Jayalalithaa to meet Narendra Modi: ஜெயலலிதா, வரும், 3ம் தேதி, டில்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்

0 comments

J Jayalalithaa 2014
Jayalalithaa

முதல்வர் ஜெயலலிதா, வரும், 3ம் தேதி, டில்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அப்போது, தமிழக திட்டங்களுக்கு, சிறப்பு முன்னுரிமை அளிக்கும்படி, கோரிக்கை மனு கொடுக்க உள்ளார். எனவே, தமிழக திட்டங்களுக்கு சிறப்பு முன்னுரிமை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் ஜெயலலிதா, நெருங்கிய நண்பர்கள். பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி ஏற்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.

தனித்து போட்டி:

ஆனால், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 40 தொகுதிகளிலும், தனித்து போட்டியிடும் என, ஜெயலலிதா அறிவித்தார். எனவே, பா.ஜ., பிற கட்சிகளுடன் இணைந்து, தனி அணியாக களம் இறங்கியது.தனித்து போட்டியிட்டாலும், தேர்தல் பிரசாரத்தின் துவக்கத்தில், முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., மற்றும் காங்கிரசை மட்டும் சாடினார். பா.ஜ., மற்றும் அதன் 
கூட்டணி கட்சிகள் குறித்து விமர்சிக்கவில்லை.

இதனால், தேர்தலுக்கு பிறகு, பா.ஜ., கூட்டணிக்கு, அ.தி.மு.க., ஆதரவு அளிக்கும் என்ற எண்ணம் மக்களிடம் பரவியது. தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தில், தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்ட நரேந்திர மோடி, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., மாறி மாறி ஆட்சிக்கு வந்தும், தமிழகத்திற்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என, விமர்சித்தார்.இதற்கு பதிலடி கொடுத்த ஜெயலலிதா, நிர்வாகத்தில், மோடியை விட, இந்த லேடி தான் சிறந்தவர் என முழங்கினார். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே, இடைவெளி அதிகரித்தது.

ஜெயலலிதா அதிர்ச்சி:

தேர்தல் முடிவில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது. மாநில கட்சிகள் உதவியுடன் பிரதமராகலாம் என, ஜெயலலிதா திட்டமிட்டார். அந்த வாய்ப்பு வராவிட்டால், பா.ஜ.,விற்கு ஆதரவு அளித்து, மத்திய அரசில் அங்கம் வகிக்கலாம் என, முடிவு செய்தார். இதனால், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டவர்கள், அமைச்சர் கனவில் மிதந்தனர். ஆனால், தேர்தல் முடிவு வேறு விதமாக அமைந்தது. பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன், ஆட்சியைப் பிடித்தது.

தமிழகத்தில், 37 இடங்களை கைப்பற்றியும், மத்திய அமைச்சரவையில், இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டதும், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்தனர்; முதல்வர், அப்செட்டானார். அ.தி.மு.க.,வினரின் மத்திய அமைச்சர் கனவு தகர்ந்தது.அதன் பிறகு, பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடிக்கு, முதல்வர் வாழ்த்து செய்தி அனுப்பினார். 

அதில், மத்திய அரசு, தமிழக அரசுடன் நல்லுறவு பேண வேண்டும் என்றார். அதற்கு நன்றி தெரிவித்த நரேந்திர மோடி, மத்திய அரசு, மாநில அரசுடன் நல்லுறவு பேணும் என, உறுதி அளித்தார். இதனால், மத்திய அரசுடன் இணக்கமான சூழல் ஏற்படும் என, அ.தி.மு.க.,வினர் நம்பினர்; அதிகாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மோதல்:

கடந்த முறை, மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசுடன், ஜெயலலிதா மோதல் போக்கை கடைபிடித்தார். இதனால், தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் பாதிப்படைந்தன; நிதி ஒதுக்கீடு குறைந்தது.இந்நிலை மாற, மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும் என, அதிகாரிகள் விரும்பினர். 

அதற்கேற்ப பா.ஜ., ஆட்சி அமைந்ததும், மகிழ்ச்சி அடைந்தனர்.மத்திய அரசுடனான உறவை பலப்படுத்தும் வகையில், நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில், ஜெயலலிதா பங்கேற்பார் என, எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்ப்பு:

ஆனால், நரேந்திர மோடி பதவியேற்பு விழாவிற்கு, சார்க் நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். அதை ஏற்று, இலங்கை அதிபர் ராஜபக்?ஷே உட்பட பலநாட்டு தலைவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.ராஜபக்?ஷே வருகைக்கு, தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. முதல்வர் ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்து, காட்டமாக அறிக்கை விடுத்தார்.அதைத் தொடர்ந்து, அவர், பதவியேற்பு விழாவிற்குசெல்லவில்லை; அ.தி.மு.க., சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால், மீண்டும் இடைவெளி உருவானது.இதை குறைக்கும் வகையில், அடுத்த மாதம், 3ம் தேதி, டில்லி சென்று பிரதமரை சந்திக்க, முதல்வர் முடிவு செய்துள்ளார். 

