தேய்னு தேய்ப்பேன்.....
பில்லு எகிர்றது பார்த்து மனசு பதறினாலும் உதடு வேற என்ன வேணும் என் செல்லகுட்டிக்குன்னு கேக்கும்.....
வீட்டுக்கு விருந்தாடிங்க்ற பேர்ல வந்து டேரா போடுற  அவங்கப்பன் விருமாண்டி கிட்ட கூட பாசமா நடந்துக்குவேன்.....
(எல்லாம் நடிப்புதேன்..எந்த ஊர்ல மாப்பிள்ளைக்கு அவன் மாமனார புடிச்சிருக்கு...)
கொஞ்சம் கொஞ்சமா நீங்க-ங்கறது  நீ யாயிட்டு வரும்....
கட் பண்ணினா ஆறு மாசம் ஓடிடும்  

அதுக்கப்றம் எங்க ஒய் இருக்கு எனக்கு வாழ்க்கை...... அடிமை ஒய் நான்......

பிரென்ட் ரூம்ல போய் விடிய விடிய தண்ணியடிச்சிட்டு கத பேசுற சுகம் அதுக்கப்றம் கனவாவே போய்டும்....
எங்க போறோம்,எதுக்கு போறோம்னு தெரியாம எங்கெங்கயோ போன தருணங்கள் மனசுக்குள்ள வெறும் நினைவுகளா மட்டுமே இருக்கும்.....
எந்த பொண்ண பார்த்தாலும் நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளோ,
அப்டி இருப்பாலோங்க்ற அந்த எதிர்பார்ப்பு  சுத்தமா இருக்காது.....
( அதான் எழவு வீட்லயே  இருக்குதே )
செகண்ட் ஷோ சினிமா கட் ஆகும்....
குஷி ஆனா அடிக்கற பீர் கட் ஆகும்......
வீட்டுக்குள்ள அடிக்கற தம் கட் ஆகும்...
நிம்மதியா செலவு பண்ற சுதந்திரம் கட் ஆகும்....
என்ன கொடுமைப்பா இது
இதுக்குதான் இந்த கருமம் புடிச்ச கல்யாணத்த வேண்டாம்-னு சொல்றேன்.....
வாழ்க்கைல சந்தோசமான தருணம் bachelor life மட்டும் தான்-னு தோணுது....
நீங்க என்ன நெனைக்கறீங்க.....
இப்படிக்கு bachelor life ended ஆகி ஒரு வ‌ருட‌ம் ஆன‌ ஒருவ‌ன்

National award is dedicated to Rajnikhanth - Danush | " தேசிய விருது - ரஜினிக்கு அர்ப்பணம் " : தனுஷ் | Aadukalam got 6 National award's |

0 comments
6 National awards for
Aadukalam
58வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்திற்கு 6 விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை ஆசிரியர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடன இயக்குனர் உள்ளிட்ட விருதுகள் கிடைத்தன.

முதன் முறையாக தேசிய விருது வாங்கியது குறித்து கருத்து தெரிவித்துள்ள தனுஷ் "இந்த செய்தியை இப்போதைக்கு என் காதில் வைத்திருக்கிறேன். சூப்பர் ஸ்டார் வீடு திரும்பியபின் என் மனதுக்கு எடுத்துச்செல்வேன்.அப்போது தான் எனக்கு சந்தோஷம். இந்த விருது கிடைத்ததற்காக என் அப்பா அம்மாவுக்கு நன்றி. எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த என் அண்ணன் செல்வராகவனுக்கு நன்றி. எனக்கு முதுகெலும்பாகவும், என் வாழ்க்கையில் பக்கபலமாகவும் இருக்கிற என் மனைவி ஐஸ்வர்யாவுக்கு நன்றி. என் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் என் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த விருதை சூப்பர் ஸ்டாருக்கு அவர் பரிபூரண குணமடைந்து வருவதற்காக அர்ப்பணிக்கிறேன். என்னை சிறந்த நடிகராக தேர்வு செய்த நடுவர் குழுவுக்கு நன்றி. என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.

Thanks : Vikatan

Mankatha [2011] Songs Free Download | Ajith Vilayadu Mankatha Song Download | Mankatha Song |

0 comments

Mankatha is the latest tamil movie of the year 2011 by ajithkumar with a single song already released, the film Mankatha was directed by sarojafame venkat prabhu and the song and music was done by yuvan, more to that actor ajith has sung a song on Mankatha which is starting like aadipparu mankatha , more to that the MP3 songs of the film Mankatha will be released soon.

Here are the details of the Dhayanidhi and Rathnavel produced tamil lates film Mankatha, the film includes the veteron actor arjun, and the other prominent actors of this tamil movie mankatha may include Mahat Raghavendra,Ashwin Kakumanu,Andrea Jeremiah,Anjali,Lakshmi Rai.



Here is the Tamil movie Mankatha Details:
Movie Name: Mankatha.
Cast: Ajith Kumar, Arjun, Trisha Krishnan , Vaibhav, Premji Amaren
Directed By: Venkat Prabhu
Music by: Yuvan Shankar Raja
Produced by: Dhayanidhi Alagiri, Vivek Rathnavel.

More to your idea, here is the Mp3 Song details of this tamil movie,

No.TitleLyricsSinger(s)Length
1"Vilaiyaadu Mankatha"  Gangai Amaran, Sucharitha (Hindi),Yuvan Shankar Raja (English)Yuvan Shankar Raja, Ranjith, Sucharita, Anita, Premgi Amaren6:02
2"Machi Open The Bottle"  
3"Vaada Bin Lada"  Krish, Suchitra
9"Theme Music"  ——

Watch Mankatha Trailor HD Online here below,



This tamil movie songs may include a theme music, clup mix and a combined vocal of ilaiyaraja and yuvan sankar raja.Vilayadu mankatha was released earliar was a promotional song from mankatha movie.Please bookmark and visit us later for the tamil mp3 songs of this movie to download.

Narthaki tamil movie review | நர்த்தகி விமர்சனம்

0 comments
 'ஊரோரம் புளியமரம்’ வகையறாப் பாடல்களுக்கு கேலிப் பொருளாக மட்டுமே பயன்பட்டு வந்த திருநங்கை சமூகத்தைப்பற்றி நேர்மறையாகப் பேசுகிறாள் இந்த 'நர்த்தகி’. வணிக  நோக்கம் தவிர்த்த, இந்த முயற்சிக்காகவே இயக்குநர் விஜயபத்மாவுக்கும் தயாரிப்பாளர் கீதாவுக்கும் வாழ்த்துக்கள்!

தன் ஒரே மகன் தன்னைப்போல சிலம்பு வீரனாக வளர வேண்டும் என்று நினைக்கும் தந்தை, கணவன் காட்டுவதே உலகம் என்று தனது ஆசாபாசங்களைக்கூட புதைத்துக்கொண்டு வாழும் அம்மா, விவரம் புரிந்த வயதில் இருந்தே தன்னைக் கணவனாக மனதில் பதித்துக்கொண்டு வாழும் மாமன் மகள்... இப்படி ஒரு சூழலில், ஒருவன் தன்னைப் பெண்ணாக உணர்ந்தால்?

சிறுவன் சுப்பு மனதளவில் தன்னைப் பெண்ணாக உணர்கிறான். பதின் பருவத்தில் வீட்டில் இருந்து துரத்தப்பட்டு, மும்பைக்குச் சென்று திருநங்கையாக - கல்கியாக மாறுகிறான். கல்கி, திருநங்கைகள் எதிர்கொள்ளும் துயரங்களுக்கு நடுவில், தன்னுடைய வாழ்வை எப்படி அர்த்தம் உள்ளதாக மாற்றிக்கொள்கிறாள் என்பதே கதை.

சமூகம் கவனிக்க மறந்த அல்லது மறுக்கும் ஒரு தளமே, கதைக் களம். ஆனால், ஆவண நேர்த்தியும் இல்லாமல், கமர்ஷியல் சேர்த்தியும் இல்லாமல் திண்டாடுகிறது திரைக்கதை!

சின்ன வயது கல்கியாக வரும் அபிஷேக், பதின் பருவ அஸ்வின், இள வயது ஸ்வாதி, கல்கி என ஒவ்வொருவரிடமும் வருங்கால திருநங்கைக்கான பரிணாம சமிக்ஞைகள் கச்சிதம். அதிலும் அபிஷேக்கின் விழி நடனமும், இடை வளைவுகளும் குழந்தைக் குறும்பாக வசீகரிக்கின்றன!

'திருநங்கை என்பவர் யார், திருநங்கை என்று தன்னை ஒருவர் உணரும் சமயம் சமூகம் அவர்களை எப்படி எதிர்கொள்கிறது, பால்மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?’ போன்ற பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறாள் நர்த்தகி. (இடையில் ஏன் பதின்பருவக் கல்கிக்கு உணர்ச்சியைத் தூண்டும் அந்த கவர்ச்சிப் பாடல்?)

சமூக அங்கீகாரத்துக்காகத்தான் திருநங்கை என்ற அடையாளம் தேடும் அவர்களின் தேடுதலை உண்மைக்கு மிக அருகில் படம் பிடித்திருக்கிறார்கள்.  

'உடலை வெறுத்து சுமக்கும் வலி, உலகில் யாருக்கும் புரியாது...’ போன்ற வரிகளில் திருநங்கைகளின் வலியைப் படம் பிடிக்கிறார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். ஜி.வி.பிரகாஷின் இசை, படத்துக்கு நல்லது, கெட்டது எதுவும் செய்யாமல் கடந்து செல்கிறது.

வெடவெட, நெடுநெடு அஸ்வின் திருநங்கை கல்கியாக வரும்போது உயரம் குறைந்துவிடுகிறாரே! கல்கிக்கு ஏற்படும் காதல் தோல்விக்கு அப்படி ஓர் அசட்டுக் காரணத்தையா கற்பிக்க வேண்டும்? முக்கியக் கதாபாத்திரங்களைத் தவிர, பிறரிடம் அமெச்சூர் நடிப்பு.  

சமூகத்தின் சராசரி மதிப்பீடுகளில் தங்களை இருத்திக்கொள்ள விரும்பாத திருநங்கைகளைப்பற்றிய படத்துக்கு, மதிப்பெண் அளவீடு வேண்டாமே!

திருநங்கைகளின் உலகத்தைப் பதிவு செய்ததற்காகவும் அவர்களைப்பற்றி ஒரு புரிதலை உருவாக்கி இருப்பதற்காகவும் 'நர்த்தகி’யை வரவேற்கலாம்!

Alagarsamyin Kuthirai Review | அழகர்சாமியின் குதிரை விமர்சனம்

0 comments
அப்புக்குட்டி போல ஒரு ஹீரோவை முன்வைத்த ரசனைக்கும் துணிச்சலுக்கும் முதல் பாராட்டுக்கள். விகடனில் வெளிவந்த பாஸ்கர் சக்தியின் 'சற்றே பெரிய சிறுகதை'யை அதே பெயரில் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.
ஒரு கிராமம், அதன் வெள்ளந்தி - வில்லங்க மாந்தர்கள், ஒரு குதிரை, ஒரு குதிரைக்காரன்... இவர்களும் இவர்களுக்கு இடையிலான சம்பவங்களும்தான் படம்.
'குதிரை'யைக் காணோம் என்று பிரசிடென்ட் தலைமையில் ஊரின் தலைக்கட்டுகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் காட்சியை, வாசிப்பு சுவாரஸ்யம் குறையாத திரை அனுபவம் ஆக்கியதில் இருக்கிறது இயக்குநரின் சாமர்த்தியம்!  
தன்மையான முரட்டுத்தனம் காட்டும் ஊர் பிரசிடென்ட், நாத்திக க்ரூப் இளந்தாரிகள், மலையாளக் கோடங்கியின் உதார், கிராமப் பஞ்சாயத்தில் அந்து நொந்து நூலாகும் இன்ஸ்பெக்டர், மாலை போட்டு இருக்கும் சமயமும் 'சுத்தபத்தம்' காக்காத மைனர், உளவு பார்க்க வந்து 'மினி சாமியார்' ஆகும் சூரி எனப் படம் நெடுக அடுக்கப்பட்டு இருக்கும் குட்டிக் கதாபாத்திரங்கள் வசீகரம்.
கொடைக்கானல் ஏரியில் குதிரை ஓட்டிக்கொண்டு இருந்தவரை நடிக்க வைத்ததுபோல, அப்புக் குட்டியிடம்  அசல் குதிரைக்கார உடல்மொழி! மலையாளக் கோடங்கி வரவால் வெகுண்டெழுந்து ஊறுகாய் எலுமிச்சம் பழங்களுக்கு குங்குமம் பூசி, பொண்டாட்டி கையால் பூசை வாங்கும் உள்ளூர் கோடங்கியின் ராவடிகள் கலீர் கலகலப்பு!  
'ஸ்டார் அட்ராக்ஷன்' இல்லாத படத்தின் நட்சத்திரக் கவர்ச்சி, 'கோழியைக் களவாண்டு தின்னும் தொத்தலாத்தானே இருக்கான்!' போன்ற பாஸ்கர் சக்தியின் கிண்டல், நக்கல், எள்ளல், கேலி தொனிக்கும் வசனங்கள்தான்.  'குதிக்கிற குதிக்கிற...' பாடலிலும், பின்னணி இசையிலும் மலைவாசஸ்தல ட்ரிப் அடித்த உணர்வை உண்டாக்குகிறார் இளையராஜா. ஒளிப்பதிவு, அறிமுகம் 'தேனி' ஈஸ்வர். ஜன்னல் வழிக் காட்சியாக கிராமத்தின் உயிர்ப்பைப் பிரதிபலிக்கும் கேமரா, அந்தரத்தில் மிதந்து, தவழ்ந்து மலைக் கிராமத்தின் அழகைக் கொள்ளைகொள்கிறது.
அப்புக்குட்டிக்கும் குதிரைக்கும் இடையிலான பிணைப்பு அழுத்தமாகப் பதியாததால், அவர் குதிரைக்காக அழுது புரள்வது அத்தனை தாக்கத்தை உண்டாக்கவில்லை. சரண்யா மோகனுக்கு அப்புக்குட்டி மீது தீராக் காதல் ஏற்படுவதற்கான காரணமும் ம்ஹூம். ஊரில் அதீத வறட்சி என்பதைக் காட்சிகளில் காட்டவே இல்லை. குதிரை காணாமல் போனதின் படபடப்பும், யார் அந்தத் திருடன் எனும் பரபரப்பும்... அழுத்தமாக இல்லை. புரோட்டாவின் விலையை வைத்து கதை எண்பதுகளில் நடக்கிறதுபோல என்று அனுமானிக்க வேண்டி இருக்கிறது. ஆனால், இப்போதும் இப்படியான கிராமங்களும் மூட நம்பிக்கைகளும் இருக்க, ஏன் தெளிவு இல்லாத எண்பதுகள் தொனி?
Thanks : Vikatan

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் | update on 19.05.2011

0 comments
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் மோசமடைந்ததை அடுத்து, தீவிரசிகிச்சைப் பிரிவில்சேர்க்கப்பட்டார்.உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், கடந்த 13ம்தேதியன்று போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனு ம திக்கப் பட்டார்.தொடர்ந்து அவருக்குசிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், அவரதுஉடல் நிலையில்முன்னேற்றம் ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று அவர்திடீரென தீவிரசிகிச்சைக்குப் பிரிவுக்குமாற்றப்பட்டுள்ளார்.இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளஅறிக்கை:நடிகர் ரஜினிகாந்திற்குசுவாசத்தை மேம்படுத்துவதற்காக, அவர் தீவிரசிகிச்சைப் பிரிவுக்குமாற்றப்பட்டுள்ளார். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.அவருக்கு அளிக்கப்பட்டுவரும் பல்வேறு தரப்பட்டசிகிச்சைகளின் மூலம்அவரது உடல் நிலையில்முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது.அவருக்கு சிகிச்சைஅளிக்கும் மருத்துவர்கள்குழு, அவரது உடல்நிலையை தொடர்ந்து,உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

Thanks : Dinamalar
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf