அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக இன்று பொறுப்பேற்றார். அவருடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 33 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
முதல்வர் உள்பட அதிமுக அரசின் 34 அமைச்சர்களில் 23 பேர் புதுமுகங்கள். இவர்களுக்கான துறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
1. ஜெயலலிதா - முதல்வர் - பொதுத்துறை, அகில இந்திய பணிகள், இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள், லஞ்ச ஒழிப்பு, காவல்துறை, உள்துறை.
2. ஓ.பன்னீர்செல்வம் - நிதி, திட்டம், சட்டசபை, தேர்தல்கள், பாஸ்போர்ட்
3. கே.ஏ.செங்கோட்டையன் - விவசாயம், விவசாய பொறியியல், விவசாய பணி, கூட்டுறவுகள், தோட்டக்கலை, சர்க்கரை துறை மற்றும் தரிசு நில மேம்பாடு.
4. நத்தம் ஆர்.விஸ்வநாதன் - மின்சாரம், மதுவிலக்கு, கலால், மரபுசாரா எரிசக்தி, சர்க்கரைப்பாகு
5. கே.பி.முனுசாமி - நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்பு திட்டங்கள், ஊரக கடன், நகர்ப்புறம் மற்றும் ஊரக குடிநீர் வழங்கல்
6. சி.சண்முகவேலு - தொழில்கள், இரும்பு கட்டுப்பாடு, சுரங்கம், தாது வளம் மற்றும் சிறப்பு முயற்சிகள்.
7. ஆர்.வைத்திலிங்கம் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, ஊரக வீட்டு வசதி மேம்பாடு, குடிசைமாற்று வாரியம், நகர திட்டமிடல், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம்.
8. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி - உணவு, குடிநீர் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாடு.
9. சொ.கருப்பசாமி - கால்நடை, பால் மற்றும் பால்வள மேம்பாடு.
10. பி.பழனியப்பன் - உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மின்னணு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்.
11. சி.வி.சண்முகம் - பள்ளிக்கல்வி, தொல்லியல்.
12. செல்லூர் கே.ராஜூ - கூட்டுறவு, புள்ளியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்.
13. கே.டி.பச்சைமால் - வனம் மற்றும் சின்கோனா.
14. எடப்பாடி கே.பழனிச்சாமி - நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்.
15. எஸ்.பி.சண்முகநாதன் - இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் கலாசாரம்.
16. கே.வி.ராமலிங்கம் - பொதுப்பணி, நீர் பாசனம், திட்டப்பணிகள்.
17. எஸ்.பி.வேலுமணி - சிறப்பு திட்ட அமலாக்கம், தேர்தல் வாக்குறுதிகள் அமலாக்கம்.
18. டி.கே.எம்.சின்னய்யா - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், வெளிநாடு வாழ் இந்தியர், அகதிகள்.
19. எம்.சி.சம்பத் - ஊரக தொழில்கள், குடிசை தொழில்கள், சிறு தொழில்கள்.
20. பி.தங்கமணி - வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை கலெக்டர், எடையளவு, கடன் நிவாரணம், சீட்டுகள், கம்பெனிகள் பதிவு.
21. ஜி.செந்தமிழன் - செய்தி மற்றும் விளம்பரம், திரைப்பட தொழில் நுட்பம், சினிமா சட்டம், எழுது பொருள் அச்சு மற்றும் அரசு அச்சகம்.
22. எஸ்.கோகுலஇந்திரா - வணிகவரிகள், பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம்.
23. செல்வி ராமஜெயம் - சமூக நலம், மகளிர் மற்றும் குழந்தைகள் நலம், சத்துணவு திட்டம், அநாதைகள் நலன், சீர்படுத்தும் பணி நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டம், பிச்சைக்கார இல்லங்கள், மாற்று திறனாளிகள் நலன், சமூக சீர்திருத்தம்.
24. பி.வி.ரமணா - கைத்தறி மற்றும் ஜவுளி, காதி மற்றும் கிராம துணிகள் வாரியம், பூமி தானம், கிராம தானம்.
25. ஆர்.பி.உதயகுமார் - தகவல் தொழில் நுட்பம்.
26. என்.சுப்பிரமணியன் - ஆதி திராவிடர் நலன், பழங்குடியினர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள்.
27. வி.செந்தில் பாலாஜி - போக்குவரத்து, தேசியமயமாக்கப்பட்ட போக்குவரத்து, மோட்டார் வாகன சட்டம்.
28. மரியம் பிச்சை - சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரியம்.
29. கே.ஏ.ஜெயபால் - மீன்வளம்.
30. இ.சுப்பையா - சட்டம் மற்றும் நீதிமன்றங்கள், சிறைச்சாலை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்.
31. புத்திசந்திரன் - சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டு கழகம்.
32. சி.த.செல்லபாண்டியன் - தொழிலாளர், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, செய்தித்தாள் கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு.
33. வி.எஸ்.விஜய் - சுகாதாரம், மருத்துவ கல்வி, குடும்பநலம்.
34. என்.ஆர்.சிவபதி - விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்.
No comments :
Post a Comment