டில்லியில், பிரதமர் அலுவலகத்தில் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகளை செய்யும்படி, கோரிக்கை மனு கொடுக்க உள்ளார் ஜெயலலிதா. 

மத்திய அரசு உதவி இல்லாததால், தமிழகத்தில் முடங்கியுள்ள திட்டங்கள் குறித்தும் விளக்க உள்ளார்.பிரதமரை சந்திக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்திருப்பது, அ.தி.மு.க., வினரிடம் மட்டுமின்றி, அதிகாரிகளிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு, நரேந்திர மோடி உதவுவார் என்று நம்புகின்றனர்.

முதல்வர் Narendra Modi முன்வைக்கும் கோரிக்கைகள்:

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்திக் கொள்ள, சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதை கண்காணிக்க, மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழக பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், மத்திய அரசின் பிரதிநிதி நியமிக்கப்படவில்லை; அவரை விரைவில் நியமிக்க வேண்டும்.

தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடை, அதிகரிக்க வேண்டும்.

தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

ரயில்வே திட்டங்களுக்கு, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்த உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியப் பொருளாதாரம்: மோடி இதை சரி செய்வார்

0 comments
மனித வாழ்வுக்கு  அடிப்படையாக விளங்குவது  பொருளாதாரமே ஆகும்.  எனவே நாட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்கும், முன்னேற்றத்துக்கும் ஏதுவான  சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுப்பது அரசின் தலையாய கடமையாகிறது. மேலும் அதற்குத் தேவையான அடித்தளங்களை அமைத்து, பொருத்தமான கொள்கைகளை வகுத்துக் கொடுப்பது ஒவ்வொரு அரசும் செய்ய வேண்டிய  அத்தியாவசியப் பணியாகும்.

இந்தியப் பொருளாதாரத்துக்கென ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்த சாஸ்திரத்தில், பொருளாதாரம் வலிமையாக இருக்க வேண்டியது ஒரு நாட்டுக்கு எவ்வளவு அவசியம், பொருளாதாரம் நன்கு செயல்படுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம்  தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.Indian economy



காலனி ஆதிக்கக் காலத்தில் தான் இந்தியாஉள்ளிட்ட பல பொருளாதாரங்கள் பெரும் சிதைவுகளுக்கு உள்ளாயின.  எனவே பத்தொன்பதாவது நூற்றாண்டிலேயே  இந்தியப் பொருளாதாரம் பெருமளவு நசிந்து போனது. அதனால் சுதந்திரம்  வாங்கும் முன்னரே  மிகவும் ஏழை நாடாக ஆகியிருந்தது.

சுதந்திரத்துக்குப் பின்னர் கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி மக்கள் கடுமையாக உழைக்கத் தொடங்கினர். பலவிதமான சிரமங்களுக்கிடையிலும் முடிந்த வரை அதிக அளவில் சேமிப்புகளை மேற்கொண்டனர். வெவ்வேறு  புதிய தொழில்களில் நுழைந்தனர்.

இந்தியக் கலாசாரத்தில் நமது நாட்டுக்கெனப் பல தனித்தன்மைகள் உள்ளன. அவையே பொருளாதார முன்னேற்றத்துக்கு ஏதுவாக அமைகின்றன. நம்முடைய குடும்ப அமைப்பு, எளிய வாழ்க்கை முறை, சேமிக்கும் குணம், உறவுகள் சார்ந்த வாழ்க்கை,  தொழில் முனையும் தன்மை எனப் பாரம்பரியமான குணங்கள் பலவும் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவும் வகையிலேயே  அமைந்துள்ளன.

இந்தத் தன்மைகளால் மக்கள் சுய கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து, தங்களின் குடும்பங்கள் முன்னேற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். அதனால் நாட்டின் சேமிப்புகள் மொத்த பொருளாதார உற்பத்தியில்  கடந்த சில வருடங்களாக முப்பது விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்து வருகின்றன. சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்கின்ற உந்துதலால், மக்கள் பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.  எனவே உலகின் பணக்கார நாடுகளை விட சொந்தத் தொழில் செய்பவர்கள் நமது நாட்டில் தான் மிக அதிகமாக உள்ளனர்.

இந்தியாவில் எட்டரை கோடி பேர் தொழில் முனைவோராக உள்ளதாக லண்டன் மேலாண்மை நிறுவனம்  சொல்கிறது.  இது உலக அளவில் அதிகமானதாகும்.  அப்படித் தான் நாடு முழுவதும் பல விதமான சிறு, குறு மட்டும் நடுத்தரத் தொழில்கள் பரவிக் கிடக்கின்றன. அவை பெரும்பாலும் சாதாரண மக்களால் ஆரம்பிக்கப்பட்டு, அரசு மற்றும் நிதி நிறுவனங்களின் உதவிகள் அதிகமின்றி நடத்தப்படுபவை.

அதனால் தான் அரசுகளின் அணுகுமுறைகளிலும் செயல்பாடுகளிலும் பலவிதமான குறைபாடுகள் இருந்த போதும், இந்தியப் பொருளாதாரம் சமூகங்களால் பெருமளவு முன்னெடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் பலன்களைப் பெறும் வகையில் நாட்டுக்குப் பொருத்தமான கொள்கைகளை அரசாங்கங்கள்  வகுக்கத் தவறிவரும் போதும், நாடு முன்னோக்கிச் சென்று கொண்டுள்ளது. ஆகையால் சுதந்திரம் பெற்று ஒரு அறுபது வருட காலத்தில் இந்தியா உலக அளவில் ஒரு முன்னணிப் பொருளாதாரமாக மாறியது. மேலும் எதிர்காலத்தில் உலக அளவில் மிக அதிகமாக வளருவதற்கு வாய்ப்புகள் நிறைந்த இரண்டு நாடுகளில் ஒன்றாக இருக்கும் என நிபுணர்களால் ஒருமனதாகக் கணிக்கப்படுகிறது.

சென்ற 2008 ஆம் ஆண்டு மேற்கு நாடுகளில் தோன்றிய நிதி நெருக்கடி, பின்னர் உலகப் பொருளாதார நெருக்கடியாகப் பரிணமித்தது.  அதனால் உலகின் மிக வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளிட்ட  பல பகுதிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. அவற்றில் பல நாடுகள் இன்று வரைக்கும் சிரமங்களிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியாமல் தவித்துக் கொண்டுள்ளன. உலகின் பல நாடுகளையும் சிரமப்படுத்திய அந்த நெருக்கடிகளால் அதிக   பாதிப்புகள் இல்லாமல்  செயல்பட்டு வந்த நாடுகளில் முக்கியமானதாக இந்தியா உள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தின் செயல்பாடுகள் இருபத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதலே உலகின் கவனத்தை அதிகமாக ஈர்க்கத் தொடங்கின. இந்தியாவைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள மேற்கத்திய நிபுணர்கள், உலகளாவிய ஆய்வு நிறுவனங்கள் , சர்வதேச அளவில் புகழ் பெற்ற  பல்கலைக்கழகங்கள் எனப் பல பிரிவினரும் முயற்சிகளை  மேற்கொண்டனர். அதனால் இந்தியப் பொருளாதாரம், அதன் வலிமைகள், அவற்றால்  நாட்டுக்குள்ள வாய்ப்புக்கள் ஆகியவை பற்றி விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. எனவே சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரம் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.

அந்தக் காலகட்டங்களில் இந்தியத் தொழில் நிறுவனங்கள் உலக அளவில் பங்கு பெறுவதும் அதிகரித்தது. அதிகம் படிக்காத மக்களால் நடத்தப்படும் திருப்பூர்,  சூரத் போன்ற பல இந்தியத் தொழில் மையங்கள் உலக அளவில் ஏற்றுமதியை அதிகப்படுத்தி நாட்டுக்குப் பெயர் சேர்த்தன. கூடவே அமெரிக்காவின் கணினித்  துறையில் இந்திய இளைஞர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உலகின் கவனத்தை ஈர்த்தனர்.

அப்போதிருந்த வாஜ்பாய் அரசு  'தங்க நாற்கரச் சாலை'  போன்ற திட்டங்கள் மூலம் கட்டுமானத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆகையால் வேலைவாய்ப்புக்கள் அதிகரித்தன. பொருளாதாரச் செயல்பாடுகள் தீவிரமடைந்தன. அரசுக் கணக்கில் வழக்கமாக வருடாவருடம் தொடர்ந்து வரும் நடப்புக் கணக்கு பற்றாக்குறைக்குப் பதிலாக, 1970களுக்குப் பின்  முதன்முறையாக,  2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் உபரித்தொகை ஏற்பட்டது. எனவே சுதந்திரத்துக்கு அப்புறம் முதல்தடவையாக நாட்டின் பொருளாதாரம் குறித்து பெரிய நம்பிக்கையும் பெருமித உணர்வுகளும் ஏற்படத் தொடங்கின.

பொருளாதார வளர்ச்சி விகிதம் சராசரியாக எட்டு விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்தது. வெவ்வேறு மட்டத்திலும் தொழில் செய்தவர்களுக்கு மேலும் வளர புதிய வாய்ப்புகள் தென்பட்டன. சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரம் குறித்து உலகின் பல இடங்களில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. கல்லூரி, பல்கலைக் கழகங்களில் படித்துக் கொண்டிருந்த   இளைஞர்களுக்கு  வாய்ப்புகள் பெருகி எதிர்காலம் குறித்து எப்போதுமில்லாத உற்சாகம் தோன்றியது.Indian economy3

அதனால் இந்தியப் பொருளாதாரம் ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரித்து உலக அளவில் முதல் நான்கு இடங்களில் ஒன்றாக வருமளவு வேகமாகச் சென்றது.  தங்களின் பொருளாதார வழிமுறைகள் தான் மிகவும் உயர்வானது என மார்தட்டி வந்த பணக்கார நாடுகள் எல்லாம் இந்தியாவின் செயல்பாடுகளைப் பற்றி ஆச்சரியமாகப் பேச  ஆரம்பித்தன. எனவே சர்வதேச அரங்கில் இந்தியாவை ஒதுக்கி விட்டு எந்த நாடும் உலகப் பொருளாதாரம் குறித்துப் பேச முடியாத சூழ்நிலை  உருவானது.

ஆனால் மிகவும் துரதிர்ஷ்டவசமாக,  இதுவரை பத்தாண்டுகளாக ஆண்ட காங்கிரஸ் கூட்டணி அரசின் கைங்கர்யத்தால்,  கடந்த சில ஆண்டுகளாக நிலைமை பெருமளவு மாறி வருகிறது. அரசு மட்டங்களில் கொள்கைகளை வகுப்பதில்  பெரும் தவறுகள் நடைபெற்று வருகின்றன. வயிற்றுக்கு உணவளிக்கும் விவசாயிகள் வருடாவருடம் ஆயிரக் கணக்கில் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகி விட்டது. மேலும் விவசாயத் துறையை விட்டு  லட்சக் கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்களைக் கொண்டுள்ள நமது தேசத்தில், விவசாயம் நசிந்து போனால் நாடுஎப்படி சுயசார்புடன் செயல்பட முடியும் என்பது குறித்து அரசு யோசித்ததாகக் கூடத் தெரியவில்லை.

அதிகம் பேருக்கு வாய்ப்புகளை அளிக்கக் கூடிய சிறு தொழில்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றன. இந்தியாவின் சில்லறை வணிகம் என்பது  சாதாரண மக்களால் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் நடத்தப்பட்டு மொத்த பொருளாதார உற்பத்தியில் சுமார் 14 விழுக்காடு அளவு பங்களிக்கக் கூடிய மிக முக்கியமான துறை. அதில் சுமார் நான்கு கோடி மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் எந்தவித அடிப்படை நியாயமும் இல்லாமல் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து பலன் பெறுவதற்காக அது திறந்து விடப்பட்டிருக்கிறது. உலகின் பல பகுதிகளில் அவை செயல்பட்டு வரும் நாடுகளில் எல்லாம் உண்டாக்கியுள்ள சீரழிவுகளைப் பார்க்கக் கூட அரசு தயாராக இல்லை.

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு மின்சாரம், சாலை வசதிகள், சமூக மேம்பாடு  உள்ளிட்ட அடிப்படையான கட்டமைப்புகள் மிகவும் அவசியமாகும். அதற்காக அவற்றில் மூலதனங்களும் தொடர்ந்த கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்பட  வேண்டும். ஆனால் கொள்கை முடிவுகளை எடுப்பதில் பெரிய சுணக்கம் நிலவுகிறது. அதனால் லட்சக் கணக்கான கோடி ரூபாய்கள் மதிக்கப்புள்ள திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே அரசின் கொள்கைகளை வகுப்பதிலும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் பெரும் தவறுகளும், ஊழல்களும் நிறைந்திருப்பது வெளியாகி வருகிறது. அதனால் அரசுக்கு நியாயமாக வர வேண்டிய பல  லட்சம் கோடி ரூபாய் வருமானங்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டிய சில பேருக்குச் சென்று கொண்டிருப்பது  தெரிகிறது.

நாட்டின் இயற்கை வளங்கள் எல்லாம் கொள்ளை போய்க் கொண்டிருக்கின்றன. மேலும் அவற்றை மக்களின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக நமது நாட்டில் அதிக அளவில் நிலக்கரி உள்ளது. அவற்றைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க வேண்டியது அரசின் கடமை. அப்போது தான் பொருளாதாரம் வளர முடியும். ஆனால் தனது  தவறுகளால் அரசு அவற்றை முறையாகப்  பயன்படுத்தித் திட்டமிட முடியாத சூழ்நிலையில் சிக்கியுள்ளது.

Indian economy4நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது சம்பந்தப்பட்ட  அரசாங்கத்தின் அத்தியாவசியமான பணியாகும்.  இங்கு ஒவ்வொரு வருடமும் ஒரு கோடியே இருபது லட்சம் பேர் புதியதாக உழைக்கும் வர்க்கத்தில் இணைந்து வருகின்றனர். அதில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து படித்து வருபவர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால் கடந்த 2004- 05 ஆம் வருடம் தொடங்கி வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மிகவும் மோசமாக உள்ளது.

1999- 2004 காலகட்டத்தில் அப்போதைய அரசு ஆறு கோடி பேருக்கு மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. அதற்கடுத்து வந்த மன்மோகன் சிங் அரசு  2004 முதல் 2009 வரை வெறும் இருபத்தேழு லட்சம் வேலைகளை மட்டுமே உருவாக்கியுள்ளதாக  மத்திய அரசின் மாதிரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இரண்டாவது முறை  மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்த பின்னரும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முன்னேற்றமில்லை.

இந்தியப் பொருளாதாரத்துக்கு அறுபது விழுக்காட்டுக்கும் அதிகமான பங்கினை அளித்து வருவது சேவைத் துறையே ஆகும். கடந்த பல ஆண்டுகளாகவே அதுவே பிற துறைகளை விட வேகமாக வளர்ந்தும் வருகிறது. ஆயினும் அந்தத் துறையில் 2005 ஆம் ஆண்டு தொடங்கி வெறும் எண்பத்தாறு லட்சம் புதிய வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு மிகக் குறைவான எண்ணிக்கையில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளிலும் கணிசமான அளவு தற்காலிகமானவையாகவே உள்ளன.

கூடவே அரசின் நிதி நிர்வாகமும் மிகவும் மோசமாகிவிட்டது. 2004 முதல் 2013 வரையான காலகட்டத்தில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. சென்ற நிதியாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஐந்து லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிச் சென்று விட்டது.

அதனால் பொருளாதார வளர்ச்சி விகிதமும்  சென்ற நிதியாண்டு முதல் மிகவும் குறைந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் முதல் முறையாக சென்ற 2012-13 ஆம்   ஆண்டில் வளர்ச்சி விகிதம் 4.5 விழுக்காடு என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டிலும் வளர்ச்சி விகிதம் ஐந்து விழுக்காட்டுக் கீழ்தான் இருக்கும் என மத்திய அரசின் புள்ளி விபர அலுவலகம் கணித்துள்ளது.

எனவே அண்மைக் காலமாக  இந்தியப் பொருளாதாரம் ஒரு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டு வருகிறது. ஒரு பக்கம் தொழில் செய்பவர்கள் மூலதனங்களை  மேற்கொள்ளப் பயப்படுகின்றனர். இன்னொரு பக்கம் சொந்தத் தொழில்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

pm-modiஅதனால் பொதுவாக பல தரப்பு மக்களும் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். இந்தியா உலகிலேயே அதிக அளவு இளைஞர்களைப் பெற்று விளங்குகிறது. வேலை செய்வதற்குப் போதுமான மக்கள் நம்மிடம் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் திறமைகளைப் பயன்படுத்தி  நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல அரசிடம் திட்டங்கள் இல்லை.

எனவே நமது (முந்தைய) ஆட்சியாளர்கள் ஒரு பெரும் வரலாற்றுத் தவறுக்குக் காரணமாக இருந்து விட்டார்கள். இந்தியா என்னும் சக்தி மிகுந்த நாட்டினுடைய முன்னேற்றம் தடைப்பட்டு நிற்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் இந்தியப் பொருளாதாரம் மேலெழுந்து வந்து கொண்டிருந்த போது, வெளிநாட்டு நிபுணர்கள்  சிலர் ஒரு பேரரசு மீண்டும் எழத் தொடங்கி விட்டது என்று காலனி ஆதிக்க காலத்துக்கு முந்தைய நமது பழைய வரலாற்றைத் தொடர்பு படுத்திக் கூறினார்கள்.

துரதிர்ஷ்டவசமாக அந்த வார்த்தைகளைப் பொய்யாக்கும் வகையில்  மன்மோகன் அரசின் அணுகுமுறைகள் அமைந்து விட்டன. அதனால் பொருளாதார வளர்ச்சியில்  கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்னேற்றத்திற்குப் பெரும் முட்டுக்கட்டைகள் போடப்பட்டுள்ளன. மேற்கத்திய பொருளாதாரங்களுக்குப் பிரச்னைகள் அதிகரித்து உலக அளவில் நமது நாட்டுக்கென வாய்ப்புகள் பெருகி வரும் இந்தச் சூழ்நிலையை நமது அரசு சரியாகப் பயன்படுத்தத்  தவறிவிட்டது.

இவற்றை சரிசெய்ய வேண்டிய பெரும் பொறுப்பு பிரதமராக புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு உள்ளது.  மோடி இதை சரி செய்வார் என்று நாடே எதிர்பார்க்கிறது.

பாஜக: B.J.P in Tamilnad elections and impact

0 comments
பாஜக_B.J.P
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் சந்தித்த இன்னொரு ஆச்சரியம் பாஜக B.J.P. எப்படி மதிமுக, மக்கள் மனதிலிருந்து தான் இன்னும் முற்றிலும் அகலவில்லை என்பதை இந்தத் தேர்தலில் நிரூபித்துள்ளதோ அதேபோல பாஜகவும் B.J.P தனது செல்வாக்கை மற்ற கட்சிகளுக்கு குறிப்பாக திமுக, அதிமுகவுக்கு நிரூபித்துக் காட்டி விட்டது.

காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பிடும்போது பாஜக B.J.P பரவாயில்லை என்றே கூறலாம். காங்கிரஸைப் பொறுத்தவரை ஊரக உள்ளாட்சிகளில் மட்டுமே சற்று வார்டு உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. மாநகராட்சிகள்,நகராட்சிகளில் அது மக்கள் கவனத்தைப் பெறத் தவறி விட்டது. ஆனால் பாஜகவைப் B.J.P பொறுத்தவரை கிராமப்புற ஊராட்சிகள் முதல் மாநகராட்சி வரை அது அசத்தியுள்ளது. இது ஆச்சரியத்தைத் தருவதாக அமைந்துள்ளது.

நகரப் பகுதிகளில் பாஜகவுக்கு B.J.P நல்ல ஆதரவு இருப்பது இந்தத்தேர்தல் முடிவு மூலம் தெரிய வந்துள்ளது. இந்தக்கட்சி, 2 நகராட்சித் தலைவர் பதவிகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. காங்கிரஸால் ஒரு நகராட்சித் தலைவர் பதவியைக் கூட பெற முடியாத நிலையில் இன்னொரு தேசியக் கட்சியான பாஜக இரட்டிப்பாக இதை சாதித்திருப்பது வியப்பளிக்கிறது. நாகர்கோவில் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவர்கள் பாஜகவைச் B.J.P  சேர்ந்தவர்கள் ஆவர்.

மாநகராட்சிகளைப் பொறுத்தவரை கோவையில் 2 வார்டுகளைப் பிடித்துள்ளது பாஜக B.J.P. தூத்துக்குடி, நெல்லையில் தலா ஒரு கவுன்சிலரைப் பெற்றுள்ளது. இது ஆச்சரியமாக உள்ளது. அதேபோல சென்னை மாநகராட்சியில் மொத்தமாக 50 ஆயிரம் வாக்குகளை அது அள்ளியுள்ளது.

அதேபோல 37 நகராட்சிக் கவுன்சிலர்கள், 13 பேரூராட்சித் தலைவர்கள், 181 வார்டு உறுப்பினர்கள், 2 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், 31 யூனியன் கவுன்சிலர்கள் என மொத்தம் 270 இடங்களைப் பிடித்துள்ளது பாஜக.கன்னியாகுமரியில் மட்டு்ம்தான் பாஜக உயிரோடு இருக்கிறது என்ற பொதுவான கருத்தை பாஜக B.J.P இந்தத் தேர்தலில் பொய்ப்பித்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே பாஜகவைப் புறக்கணித்து வந்தன திராவிடக் கட்சிகள். பாஜகவுடன் சேர்ந்தால் மதச்சார்பு அடையாளம் வந்து விடுமே என்றஅச்சம்தான் இதற்குக் காரணம். ஆனால் இன்று மக்களிடம் எங்களது செல்வாக்கு முழுமையாக போகவில்லை, எங்களுக்கும் வாக்கு வங்கி உள்ளது என்பதை பாஜக நிரூபித்துள்ளது. நிச்சயம் இது திராவிடக் கட்சிகளை சிந்திக்க வைக்கும் என்று பாஜக B.J.P கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Thanks: Thats tamil

மனிதநேய மக்கள் கட்சி: Manithaneya Makkal Katchi

0 comments
உள்ளாட்சித் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி Manithaneya Makkal Katchi 600 இடங்களில் தனித்துப் போட்டியிட்டு 96 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது மனிதநேய மக்கள் கட்சி Manithaneya Makkal Katchi. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, கூட்டணி கட்சிகளைக் கேட்காமலேயே வேட்பாளர்களை அறிவித்தது. இதையடுத்து சில கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி அடைந்து தனித்துப் போட்டியிட்டன. அவ்வாறு தனித்துப் போட்டியிட்ட கட்சிகளில் மனிதநேய மக்கள் கட்சியும் Manithaneya Makkal Katchi ஒன்று.

மனிதநேய மக்கள் கட்சி Manithaneya Makkal Katchi மொத்தம் 600 இடங்களில் தனித்து களமிறங்கியது. அதில் 16 இடங்களில் அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இது தவிர 80 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கோவை மாநகாரட்சியின் 86வது வார்டு, 14 நகராட்சி வார்டுகள், 37 பேரூராட்சி வார்டுகளில் வெற்றிவாகை சூடியுள்ளது.

ராமேஸ்வரம், கீழக்கரை, நெல்லிக்குப்பம், கடையநல்லூர், தென்காசி, வாணியம்பாடி, திருவாரூர், கூத்தாநல்லூர், வந்தவாசி ஆகிய நகராட்சிகளுக்குட்பட்ட வார்டுகளிலும், உடன்குடி, சோழபுரம், அபிராமம், இளையான்குடி, முதுகுளத்தூர், பெருந்துறை, கயத்தாறு, தக்கலை, லால்பேட்டை, நெல்லை ஏர்வாடி, நெல்லிக்குப்பம், திருக்கழுக்குன்றம் ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளிலும் மனிதநேய மக்கள் கட்சி Manithaneya Makkal Katchi வெற்றி பெற்றுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சியைச் Manithaneya Makkal Katchi சேர்ந்த ஜாகிர் ஹுசைன் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணம் பஞ்சாயத்து தலைவராகவும், வெங்கடேசன் காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் பஞ்சாயத்து தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். Thanks : Thats Tamil

கறுப்பு பணம் - தனி கமிட்டியை நியமித்தது சுப்ரீம் கோர்ட்

0 comments
வெளிநாடுகளில், இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை திரும்பக் கொண்டு வர மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஒரு விடிவு கிடைத்துள்ளது. கறுப்புப் பணம் பதுக்கல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணையை கண்காணிக்க, அதிக அதிகாரங்களுடன் கூடிய, சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான, சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி.,) நியமித்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கறுப்புப் பணத்தை மீட்பது தொடர்பான நடவடிக்கைகளில், மத்திய அரசின் செயல்பாடு மந்தமாக இருப்பதாகவும், சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில், இந்தியர்களால், பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை திரும்பவும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உள்ளிட்டோர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை நேற்று நடந்தது.

Status of the Youths of India & Tamilnadu | கிரிமினல் சமூகமாகும் இளம் தலைமுறை -ஓர் பகீர் ரிப்போர்ட்

0 comments
பிறக்கும்போதே யாரும் குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. வளர்ப்பும் சூழ்நிலையும் தான் அவர்களை நல்லவர்களாகவும்கெட்டவர்களாகவும் மாற்றுகிறது. பின் நாட்களில் அதுவே அவர்களது வாழ்க்கையின் அடையாளமாகவும் மாறிவிடுகிறது.

இளம் ரத்தம் பயமறியாது என்பா
ர்கள் உண்மைதான். சில குழந்தைகள் செய்யும் செயல்கள் கிரிமினல் குற்றவாளிகளையே அதிர வைத்து விடுகின்றன. அந்தளவுக்கு இன்றைய புதிய தலைமுறையினரில் சிலர் 'பிளான் பண்ணி'கொலை செய்யத் துணிகின்றனர்.செல்போன் வாங்க ஆசைப்பட்ட சக மாணவனைக் கடத்தி பணம் கேட்டதும்  கொடுக்க மறுத்ததால் அவனை கொன்று கூறு போட்டதும் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த பயங்கரம்.

            அது, இது என்று எந்த வரையறையும் இல்லாமல் கைதேர்ந்தவாகள் செய்யும் எல்லாவிதமான குற்றங்களிலும் இன்றைய புதிய தலைமுறை இளம் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். 14 வயது வரை உள்ளவர்களைக் குழந்தைகள் என்று சொல்லும் நமது சட்டம் தான் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் தவறிழைக்கும்போது அவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்லாமல் இளம் குற்றவாளிகள் என்று சொல்லுகிறது. அதேநேரத்தில் அவர்களை மிகவும் கவனத்துடன் பார்க்கிறது. மற்றவர்கள் குற்றம் செய்து நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை,மரண தண்டனை என்கிறது சட்டம் 18 வயதிற்குட்பட்டவர்களை விவரம் அறியாத பருவத்தினராகக் கருதிஇ சிறுவர் கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கிறது. ஆனால் பெரும்பாலான கூர்நோக்கு இல்லங்கள் அந்த இளம் குற்றவாளிகளைச் சீர்திருத்துவதற்குப் பதிலாக அடிமைகளாகவே நடத்துகின்றன. இதனால் அவர்கள் மென்மேலும் கிரிமினல்களாவதற்கே வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

            நாட்டில் நடைபெறும் குற்றங்களில் 2 சதவீதக் குற்றங்கள் இளம் குற்றவாளிகளால் செய்யப்படுபவை. இந்த குற்றங்கள் இரண்டு வகையாக நடக்கின்றன. ஓன்று சம்பந்தப்பட்ட குற்றவாளியின் விருப்பம் இ தேவையின் அடிப்படையில் நடைபெறுபவை. மற்றவை சமூக விரோதிகள் அல்லது குடும்பத்தினர் தூண்டுதலின் போல் நடைபெறுபவை. "எப்படியிருந்தாலுமு; அதற்கு  சூழ்நிலைகளும்,குடும்பமும் முக்கிய காரணமாக அமைகின்றன. எனவே இளம் குற்றவாளிகளின் குற்றங்களுக்குப் பின்னால் மற்றவர்களின் செயல்பாடுகளும்,தூண்டுதலும் இருக்கின்றன" என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள்.

            குறிப்பாக இளம் குற்றவாளிகள் உருவாவதில் குடும்பத்தினர்.உறவினர் ஆகியோர் அதிக பங்கு வகிக்கின்றனர். மற்றும் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை ஏற்படுத்தும் நெருக்கடி என்பது இன்னொரு அதிர்ச்சி தகவல். அதேநேரத்தில் குடும்ப பொருளாதாரமும் குற்றம் நடப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

            திருட்டுக் குற்றங்களில் அதிக அளவில் இளம் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். 80 சதவீத திருட்டுக்கள் மற்றவர்களின் தூணடுதலின்  பேரில்  மற்றவர்களுக்கு துணை நின்றதால் நடந்தவை. 2007 ஆம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 5606திருட்டுக்கள் இளம் குற்றவாளிகள் மூலம் நடைபெற்றுள்ளனர்.

இன்னொரு அதிர்ச்சி தகவல்…

                  2007ம் ஆண்டு மட்டும் 672 கொலைகள் நடந்துள்ளன. இதில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு முதல் இடம். அதாவது  141கொலைகள. அடுத்து மத்திய பிரதேசம். தமிழ் நாட்டிற்கு 10வது இடம். 28 கொலைகள்தான் என்பது சற்று ஆறுதல்! 746கற்பழிப்புகளுக்கு துணை போயுள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து கலவரத்தில் ஈடுபட்டதாக 1400சம்பவங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதர சட்டங்களில்…

            ஆயுதங்கள் ,போதைப்பொருள்,சூதாட்டம், சாரயம் விற்பனை என 22க்கும் அதிகமான குற்றங்களில் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்குகளில் எல்லாம் இளம் குற்றவாளிகள் ஒரு கருவியாகப் பயன்படுகின்றனர்.

            2007ம் ஆண்டில் நடந்த இளம் குற்றவாளிகள் செய்த குற்றங்கள் இதர சட்டங்களின் கீழ் 4163 வழக்குகளும். 2008ம் ஆண்டில் 3156வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில்…

            தமிழகத்திலும் இளம் குற்றவாளிகளால் அரங்கேறிய குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகாத்து வருகின்றன.2006 முதல் 2008 வரையில் பதிவான குற்ற விவரங்களை மாநில குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ளது.
 2009 ஆண்டின் குற்றங்கள் தொகுப்பட்டு வருகின்றன.

குற்றம்
2006
2007
2008
கொலை
23
38
26
கொலை முயற்சி
18
17
17
கற்பழிப்பு
8
13
7
கடத்தல்
0
4
3
பெண் கடத்தல்
0
2
3
வீடு புகுந்து திருட்டு
1
14
3
வழிப்பறித்திருட்டு
6
1
13
கொள்ளை
119
138
106
திருட்டு
304
387
410
ஆட்டோ திருட்டு
44
56
56
வன்முறை
6
26
23
அடிதடி
41
32
158


Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf