தனி ஆவர்த்தனம் தொடரும் : தங்கபாலு | Congress will March Ahead
அவர் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் தனித்தே போட்டியிட்டது என்ற பெருமை, காங்கிரசுக்கு மட்டுமே உண்டு. இனி வரும் காலங்களில், காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும். அப்போது தான் கட்சியின் பலத்தை நிரூபிக்க முடியும். ஆளுங்கட்சியான அ.தி.மு.க., ஆண்ட கட்சியான தி.மு.க., ஆகியவை, உள்ளாட்சித் தேர்தலிலும் தங்களோடு சில கட்சிகளை கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தல் களம் இறங்கின.
மற்ற கட்சிகளும், அவரவர் நிலைகளுக்கேற்ப கூட்டணி சேர்ந்துக் கொண்டு போட்டியிட்டன. உள்ளாட்சித் தேர்தல் நல்ல முறையில் நடந்தது. ராஜிவ் கொண்டு வந்த பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும். அரசியலில் வெற்றி தேல்வி சகஜம். தேர்தல் முடிவு குறித்து ஆய்வு செய்ய தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் விரைவில் நடக்கவுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை வைத்து கட்சிகளை எடை போடக் கூடாது. உள்ளாட்சித் தேர்தல் வேறு, சட்டசபை, லோக்சபா தேர்தல் வேறு. மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு, இந்த தோல்விக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
இளங்கோவன், யுவராஜா கூறும் குற்றச்சாட்டுகளை பற்றி நான் கவலைப்படவில்லை. சத்தியமூர்த்திபவனில் நடந்த கலவரத்திற்கு யுவராஜா தான் காரணம். அவர் ஒரு வேட்பாளரை மாற்றச் சொன்னதால் அந்த சம்பவம் நடந்தது. கூட்டணிக் கட்சித் தலைவர் என்றமுறையில் சோனியாவை கருணாநிதி சந்தித்து பேசியுள்ளார். அதில் விமர்சிக்க ஒன்றுமில்லை. இவ்வாறு தங்கபாலு கூறினார்.
தேமுதிக: தேர்தலில் மக்கள் ஆதரவு கூடுகிறது | Our Stonghold is Growing- D.M.D.K
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தியில், 'தமிழ்நாட்டில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டு 863 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இது கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களை விட 248 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்று 40 சதவீதம் இடங்களை அதிகம் பெற்றுள்ளது.
தேமுதிக தனித்துப் போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழக மக்களின் ஆதரவு பெருகியுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சுமார் 28 லட்சம் வாக்குகளும், 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சுமார் 31 லட்சம் வாக்குகளும், 2011-ம் ஆண்டு உள்ளாட்சி மன்ற தேர்தலில் 35 லட்சத்து 64 ஆயிரத்து 74 வாக்குகளும் பெற்றுள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழக மக்களின் ஆதரவு தேமுதிகவுக்கு கூடிக் கொண்டே வருகிறது என்பது உண்மையாகும்,' என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்: கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்
பாஜக: B.J.P in Tamilnad elections and impact
![]() |
| பாஜக_B.J.P |
காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பிடும்போது பாஜக B.J.P பரவாயில்லை என்றே கூறலாம். காங்கிரஸைப் பொறுத்தவரை ஊரக உள்ளாட்சிகளில் மட்டுமே சற்று வார்டு உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. மாநகராட்சிகள்,நகராட்சிகளில் அது மக்கள் கவனத்தைப் பெறத் தவறி விட்டது. ஆனால் பாஜகவைப் B.J.P பொறுத்தவரை கிராமப்புற ஊராட்சிகள் முதல் மாநகராட்சி வரை அது அசத்தியுள்ளது. இது ஆச்சரியத்தைத் தருவதாக அமைந்துள்ளது.
நகரப் பகுதிகளில் பாஜகவுக்கு B.J.P நல்ல ஆதரவு இருப்பது இந்தத்தேர்தல் முடிவு மூலம் தெரிய வந்துள்ளது. இந்தக்கட்சி, 2 நகராட்சித் தலைவர் பதவிகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. காங்கிரஸால் ஒரு நகராட்சித் தலைவர் பதவியைக் கூட பெற முடியாத நிலையில் இன்னொரு தேசியக் கட்சியான பாஜக இரட்டிப்பாக இதை சாதித்திருப்பது வியப்பளிக்கிறது. நாகர்கோவில் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவர்கள் பாஜகவைச் B.J.P சேர்ந்தவர்கள் ஆவர்.
மாநகராட்சிகளைப் பொறுத்தவரை கோவையில் 2 வார்டுகளைப் பிடித்துள்ளது பாஜக B.J.P. தூத்துக்குடி, நெல்லையில் தலா ஒரு கவுன்சிலரைப் பெற்றுள்ளது. இது ஆச்சரியமாக உள்ளது. அதேபோல சென்னை மாநகராட்சியில் மொத்தமாக 50 ஆயிரம் வாக்குகளை அது அள்ளியுள்ளது.
அதேபோல 37 நகராட்சிக் கவுன்சிலர்கள், 13 பேரூராட்சித் தலைவர்கள், 181 வார்டு உறுப்பினர்கள், 2 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், 31 யூனியன் கவுன்சிலர்கள் என மொத்தம் 270 இடங்களைப் பிடித்துள்ளது பாஜக.கன்னியாகுமரியில் மட்டு்ம்தான் பாஜக உயிரோடு இருக்கிறது என்ற பொதுவான கருத்தை பாஜக B.J.P இந்தத் தேர்தலில் பொய்ப்பித்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே பாஜகவைப் புறக்கணித்து வந்தன திராவிடக் கட்சிகள். பாஜகவுடன் சேர்ந்தால் மதச்சார்பு அடையாளம் வந்து விடுமே என்றஅச்சம்தான் இதற்குக் காரணம். ஆனால் இன்று மக்களிடம் எங்களது செல்வாக்கு முழுமையாக போகவில்லை, எங்களுக்கும் வாக்கு வங்கி உள்ளது என்பதை பாஜக நிரூபித்துள்ளது. நிச்சயம் இது திராவிடக் கட்சிகளை சிந்திக்க வைக்கும் என்று பாஜக B.J.P கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
Thanks: Thats tamil
மனிதநேய மக்கள் கட்சி: Manithaneya Makkal Katchi
கடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது மனிதநேய மக்கள் கட்சி Manithaneya Makkal Katchi. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, கூட்டணி கட்சிகளைக் கேட்காமலேயே வேட்பாளர்களை அறிவித்தது. இதையடுத்து சில கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி அடைந்து தனித்துப் போட்டியிட்டன. அவ்வாறு தனித்துப் போட்டியிட்ட கட்சிகளில் மனிதநேய மக்கள் கட்சியும் Manithaneya Makkal Katchi ஒன்று.
மனிதநேய மக்கள் கட்சி Manithaneya Makkal Katchi மொத்தம் 600 இடங்களில் தனித்து களமிறங்கியது. அதில் 16 இடங்களில் அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இது தவிர 80 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கோவை மாநகாரட்சியின் 86வது வார்டு, 14 நகராட்சி வார்டுகள், 37 பேரூராட்சி வார்டுகளில் வெற்றிவாகை சூடியுள்ளது.
ராமேஸ்வரம், கீழக்கரை, நெல்லிக்குப்பம், கடையநல்லூர், தென்காசி, வாணியம்பாடி, திருவாரூர், கூத்தாநல்லூர், வந்தவாசி ஆகிய நகராட்சிகளுக்குட்பட்ட வார்டுகளிலும், உடன்குடி, சோழபுரம், அபிராமம், இளையான்குடி, முதுகுளத்தூர், பெருந்துறை, கயத்தாறு, தக்கலை, லால்பேட்டை, நெல்லை ஏர்வாடி, நெல்லிக்குப்பம், திருக்கழுக்குன்றம் ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளிலும் மனிதநேய மக்கள் கட்சி Manithaneya Makkal Katchi வெற்றி பெற்றுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியைச் Manithaneya Makkal Katchi சேர்ந்த ஜாகிர் ஹுசைன் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணம் பஞ்சாயத்து தலைவராகவும், வெங்கடேசன் காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் பஞ்சாயத்து தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். Thanks : Thats Tamil
கூடங்குளம் போராட்டம் மீண்டும் தீவிரம் | Koodankulam Issue
பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் கூடங்குளம் போராட்டம் ஈடுபட்டதாலும், கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்களை தடுத்து நிறுத்தியதாலும் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
இடிந்தகரையில் இன்று 5-வது நாளாக 22 பெண்கள் உள்பட 106 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை கூடங்குளம் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகள் ஆதரவு தெரிவித்து களத்தில் குவிந்துள்ளனர்.
அணு மின் நிலைய பணிக்கு சென்றவர்களை நேற்று கூடங்குளம் பொதுமக்கள் திரண்டு நின்று முற்றுகையிட்டு பணிக்கு செல்லவிடாமல் தடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் சமரசம் ஏற்பட்டது.
இந்த நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு வேலைக்கு சென்ற ஊழியர்களை பொதுமக்கள் இன்றும் வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அணு விஜய்நகரில் இருந்து, கூடங்குளம் அணு மின் நிலைய ஊழியர்கள் பேருந்துகளில் இன்று காலை வேலைக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தபோது, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பானது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும்,கூடங்குளம் போராட்டம் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், அங்கு போலீஸார் கண்ணீர்புகை குண்டுகளுடன் குவிக்கப்பட்டனர். இதனால் 4 மணி நேரத்துக்கும் மேலாக பதற்றம் நீடித்தது.
What if We close Koodangulam: கூடங்குளம் அணு உலையை மூடினால்..
உள்ளாட்சி தேர்தல்: வடிவேலு?
உள்ளாட்சி தேர்தலிலும் வடிவேலு 'உள்ளே இறக்கிவிட்டு' வேடிக்கை பார்க்க ஒரு குரூப் அலைவதாக தகவல். எதிலும் சிக்காமல் போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. இந்த முறை அவரை பிரச்சாரத்திற்கு அழைத்தது போனமுறை ஊர் ஊராக அனுப்பி வைத்த கட்சியல்ல என்பதுதான் காமெடி. நல்லாதான் போயிட்டு இருக்கு எல்லாம். ஏதோ எல்லாரும் சேர்ந்து என்னைய வடிவேலு ஒதுக்கி வச்சுட்டதா பேசிக்கிறாங்க பொழப்பத்தவங்க. உண்மையில் நான்தான் சினிமாவை கொஞ்ச காலம் ஒதுக்கி வைச்சுருக்கேன். இந்த இடைப்பட்ட காலத்துல நிறைய காமெடி டிராக் எழுதிகிட்டு இருக்கேன். நிறைய டைரக்டர்கள்கிட்ட கதை கேட்டுகிட்டு இருக்கேன்.
நான் ஒரு பந்தய குதிரை. புல்லு திங்கவும் கொள்ளு திங்கவும் ஒதுங்கியிருக்கேன். புல்லு திங்கிற நேரத்துல எவனோ புரளியை கிளப்பிவிடுறான் என்கிறார் வடிவேலு.
இதெல்லாம் ஒரு புறம் நடந்தாலும், 'அம்மாவை' பார்க்கிற முயற்சியிலும் வடிவேலு அண்ணாச்சி இறங்கியிருக்கிறார்,
கருணாநிதி வலையில் வீழ்ந்த ஜெயலலிதா: உள்ளாட்சித் தேர்தல் 2011
வென்றாலும் வீழ்ந்தாலும் அரசியல் தன்னைச் சுற்றியே சுழல வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் கருணாநிதி. அதனால்தான் உள்ளாட்சித் தேர்தல் வேலைகளை மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தொடங்குவதற்கு முன்பே, ''இந்தத் உள்ளாட்சித் தேர்தல் தேர்தலில் தி.மு.க. தனித்துப் போட்டி!'' என்று கருணாநிதி அறிவித்தார். கடந்த 40 ஆண்டுகளாக சவாரி பாலிடிக்ஸ் செய்துவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு, இதை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. கருணாநிதியின் அறிவிப்புக்குக் கருத்து சொல்லாத தங்கபாலு, ''காங்கிரஸும் தனித்துப் போட்டி!'' என்று காமெடி பண்ணினார். ''இத... இதத்தான் எதிர்பார்த்தேன்' என்றார் இளங்கோவன். தீராத தலைவலியில் சிக்கி இருக்கும் சிதம்பரத்துக்கு இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட நேரம் இல்லை. ஜி.கே.வாசன் இப்போது கப்பலைப்பற்றி மட்டுமே பேசுகிறார். கட்சிபற்றிப் பேசுவது இல்லை. தி.மு.க-வுக்கும் காங்கிரஸுக்கும் ஃபெவிக்கால் வைத்து ஒட்டும் காரியத்தை எப்போதும் பார்க்கும் காங்கிரஸ் பத்திரிகையான 'தேசிய முரசு’கூட, 'இது தி.மு.க-வுக் கும் நல்லது... காங்கிரஸுக்கும் நல்லது’ என்றது. தன்னைச் சமாதானப்படுத்த டெல்லியில் இருந்து யாராவது வருவார்கள் என்று கருணாநிதி காத்திருந்தார்; ஏமாந்தார். மக்களவைத் தேர்தலைத் தவிர, வேறு எதிலும் அக்கறை காட்டாத காங்கிரஸ் மேலிடத்துக்கு, தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கப்போகும் விஷயம் தெரியுமா என்றே தெரியவில்லை!கருணாநிதியின் அறிவிப்பு தொல்.திருமாவளவனுக்கு மட்டும்தான் பெரும் தொல்லையாகப் போனது. ''காங்கிரஸைப் பழிவாங்குவதாக நினைத்து சிறுத்தைகளையும் ஒதுக்கிவிட்டார்!'' என்று அவரால் ஒப்பாரிவைக்கவே முடிந்தது. ஈழத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதிக்காக எல்லா வலிகளையும் தாங்கிய திருமாவை உதாசீனப்படுத்தியது, கருணாநிதியின் அரசியல் தீண்டாமையாகவே கணிக்க வேண்டியுள்ளது. அன்றைய முகமூடிக்கு திருமா தேவைப்பட்டார். இன்று வேண்டாம் என்று கருணாநிதி நினைக்கிறார்.
இந்த அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், சிறுத்தைகள் மூன்றுமே தேர்தலை தனித் தனியாகச் சந்திக்கின்றன!
அடுத்து அ.தி.மு.க!
சட்டமன்றத் தேர்தல் வெற்றிச் செய்தி வர வர... பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, ''இது தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த வெற்றி'' என்றார். மறு நாள் எம்.ஜி.ஆர். சிலைக்கு வெயிலில் மாலை அணிவித்து வணங்க வந்தபோது, ''இது அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த வெற்றி'' என்றார். தே.மு.தி.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சரத்குமார், டாக்டர் கிருஷ்ணசாமி என்று வலுவான கூட்டணி அமைத்து வென்றவர் மன நிலையில் அன்றே மாற்றம் தெரிந்தது. விஜயகாந்த்தை இந்தக் கூட்டணிக்குள் கொண்டுவர எத்தகைய திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளும் கெஞ்சல்களும் அ.தி.மு.க. தரப்பால் மேற்கொள்ளப்பட்டன என்பதை அறிந்தவராகவே இருந்தாலும், வெற்றியை விஜயகாந்த்துடன் பங்கிட்டுக்கொள்ள ஜெயலலிதா தயாராக இல்லை என்று அப்போதே வெளிச்சத்துக்கு வந்தது!
இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸ் பக்கமாக அடித்த டார்ச்சை கருணாநிதி கட் செய்தது... ஜெயலலிதா சிந்தனையில் புது வெளிச்சம் பாய்ச்சியது. 'தோற்ற கருணாநிதியே தனியாக நிற்கும்போது, ஜெயித்த நமக்கு என்னவாம்?’ என்று ஜெயலலிதா நினைத்தார். சட்டமன்றத் தேர்தலில் தோற்ற கருணாநிதி, உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டால், பெரிய பிரச்னை எதுவும் இல்லை. சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு இதில் சிறு சறுக்கல் ஏற்பட்டாலும் பெரும் சங்கடம் ஏற்படும் என்பதை அவரிடம் சொல்வதற்கு எவரும் இல்லை!
தே.மு.தி.க-வுக்கு அ.தி.மு.க-விடம் இருந்து அழைப்பே இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும்தான் பழகிய பாசத்துக்காக சீனியர் அமைச்சர்களிடம் பேசிப் பார்த்தார். ''அம்மா சொன்னதும் முதல் போன் உங்களுக்குத்தான் வரும்'' என்றார்கள் அமைச்சர் கள். ஜெ. சொல்லவும் இல்லை... போன் வரவும் இல்லை. கம்யூனிஸ்ட்டுகளுக்கு மட்டும்தான், நிறைவேறாத கோரிக்கை என்று தெரிந்தும் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் இயல்பு உண்டு. மேயர் வேட்பாளர் 10 பேரை ஜெயலலிதா அறிவித்த பிறகும் நம்பிக்கையோடு பேச வந்தார்கள். 'இன்னுமா வருகிறீர்கள்?’ என்று நகராட்சிப் பட்டியலை விட்டார் ஜெ. 'இது சரியல்லவே’ என்று உடன்பாடான விமர்சனத்தையே மார்க்சிஸ்ட் விட்டது. 'இன்னுமா நம்புகிறீர்கள்?’ என்று ஊராட்சித் தலைவர் பட்டியலை விட்டார் ஜெ. மார்க்சிஸ்ட்டுகளுக்கு லேசாக ரோஷம் வந்தது. ஆனாலும், தா.பாண்டியனின் பக்தி தொடர்ந்தது. 'அவசரப்பட வேண்டாம்’ என்று மார்க்சிஸ்ட்டுகளுக்கு அறிவுரை சொன்னார். பெரிய வேட்டிகளே பறந்தபோது, சரத்குமார், டாக்டர் கிருஷ்ணசாமியால் என்ன செய்ய முடியும்? வேறு வழி இல்லாமல் தே.மு.தி.க. பட்டியலை வெளியிட்டது. மார்க்சிஸ்ட் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. கடந்த தேர்தலில் 'வைகோ வேண்டாம்’ என்று முதலியே முடிவு எடுத்துக் காலம் கடத்தியது போல, இந்த முறை விஜயகாந்த், கம்யூனிஸ்ட்டுகள் விஷயத்தில் ஜெயலலிதா நடந்துகொண்டார். இது நல்ல அரசியலும் அல்ல... கூட்டணி தர்மமும் அல்ல. சக அரசியல் சக்திகளை வெறும் கறிவேப்பிலையாகக் கருதும் எண்ணம், எதிர்பாராத நேரத்தில் சறுக்கலையே கொடுக்கும். நல்லதையும் அல்லதையும் சொல்ல நண்பன் இல்லாதது சொந்த வாழ்க்கைக்கு மட்டும் அல்ல; பொது வாழ்க்கைக்கும் இழப்பாகவே ஜெயலலிதாவுக்கு இருக்கப்போகிறது!
இதை ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தலில் உணர்வாரோ, இல்லையோ திருச்சி மேற்கு இடைத்தேர்தல் உணர்த்தும்!
'தி.மு.க, அ.தி.மு.க. இரண்டுடனும் கூட்டணி இல்லை’ என்று அறிவித்த வைகோ, எல்லா இடங்களுக்கும் வேட் பாளர் அறிவித்தார். பாரதிய ஜனதா எப்போதும் தனியாகவே இருக்கும். இப்போதும் அப்படியே. திருமாவளவனுடன் கூட்டணி போடலாம் என்று நினைத்த டாக்டர் ராமதாஸ், அதையும் செய்யாமல் தனியே நிற்கிறார். இப்படி எல்லோருமே தனியாக நிற்கிறார்கள்.
தமிழ் மக்கள் பார்ப்பது வித்தியாசமான காட்சி. எல்லாக் கட்சிகளும் இப்படி தனித்து எப்போதும் நின்றது இல்லை. ''தனித்துப் போட்டியிடும் தைரியம் எனக்கு மட்டும்தான் உண்டு'' என்ற விஜயகாந்த், ஜெயலலிதாவுடன் சேர்ந்தார். ''எல்லோரும் தனித்து நின்றால் நானும் தயார்'' என்ற டாக்டர் ராமதாஸ் எல்லாக் கூட்டணியிலும் இருந்துவிட்டார். ஆனால், அப்படிப்பட்ட எந்தத் திட்டமிடல்களும் இல்லாமலேயே கட்சிகள் பிரிந்துவிட்டன. முதன்முதலாக தமிழ்நாட்டில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு செல்வாக்கு என்பதைத் தெரிந்துகொள்ளப்போகிறோம். மொத்த வாக்காளர்களைக் கட்சிரீதியாகக் கணக்கிடப்போகிறோம்.
வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல்தான் முன்னோட்டம். ஒவ்வொரு கட்சியும் தங்கள் பலத்தைக் காட்டி, அந்தத் தேர்தலில் கூட்டணி அமைக்க உள்ளாட்சித் தேர்தல் அடித்தளம் அமைக்கப்போகிறது என்ற அடிப்படையில் பார்த்தால், கருணாநிதி நாட்டுக்கு நல்லதே செய்திருக்கிறார்!
Thanks : Vikatan @ http://www.vikatan.com
உள்ளாட்சி தேர்தல் 2011 : உள்ளாட்சி தேர்தல் கூட்டணி இல்லை-திமுக
![]() |
| உள்ளாட்சி தேர்தல் |
நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தி.மு.க. தனித்து போட்டியிடுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
மேலும் வருகிற உள்ளாட்சி தேர்தல் அரசியல் நோக்கிலான கூட்டணி தேவையில்லை என தி.மு.க, முடிவு செய்துள்ளதாகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் மட்டுமே கூட்டணியுடன் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
Nithyananda Ranjitha Hot: சாமியார் நித்யானந்தா குற்றச்சாட்டு - மீடியாவை ஆயுதமாகக் கொண்டு தன்னை அழிக்க சன் டி.வி., முயற்சி
மீடியாவை ஆயுதமாகக்கொண்டு தன்னை அழிக்க சன் டி.வி., மற்றும் தினகரன் நாளிதழ் ஆகிய ராட்சசர்கள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், தானும் ஒரு பத்திரிக்கைக்காரன் தான். இது ஒரு ஒழுக்கப்பிரச்னை. தன் மீது ஏதேனும் புகார் இருந்தால் தனது மூத்த சீடர்களோ அல்லது மூத்த நடுநிலை பத்திரிக்கையாளர்களோ தன்னிடம் நேரிடையாகவே கேட்டிருக்கலாம். அதை விடுத்து தன்னை அழிக்க சன் டி.வி., முயற்சித்தது என்று தெரிவித்தார் சாமியார் நித்யானந்தா.
இந்த பிரச்னைக்கு மூல காரணம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சக்சேனாவின் கூட்டாளியான ஐயப்பனும், வக்கீல் ஸ்ரீதரும் தான் காரணம் என்று குற்றம் சாட்டிய சாமியார் நித்யானந்தா, இவர்கள் இருவரும் எங்களிடம் நில அபகரிப்பு, பணம் கேட்டு மிரட்டல், அடித்து உதைத்தல் மற்றும் பணப்பிரச்னைகளை ஏற்படுத்துதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். முதலில் ரூ. 100 கோடி கேட்டு மிரட்டிய அவர்கள், பின் 60 கோடி கேட்டு மிரட்டியதாக தெரிவித்தார். ஆனால் தனக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக தனது சீடர்கள் அவர்களிடம் 25 முதல் 30 லட்சம் வரை தந்துள்ளனர் என்று கூறிய சாமியார் நித்யானந்தா, எனினும் அவர்கள் தொல்லை தொடர்ந்தாக தெரிவித்தார்.
தனக்கு என்ன நடந்தாலும் அதற்கு சன் டி.வி.,யும், தினகரன் நாளிதழுமே முழுப்பொறுப்பு என்று தெரிவித்த சாமியார் நித்யானந்தா, இது தொடர்பாக தாங்கள் அளித்த புகாரை எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார். தமிழகம் மற்றும் பெங்களூரில் 120 தியான மையங்கள் சன் டி.வி., ரவுடிகளால் அடித்து நொறுக்கப்பட்டதாகவும், பிடதி, திருவண்ணாமலை போன்ற ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தங்கள் சீடர்கள் 17 பேரின் வேட்டியை உருவி விட்டும், 7 பேர் மீது கொலை வெறி தாக்குதலும் நடத்தப்பட்டதாக நித்யானந்தா தெரிவித்தார். தாரமங்கலம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஏம்பலம் தியான பீடத்தில் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிடதியில் உள்ள எங்களது ஆசிரமத்தின் மீது பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே சன் டி.வி., நிருபர்களும், கேமிரா மேன்களும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டனர். இவை அனைத்தும் சன் டி.வி.,யின் தூண்டுதலின் காரணமாகவே நடந்துள்ளது என்று சாமியார் நித்யானந்தா குற்றம் சாட்டினார்.
தன் மீது 376 சட்டப்பிரிவின் கீழ் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதில் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறிய நித்யானந்தா, தனது மீதான தாக்குதல் மற்றும் பொய்ப்பிரச்சாரம் குறித்து சில மாதங்களுக்கு முன் அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்தித்து கடிதம் கொடுத்ததாகவும், ஆனால் அதற்கு பின்னும் எங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படவில்லை. ஆசிரமத்தின் முன்னாள் சீடரான லெனின் கையாள் பிரசன்னா என்பவர் ரூ. 100 கோடி பணம் கொடுத்தால் இப்பிரச்னைகளை எல்லாம் ஊதித்தள்ளிவிடலாம் என தனது ஆசிரமத்தில் உள்ளவர்களுடன் பேசிய ஆடியோ டேப் தன்னிடம் உள்ளது என்றும் நித்யானந்தா தெரிவித்தார்.
இப்பேட்டியின் போது, நடிகை ரஞ்சிதாவும் சாமியார் நித்யானந்தாவுடன் இருந்தார். எங்களுடன் நடிகை ரஞ்சிதாவும் பேட்டியில் அமர்ந்திருப்பது தனது நேர்மையையும், தைரியத்தையும் எடுத்துக்காட்டுவதாக சாமியார் நித்யானந்தா தெரிவித்தார். மேலும் இலங்கை பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளித்த நித்யானந்தா, இலங்கை போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆசிரமம் ஒன்று ஏற்படுத்தவிருந்ததாகவும் ஆனால் அப்போதைய ஆட்சியாளர்கள் இதற்கு ஒப்புதல் அளிக்க வில்லை என்று தெரிவித்தார்
We Lost Because of D.M.K- Anbumani Ramdoss | சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவினால்தான் தோற்றோம் - அன்புமணி ராமதாஸ்
தோல்விக்குக் காரணம்? பொதுவாக மக்கள் மாற்றம் வர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதனால் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர். 30 ஆண்டு காலமாக மாறிமாறிதான் அரசுகள் வந்து கொண்டிருக்கின்றன. கேரளத்தில் 50 ஆண்டுகளாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. அதுபோலத்தான் இந்தத் தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுக்கும் மேலாக பல காரணங்கள் உள்ளன.
விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, 2ஜி அலைக்கற்றை என்று பல்வேறு காரணங்கள் உள்ளன.
2ஜி அலைக்கற்றை பிரச்னையை திமுக அமைச்சர்களே சொல்லுகிறார்கள். அதுதான் என் எண்ணமும். இப்படிப்பட்ட காரணத்தால்தான் மக்கள் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
திமுகவுக்கு எதிரான வாக்குகள்: 2006 தேர்தலில் எந்த அலையும் வீசவில்லை. அது நடுநிலையான தேர்தல். இந்தத் தேர்தலைப் பொருத்தவரை பாமகவுக்கு எதிரான வாக்குகள் கிடையாது. திமுகவுக்கு எதிரான வாக்குகள்தான். அதற்கும் மேலாக சொல்லப்போனால் அதிமுகவுக்குச் சாதகமான வாக்குகளும் கிடையாது. ஆளும் கட்சிக்கு (திமுக) எதிரான வாக்குகள்தான்.
தோல்வி அல்ல சரிவு: இந்தத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு தோல்வி என்று சொல்ல முடியாது சரிவு என்றுதான் சொல்ல வேண்டும். வெற்றிபெற்ற அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 90 லட்சம். தோற்ற திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 45 லட்சம். வெறும் 45 லட்சம் வாக்குகள்தான் அதிமுக கூட்டணி அதிகம் பெற்றிருக்கிறது. இதனால் இதைத் தோல்வி என்று சொல்ல முடியாது. சரிவு என்றுதான் சொல்ல வேண்டும்.
அதேசமயம் இந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். இது எங்களுக்கு எதிரான வாக்குகள் கிடையாது. ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள். அந்த அலையில் நாங்கள் சிக்கிக் கொண்டோம்.
பாமக வாக்கு வங்கியில் சரிவா? 2006 சட்டப்பேரவை தேர்தலில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தோம். இப்போது 19 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம். 80 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகவே பெற்றுள்ளோம். 2006 தேர்தலில் எந்த அலையும் இல்லாததால் 55 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தாலே வெற்றிபெற முடிந்தது. 2011 - தேர்தலில் 75 ஆயிரம் வாக்குகள் பெற்றும் ஜெயிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் நடுநிலையாளர்கள் அதிக அளவில் வாக்களித்ததுதான். ஒவ்வொரு தொகுதியிலும் 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை கூடுதல் வாக்குகள் பதிவாகி உள்ளன.
விவகாரம் கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இப்போதுதான் சந்திக்கிறது
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுப் புகார் படிப்படி யாக முன்னேறி, கனிமொழி வரையில் சிறைக் கதவுகள் திறந்துகொண்டபோது, தி.மு.க. தொண்டன் துடித்தான். அடுத்தபடியாக, தயாநிதி மாறனை மையம்கொண்டு 'தெகல்ஹா' இதழ் கிளப்பிய புயல் வேகம் பெறும் நேரம் இது!
படிப்படியாக திசை மாறி மையம் கொள்ளும் இந்தப் புயலை, ஒரே கட்சியின் வெவ்வேறு முகாம்களில் இருப்பவர்கள் பரஸ்பரம் ரசிக்கும் விதத்தை சாதாரண கோஷ்டி அரசியலாகவோ, குடும்ப அரசியலாகவோ மட்டுமே சொல்லிவிட முடியாது. சரித்திரத் தேர்ச்சிகொண்டவர்கள் இதை 'யதுகுல’ மோதல் போன்றது என்றே வர்ணிக்கிறார்கள்.
பாண்டுவும் திருதராஷ்டிரனும் பெற்ற பிள்ளைகளுக்கு இடையே அரங்கேறிய சகோதரச் சண்டையே... மகாபாரதம். இறுதியில் காந்தாரியின் கோபம் எல்லாம் கிருஷ்ணனின் பக்கம் திரும்பியதாகவும்... 'சூழ்ச்சியால் நீ என் குலத்தை அழித்தாய்... கிருஷ்ணா, உன் குலமும் தமக்குள் அடித்துக்கொண்டு அழியும்’ எனச் சாபம் கொடுத்ததாகவும்... இதனால், மதுராவை ஆண்ட கடைசி மன்னனாக கிருஷ்ணனே ஆனதாகவும் கிளைக் கதைகள் உண்டு!
அப்படி ஒரு நெடுங்கதையின் கிளைக் கதையாகவே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தையும் சொல்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள்.
அசைக்க முடியாத ஆளும் கட்சியாய் கோலோச்சி வந்த தி.மு.க, இன்று இழந்திருப்பது அரியாசனத்தை மட்டும் அல்ல... தன் கட்சி யின் ஒட்டுமொத்த இமேஜையும்!
2007 மே 9... தி.மு.க-வில் கருணாநிதிக்கு அடுத்ததாக யாருக்குச் செல்வாக்கு? என்ற கருத்துக் கணிப்பை, 'தினகரன்’ நாளிதழ் கணித்துச் சொன்னது. 74 சதவிகித செல்வாக்கு ஸ்டாலினுக்கும் அழகிரிக்கு 2 சதவிகிதமும் கனிமொழிக்கு 1 சதவிகிதமும் என்றது அந்த சர்வே முடிவு. இதுபோக... மீதி உள்ள சதவிகித எண்ணிக்கை 'மற்றவர்கள்' என்றும் சொன்னது. ''அண்ணன் - தம்பி சண்டையை மூட்டுவது மட்டும் அல்ல இதன் நோக்கம்... அந்த 'மற்றவர்கள்' என்பது தயாநிதி மாறனை மனதில்கொண்டுதான்'' என்று அறிவாலயத்திலும் மதுரையிலும் கொதிப்பு கிளம்பியது.
அந்தக் கணிப்பை ஸ்டாலின் ரசித்தார். அழகிரி வெறுத்தார். கனிமொழியின் நலம் விரும்பிகளும் எரிச்சலானார்கள். இதன் தொடர்ச்சியாக, மதுரை யில் நாளிதழின் அலுவலகம் அடித்து நொறுக்கப் பட்டு கொளுத்தப்பட்டது. மூன்று உயிர்கள் பலியாகின. அன்றைக்கு தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், அன்றைய உள்துறைச் செயலாளர் மாலதிக்கு போன் செய்து மிரட்டியதாக மின்சாரத் துறை அமைச் சர் ஆற்காடு வீராசாமியே பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ''மதுரையில் இவ்வளவு பெரிய சம்பவம் நடக்கிறது. நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?'' என்று அவர் கேட்டதாக ஆற்காடு வீராசாமி சொன்னார். மகனுக்கும் பேரனுக்குமான மோதலில், மகன் பக்கம் கருணாநிதி நின்றார். மே 13-ம் தேதி தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய... கோபாலபுர மெகா பாரதம் வேகம் கண்டது!
முரசொலிமாறன் மறைவுக்குப் பிறகு டெல்லி விவகாரங்களைக் கவனித்துக்கொள்ள அவரது குடும்பத்துக்குள் இருந்தே வாரிசை அழைத்து வந்தவர் கருணாநிதிதான். ''தயாநிதி மாறன் தேர்தலில் நிற்கப்போகிறாரா?'' என்று அதற்கு முன் ஆனந்த விகடனுக்கான தனிப் பேட்டியில் கருணாநிதியிடம் கேட்டபோது, ''இல்லை! அண்ணன் கலாநிதியை விட்டுவிட்டு தம்பியை ஏன் கேட்கிறீர்கள்?'' என்று திருப்பிக் கேட்டார் கருணாநிதி. அவரே, பிறகு தயாநிதியை மத்திய சென்னை எம்.பி. ஆக்கினார். அமைச்சரும் ஆக்கினார். அதுவும் கேபினெட் அந்தஸ்து வாங்கிக் கொடுத்தார். அதற்கு விமர்சனங்கள் வந்தபோது வக்காலத்தும் வாங்கினார். ''தயாநிதி அரசியலுக்கு வருவார். இப்படி வளர்வார் என்று நான் எதிர்பார்க்கலே. அவர் ஜூனியர்தான். ஆனால், பார்ப்பனக் குஞ்சாக இருந்தால், திருஞான சம்பந்தன் என்று பாராட்டி இருப்பார்கள். இவன் சூத்திரனுக்குப் பேரன்தானே'' என்பது கருணாநிதி தந்த வாசகங்கள். ஆனால், அது மதுரைச் சம்பவத்துக்குப் பிறகு மொத்தமாகத் திசை மாறிப் போனது.
தயாநிதி கவனித்து வந்த டெல்லி காரியங்களை இனி யார் பார்த்துக்கொள்வது என்ற கேள்வி எழுந்தபோது, ''நம்பிக்கையாக இருக்கணும். இங்கிலீஷ் நல்லாத் தெரியணும். தங்கச்சி கனி இருக்குதே...'’ என்று மு.க.அழகிரிதான் அப்போது எடுத்துக் கொடுத்தார் என்பார்கள். அந்தச் சமயத்தில், ''கனிமொழிக்கு ஏதாவது பதவி கொடுப்பீர்களா?'' என்று கேட்கப்பட்டது. ''காய், கனி ஆகும்போது பார்க்கலாம்'' என்றது மு.க-வின் வாய்ஜாலம். அடுத்த சில வாரங்களில் கனிமொழி மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆனார். தயாநிதி வகித்து வந்த அதே தொலைத்தொடர்புத் துறை, ஆ.ராசாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது ராசாவுக்கும் தயாநிதிக்கும் இடையே ஓர் அறிக்கைப் போர் நடந்தது. பி.எஸ்.என்.எல். நிறுவனத் துக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக தயாநிதி மீது ஆ.ராசா பகிரங்கமாகக் குற்றம் சாட்டி திகிலைக் கிளப்பினார். இன்று '2ஜி’ பற்றிப் பேசுபவர்கள்கூட இதை ஏனோ மறந்துவிட்டார்கள்!
இன்று விஸ்வரூபம் எடுத்து தி.மு.க. குடும்பத்தின் ஒவ்வொரு தலையாகக் கபளீகரம் செய்துவரும் ஸ்பெக்ட்ரம் தொடர்பான அசிங்கங்கள் மெள்ள மெள்ள மீடியாவின் வாசலுக்கு வரத் துவங்கியதும், அந்தக் குடும்ப மோதலுக்குப் பிறகுதான்!
'மீடியாவை வைத்துக்கொண்டுதானே அதிகாரம் செலுத்துகிறார் தயாநிதி. அதையே நாமும் செய்தால் என்ன?’ என்று அழகிரி தரப்பு யோசித்தது. அதன் பிறகுதான் 'கலைஞர் டி.வி.’ உதயம் ஆனது. சுமங்கலி கேபிளுக்குப் பதிலாக இவர்கள் ராயல் கேபிளைத் தொடங்கினார்கள். அதாவது, தயாநிதி மாறனின் இரண்டு பலங் களைப் பலவீனப்படுத்தத் தொடங்கினார்கள்!
டெல்லி குருஷேத்திரத்தைக் களமாக்கி, தி.மு.க. குடும்பம் இரண்டு அணிகளாக நடத்திக்கொண்ட அந்த 'நவீன பாரத' யுத்தத்தில் சூழ்ச்சிகளுக்கு எந்தத் தரப்பிலுமே பஞ்சம் இல்லை. நஷ்டங்களும் அப்படியே!
2008 செப்டம்பர், அக்டோபரில் ஸ்பெக்ட்ரம் டெண்டர்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது. அடுத்த மாதமே, இது மீடியாக்களில் வெளியானது. நவம்பர் 3-ம் தேதி யுனிடெக் நிறுவனத் தலைவர் ரமேஷ் சந்திராவிடம் டெலிபோனில் பேசிய நீரா ராடியா, ''மீடியாக்கள் இந்த விஷயத்தைக் கண்டுபிடித்துவிட்டன. இது சன் டி.வி, ஜெயா டி.வி-யில் வருகிறது. ஸ்வான் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்துகொடுத்து, ஆ.ராசா பயன் அடைந்ததாக அவை சொல்கின்றன. ஜெயா டி.வி-யாவது அ.தி.மு.க-வைச் சேர்ந்தது. ஆனால், சன் டி.வி. மாறன் குரூப்பைச் சேர்ந்தது'' என்று குழப்பம் அடைந்தவராகப் பேசுகிறார். அதாவது, 'தனது பதவியைப் பறித்த தி.மு.க-வைப் பழிவாங்கவே, இந்தச் செய்திகளை தயாநிதி மாறன் லீக் செய்தாரோ’ என்ற அர்த்தத்தில் நீரா ராடியாவின் வாக்குமூலம் பதிவாகி உள்ளது.
மோதலை முடித்துக்கொள்ள இரு தரப்பிலும் மாறி மாறிப் பேச்சுவார்த்தைகள் நடந்து, வெளியி லும் உள்ளேயுமாகப் பல உடன்பாடுகள் ஏற்பட்டு, எல்லோரும் கூடிச் சிரித்து, 'கண்கள் பனிக்க... இதயம் இனிக்க' புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தாலும், மோதல் நெருப்பின் கங்குகள் அணையாமல் உள்ளே கனன்றுகொண்டேதான் இருந்தன.
அது மட்டுமா... நெஞ்சம் இனித்த அந்த தினத் தன்று இரு தரப்பினரும் உள்ளே நுழைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் ஒரு விஷயம் நடந்ததாகச் செய்திகள் உண்டு. சமாதான அறிவிப்பு ஸ்தலமான கோபாலபுரத்தில் இருந்து ராஜாத்தி அம்மாளுக்கு போன் செய்த கருணாநிதி, ''அவங்க எல்லாரும் தனியாப் பேசி ஒண்ணு சேர்ந்துட்டாங்க. இது எதுவுமே எனக்குத் தெரியாது!'' என்றாராம். அதாவது, மாறன் சகோதரர்கள் மறுபடி கோபால புரத்துடன் உடன்பாடு கண்டதை சி.ஐ.டி. காலனி ரசிக்கவில்லை!
''தயாநிதி மாறன் மட்டும் அல்ல... அவரை ஆதரிப்பவர்களும் எனக்கு எதிரிகள்தான்'' என்று சொன்ன அழகிரியும், ''நான் என்ன தவறு செய்தேன்? அவரைப்போல் போட்டி வேட்பாளரை நிறுத்தி முன்னாள் சபாநாயகரைத் தோற்கடித்தேனா?'' என்று கேட்ட தயாநிதியும்... கை குலுக்கிக்கொண்டார்கள். ''நீதான் இங்கிலீஷ் நல்லாப் பேசுவியே!'' என்று அழகிரியால் ஆசீர்வாதம் செய்து அழைத்து வரப் பட்ட கனிமொழி, மீண்டும் தனித்துவிடப்பட்டார்.
ஸ்பெக்ட்ரம் புகாரோ, எதிர்க் கட்சிகள் மற்றும் ஊடகங்களால் பலமான அலைவரிசையில் போட்டுத் தாக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் டெல்லி சென்ற கருணாநிதியிடம் ஸ்பெக்ட்ரம் பற்றிக் கேட்கப்பட்டது. ''ஸ்பெக்ட்ரம் விவகாரம் முடிக்கப்பட்டுவிட்டது'' என்றார் அவர். கருணாநிதி குடும்பமும் மாறன் குடும்பமும் ஒன்றிணை வதால், ஸ்பெக்ட்ரம் விவகாரம் எப்படி முடிக்கப்பட்டுவிடும்?
தொடர்ந்து நடந்ததை நாடு அறியும்!
ஆ.ராசா, கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்தது... தயாளு அம்மாள் கை விலங்கில் இருந்து தப்பினார். ''அந்தக் குடும்பத்துல எல்லாரும் தப்பிட்டாங்க. கனிமொழி மட்டும் என்ன பாவம் செய்தார்? தயாநிதிதான் இது எல்லாத்துக்கும் காரணம்'' என்று சி.ஐ.டி. காலனியில் சோகமும் சீறலுமாகக் கேள்வி ஒலித்தது. இப்போது 'தயாநிதி மாறனுக்கு எதிராக சிவசங்கரன் வாக்குமூலம்' என்று புதிய புயல் வீசும் நிலையில், தி.மு.க. தரப்பு கவனமாக அமைதி காத்துக்கொண்டு இருக்கிறது - அடுத்து நடப்பதை எதிர் நோக்கி!
அலைக்கற்றை விவகாரம் ஆ.ராசா காலத்தில் இருந்து ஆரம்பமான விஷயம் அல்ல. தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த நேரத்திலும் சில முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்று 'தெகல்ஹா’ சொல்ல... அவருடைய பதவி, சி.பி.ஐ-யின் குற்றப்பத்திரிகையை எதிர்நோக்கித் தள்ளாடிக்கொண்டு இருக்கிறது. 'குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்படுவதாலேயே ராசா குற்றவாளி ஆகிவிட மாட்டார்’ என்று வக்காலத்து வாங்கிய கருணாநிதி, ''தயாநிதி தனது பிரச்னைகளைத் தானே பார்த்துக் கொள்வார்'' என்று சொன்னதன் உள் அர்த்தம் அந்தக் கனல் ஆறவில்லை என்பதையே காட்டுகிறது.
''ஆ.ராசா, கனிமொழி கைதுக்குக் காரணமே தயாநிதி மாறன்தான்'' என்று சொல்லும் ஒரு தரப்பு தி.மு.க-வினர், ''நாளைக்கு தயாநிதி மாறனுக்குச் சிக்கல் வலுத்தால் அதற்கு ஆ.ராசாவும் கனிமொழி யும்தான் காரணமாக இருப்பார்கள்'’ என்றும் சொல்லத் தவறவில்லை!
கருணாநிதியை, அவர் குடும்பத்து உட்பகையே உறக்கம் இல்லாமல் செய்துவிட்டது. இதில் இருந்து தப்பிக்க மந்திரக்கோல் எதுவும் இப்போதைக்கு அவர் கை வசம் இல்லை. அப்படி ஒன்று இருந்தாலும்... அது இரண்டாக உடைந்துபோனதாகவே சொல்லலாம்.
Thanks : Vikatan
D.M.K & Congress | தீ.மு.க வும் காங்கிரசும், தி.மு.க அறிவிப்பு
தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் என்ற அறிவிப்பு வெளியானதும், அடுத்தது என்ன நடக்கும் என்ற பரபரப்பு அரசியல் அரங்கில் ஏற்பட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர் நெருக்கடிகளால், துவண்டு போயுள்ள தி.மு.க., மத்திய அரசில் இருந்து விலகும் முடிவை எடுக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், இந்த கூட்ட முடிவில், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என தி.மு.க., தலைமை அறிவித்திருப்பது, அக்கட்சி தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தி.மு.க., - காங்கிரஸ் உறவில் சிக்கல் இப்போது திடீரென துவங்கியதில்லை. தி.மு.க., ஆட்சியிலிருந்தபோதே, பாத யாத்திரை சென்ற இளைஞர் காங்கிரசார், வழி நெடுகிலும் தி.மு.க ஆட்சியை விமர்சித்தனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளங்கோவன் உட்பட பலர், எதிர்க்கட்சிகளை விட கடுமையாக தி.மு.க.,வையும், கருணாநிதி குடும்பத்தையும் விமர்சித்தனர்.இதை தி.மு.க., கண்டு கொள்ளவில்லை. தேர்தலின் போது, கூடுதல் சீட் கேட்டு, காங்கிரஸ் கட்சி அடம்பிடித்தது. உடனே, மத்திய அரசிலிருந்து விலகுவதாக தி.மு.க., தலைமை அறிவித்தது. ஆனால், மறுநாளே காங்கிரஸ் கட்சியிடம் தி.மு.க., சரணடைந்தது. மத்திய அமைச்சரவையிலிருந்து விலகும் முடிவை வாபஸ் பெற்றது. காங்கிரஸ் கட்சி கேட்ட இடங்களை வாரி கொடுத்தது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், ராஜா கைது செய்யப்பட்ட பின், மற்றவர்கள் கைதாவதை தடுப்பதற்காகவே, காங்கிரஸ் கட்சி இழுத்த இழுப்பிற்கெல்லாம் தி.மு.க., உடன்பட்டது. இந்த அடிகளுக்கெல்லாம் பேரிடியாய், சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.தேர்தல் முடிந்ததும், ராஜ்யசபா எம்.பி.,யும், கருணாநிதி மகளுமான கனிமொழி கைது செய்யப்பட்டார். குறைந்தபட்சம் அவர் கைதாவதையாவது, மத்திய அரசு தடுத்திருக்கலாம் என, தி.மு.க., தலைவர் மட்டுமின்றி, தொண்டர்களும் நினைத்தனர்.காங்கிரஸ் கட்சியோ, ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட் நேரடி கண்காணிப்பில் நடைபெறுவதால், நாங்கள் தலையிட முடியாது என கூறி விலகிக் கொண்டது. ராஜா, கனிமொழி ஆகியோரை தொடர்ந்து, தற்போது தயாநிதிமாறனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து ஏற்பட்ட நெருக்கடி, தி.மு.க.,வை நிலைகுலையச் செய்துள்ளது.மகள் கனிமொழி சிறையில் வாடுவது, தி.மு.க., தலைவர் கருணாநிதியை கடும் மன உளைச்சலுக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் அடுத்தக்கட்ட முடிவை எடுப்பதற்காக தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழு கூடியது. எனவே, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவு இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. ஆனால், தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்ட முடிவு, "சப்'பென முடிந்து விட்டது.இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. சி.பி.ஐ.,க்கு கண்டனம் தெரிவித்து மட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் முடிந்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் பேசும் போது, "காங்கிரஸ் கட்சியுடனான உறவில் எந்த சிக்கலும் இல்லை. ஸ்பெக்ட்ரம் வழக்கில் தலையிடும்படி, மத்திய அரசை நாங்கள் நிர்பந்திக்கவில்லை' என கூறினார்.தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்து நிருபர்கள் கேட்ட போது, கருணாநிதி கடுமையாக கோபப்பட்டார்.
"சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டதற்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது குறித்தெல்லாம் கேட்காமல், கனிமொழி வழக்கை மட்டும் பேசுகிறீர்களே' என எரிந்து விழுந்தார். "காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடில், சட்டசபை தேர்தல் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளதே' என கேட்ட போது, "தி.மு.க., தோல்விக்கு பார்ப்பனர்களே காரணம்' என்றார்."மத்திய அரசிலிருந்து விலகினால், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை சந்திப்பது சிரமமாக இருக்கும் என்பதாலே, மத்திய அரசிலிருந்து விலகவில்லை' என கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும், கருணாநிதியின் குடும்பத்திற்கும், கட்சிக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள காங்கிரஸ் கட்சியை விட்டுக் கொடுக்காமல் இப்போதும் கருணாநிதி பேசியது, தி.மு.க., தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."எவ்வளவு அடித்தாலும் தாங்குவோம்' என, நம்மை நினைக்குமளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளதாக தி.மு.க., தொண்டர்கள் குமுறத் தொடங்கியுள்ளனர்.
Thanks : Dinamalar - News Source - http://www.dinamalar.com/News_Detail.asp?Id=256007
War Crime in Eelam | ஈழத் தமிழர்களின் கண்ணீர் உங்கள் கண்களுக்கு தெரிய வில்லையா? வைகோ
பெல்ஜியத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசும்போது, ஈழத்தமிழர்களின் கண்ணீர் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? அவர்களின் ஈனக்குரல், பெண்கள், குழந்தைகள், தாய்மார்கள் அழுகுரல் அனைத்துலக காதுகளுக்கு கேட்கவில்லையா? என்று பேசினேன். இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க ஈழத்தமிழர்கள் என்ன பாவம் செய்தார்கள்?. தமிழர்களாக பிறந்தது தான் அவர்கள் செய்த பாவமா? என்று கேட்டேன். எனக்கு 15 நிமிட நேரம் தான் ஒதுக்கினார்கள். அதற்குள் என்ன முக்கிய விஷயங்களை சொல்ல முடியுமோ? அதனை கூறினேன்.
பதுங்கு குழிகளில் பதுங்கி இருந்த பெண்கள், குழந்தைகள், முதியோர் என எல்லோரையும் குண்டு வீசி கொன்றது இலங்கை அரசு. குண்டுவீச்சு நின்று விட்டது என நினைத்து வெளியே வந்த குழந்தைகள் மீதும் குண்டுவீசி கொன்றது இலங்கை ராணுவ விமானங்கள்.அறம் வெல்லும். நீதி வெல்லும். உண்மை ஒரு நாள் வெல்லும். என் வாய் பேச முடியும் வரை நான் இவற்றை பேசிக்கொண்டு தான் இருப்பேன். ஐரோப்பிய மாநாட்டில் இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதில்லை. வேறு பல உதவிகளும் நிறுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். போர்க்குற்றம் புரிந்தவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்றார்.
Actor Vadivelu's Election Secreats after 2011 D.M.K Defeat | வடிவேலு வெளியிடும் தேர்தல் ரகசியம்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திடீர் சூறாவளியாகக் கிளம்பி விஜயகாந்த்தைச் சுளுக்கெடுத்தவர் வடிவேலு. 'அவரு கேப்டன்னா... நான் டாப் டென்!’ என ஆரம்பித்து, 'தண்ணி’லை விளக்கம் வரை வடிவேலு அதிரடிகள் நீள... தி.மு.க. புள்ளிகளே திகைத்துப்போனது உண்மை. ஆனால், தேர்தல் முடிவு வேறு விதமாக அமைய... வடிவேலுவின் காட்டில் மீண்டும் கல் மழை!
''கால்ஷீட் ஒதுக்க நேரம் இல்லாத அளவுக்கு பிஸியா இருந்த நீங்க, திடீர்னு பிரசாரத்தில் குதிக்க என்ன காரணம்?''
''என் சொந்தப் பிரச்னைக்கோ, சொத்துப் பிரச்னைக்கோ, நான் பிரசாரத்தில் குதிக்கலை. எப்பவுமே யாரோட வம்புதும்புக்கும் போகக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான். ஆனா, நான் ஒதுங்கிப்போக நினைச்சாலும், அதுக்கு சிலர் வழிவிடலை. குழந்தைங்க முதல் பாட்டி வரை எல்லோரையும் சிரிக்க வைக்க நினைக்கிற எனக்கு இப்படி ஒரு இக்கட்டு. ஒரு புழுவை மிதிச்சாலும் எத்தனை நாளைக்கு அது பொறுத்துக்கிட்டு இருக்கும். அதான் அடக்க முடியாம பொங்கிக் கிளம்பிட்டேன்!''
''விஜயகாந்த்துக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்னை?''
''சில விஷயங்களை விளக்கிச் சொன்னாத்தான் புரியும். 2007-ல் அவரோட படத்துக்காக என்கிட்ட வந்து பேசினாங்க. ஓப்பனிங் ஸாங்கே நான்தான் பாடணும்னு வற்புறுத்தினாங்க. அவர் கட்சி கொடியைப் பிடிச்சுக்கிட்டு நான் பாடுற மாதிரி ஸீனுக்கு ரொம்ப வற்புறுத்தினாங்க. 'அய்யா, ஆளை விடுங்க!’ன்னு விலகிட்டேன். அடுத்தபடியா 'கருப்பு எம்.ஜி.ஆர்-தான் அடுத்த முதல்வர்’னு நான் அவரைப் பார்த்து வசனம் பேசணும்னு சொன்னாங்க. ஒருத்த ரைப் புகழ்ந்தா, அடுத்தவங்க கோபப்படுவாங்க. அந்தப் பொல்லாப்பு நமக்கு எதுக்குன்னு தவிர்த்திட்டேன். 'அப்போ நான் முதல்வர் ஆவதில் வடிவேலுவுக்கு விருப்பம் இல்லையா?’ன்னு அவர் வருத்தப்பட்டாராம். வருங்கால முதல்வர்னு நான் ஒருத்தன் கூவினா, அவர் முதல்வராகிட முடியுமா? இதுதான்யா ஆரம்பப் பிரச்னை. அதுக்கு அப்புறம் என் வீடு முழுக்கக் கல் எறிஞ்சு அவங்க பண்ணின அடாவடி எல்லோருக்கும் தெரிஞ்சது தான். ஆனாலும், நான் அமைதியா இருந்தேன். அடுத்த தடவை நடந்த கல் வீச்சில் என் குழந்தைக்கு மண்டை உடைஞ்சிடுச்சு. நான் தனி மனிதனாத் தவிச்சு அழுதது அன்னிக்குத்தான் தம்பி. பெத்த புள்ளைங்களுக்காகத்தானே நாம சம்பாதிக்கிறோம்; கஷ்டப்படு றோம். அப்படி இருக்க, புள்ளைங்களுக்கு ஒரு இடைஞ்சல் வர்றப்ப எப்படிப் பொறுத்துக்க முடியும்? வெளியில தெரிஞ்சது இது... சொல்லக் கூசுற அளவுக்கு இந்த ரெண்டு வருஷத்துல நான் படாதபாடு பட்டேன். ஊரையே சிரிக்க வெச்ச ஒருத்தன் பொழப்பு, சிரிப்பா சிரிச்சது யாருக்குத் தெரியும்? 'வடிவேலுவுக்கு இது தேவையா’ன்னு கேட்ட யாருக் காவது என்னைச் சுத்தி நடந்த இத்தனை பிரச்னையும் தெரியுமா?''
''இதனால்தான் பிரசாரத்துக்குப் போனீங் களா? இல்லை, தி.மு.க-வில் இருந்து யாராவது வற்புறுத்தினாங்களா?''
''நான் வான்டடா போன ஆளுய்யா! திடீர்னு ஒருநாள் கோபாலபுரம் போனேன். 'அய்யா, உங்களுக்காக நான் பிரசாரம் பண்றேன்’னு சொன்னேன். கலைஞர், அழகிரி, ஸ்டாலின் எல்லோருக்கும் ஏக சந்தோஷம். அப்போ, 'நான் உங்களுக்கு ஆதரவா மட்டும்தான் பேசுவேன். அந்தம்மாவை நான் தாக்கிப் பேசமாட்டேன்’னு சொல்ல நான் வாயெடுத்தேன். நாடி ஜோசியர் மாதிரி என்னைக் கூப்பிட்ட கலைஞர், 'அரசோட திட்டங்களை மட்டும் நீங்க பேசுங்க... அந்த அம்மாவைத் திட்டிப் பேசாதீங்க’ன்னு சொன்னார். எனக்கு வாயடைச்சுப்போச்சு. ஒருத்தனோட மனசுக்குள்ள இருக்கிற விஷயத்தைக்கூட தெளிவாத் தெரிஞ்சு வெச்சிருக்கிற தலைவர்யா அவர். உசுப்பேத்துவாங்கன்னு பார்த்தா, இப்படி ரியலா பேசச் சொல்றாங்களேனு எனக்குத் திகைப்பு தாங்கலை!''
''ஓஹோ... விஜயகாந்த்துக்கு எதிரா நா கூசும் அளவுக்குத் தனி மனிதத் தாக்குதல் நடத்தியது நியாயமா?''
''தப்புதான்... நான் தனி மனிதத் தாக்குதல் நடத்தியது தப்புதான். 'அவர் அப்படிப் பண்றார், இப்படிப் பண்றார்’னு நான் பேசினது தப்புதான். தனி மனிதத் தாக்குதல் பற்றி ஆதங்கப்படுறவங்க, அரை மணி நேரம் என் வீட்டு வாசல்ல வந்து நின்னு பாருங்க சார். உங்க காதே கருகிப்போற அளவுக்குத் திட்டுவாங்க. இன்னிக்கும் அப்படித்தான் நடக்குது. அது தப்பு இல்லையா?''
''உங்களுடைய பிரசாரத்தையும் மீறி விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவராகவே உட்கார்ந்துட்டார். இனி, உங்களின் நிலைப்பாடு?''
'' 'சின்னக் கவுண்டர்’ பட ஷூட்டிங் நடந்த நேரம்... என்னையப் பார்த்து எந்த ஊர்னு கேட்டார் அந்த ஆள். 'மதுரை’ன்னு சொன்னேன். 'ஒரு நாளைக்கு அம்பது ரூபா சம்பளம் வாங்குற நீ எல்லாம் ஊரப் பார்க்கப் போனா என்னய்யா?’னு கேட்டார். அன்னிக்கே என்னை ஊருக்கு அனுப்புற திலேயே குறியா இருந்தார். என்ட்ரியானப்பவே என்னையப் பார்த்து எளக்காரமாக் கேட்ட ஆளு, என்னோட இந்த அளவுக்கான வளர்ச்சியை எப்படிப் பொறுப்பார்?
தேர்தல்ல அவர் ஜெயிச்சிட்டார்னா, ஜெயிக்கவெச்ச மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டியதுதானே? அதை விட்டுட்டு, நாய் வைக்கோல் போரைச் சுத்துற மாதிரி எந்த நேரமும் என் வீட்டையே சுத்திக்கிட்டு இருந்தா எப்படி? என்னைய அடிக்கத்தான் மக்கள் உங்களை ஜெயிக்க வெச்சாங்களா? 'நாங்க அந்தம்மாவோட உருவ பொம்மையவே எரிச்ச ஆளுங்க... எங்க வலிமை தெரிஞ்சு தான் அந்தம்மா எங்களைக் கூட்டணியில் சேர்த்துக்குச்சு. அவங்களுக்கு முன்னால நீ எம்மாத்திரம்? கவர்மென்ட்டே எங்களோடது’னு நைட்டும் பகலும் என் வீட்டுல நின்னு கத்துறாங்க. அந்தம்மாவுக்கு வீசிய ஆதரவு அலையில ஜெயிச்சிட்டு, இப்படி அபவாதம் பேசலாமாண்ணே... இன்னும் என்ன வேணும்னாலும் பேசட்டும்ணே... நான் இனி பின்வாங்கப்போறது இல்லை. மனசுக்குள்ளகிடக்குற ரணம் இன்னும் ஆறலைண்ணே... அந்த வெறி அடங்கலை. அடக்கவும் மாட்டேன். அவர் சட்டசபைக்கு உள்ளே எதிர்க் கட்சித் தலைவர்னா, வெளியில் அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் நான்தான்!''
''பிரசாரத்தில் இறங்கியதால், இப்போ பட வாய்ப்புகளே இல்லாமல் உட்கார்ந்து இருக்கீங்களே... வருத்தமா இல்லையா?''
''மனசு முழுக்க இருந்த ரணத்தைக் கொட்டித் தீர்த்த நிம்மதியில் இருக்கேன். அவரோட அத்தனை அடாவடிகளையும் வெளியே சொல்லாமல் தாங்கி இருந்தா, நெஞ்சு வெடிச்சே செத்திருப்பேன். பட வாய்ப்புகள் குறைஞ்சா, எனக்கு வருத்தம் இருக்காது. சிந்திக்கவும் ஓய்வெடுக்கவும் இந்த இடைவெளி எனக்கு அவசியமாப் படுது. கொஞ்ச காலம் ஒதுங்கித்தான் இருப்போமே... வடிவேலுவோட காமெடி தேவைன்னு தோணிச்சுன்னா... மக்களே நம்மளை நடிக்கவைப்பாங்க சார்!''
''வடிவேலுவுக்கு இந்த வீம்பு தேவையான்னு சினிமாக்காரங்களே குரல் எழுப்புறாங்களே?''
''வயித்துப்போக்கும் வாந்தியும் அவன் அவனுக்கு வந்தாத்தானே தெரியும். நியாயமான சினிமாக்காரங்க நிச்சயம் என்னைப்பற்றிப் பேசி இருக்க மாட்டாங்க. ஆட்சிக்குத் தகுந்த மாதிரி நாக்கை மாற்றிப் பேசுறவங்கதான் என்னை வசை பாடி இருப்பாங்க. நான் பிரசாரம் பண்ணினப்ப கூடின கூட்டத்தைப் பார்த்து மிரண்டவய்ங்க எத்தனை பேர்னு எனக்குத் தெரியும். 'இவனுக்கு ஏன்டா இம்புட்டுக் கூட்டம்?’னு வயிற்றெரிச்சலோட தூக்கம் வராமத் தவிச்சவய்ங்களையும் தெரியும். கூட்டம் கூட்டமா திரண்ட மக்கள்தான் என்னோட சொத்துங்கிறதை இந்தத் தேர்தல் பிரசாரத்தில் பார்த்துட்டேன் சார்!''
'' 'ராணா’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதால், 'ராணா படமாவது, கானா படமாவது’ என ரஜினியைத் திட்டியது தவறு என உணர்கிறீர்களா?''
''யார் சொன்னா? அவருக்கும் எனக்கும் எப்பவாச்சும் பிரச்னை வந்திருக்கா? மத்தவங்க மாதிரி முதல்வர்னு என்னை முழங்கச் சொன்னாரா... ஆள் அனுப்பினாரா... வம்பு இழுத்தாரா? எதுக்கும் என்னை ரஜினி வற்புறுத்தலை. அப்படியிருக்க ஏன் இப்படி எல்லாம் முடிச்சுப் போடுறாங்க? கலைஞர் அய்யாவைப் பார்த்துட்டு வெளியே வந்தப்ப, 'ராணா படத் தில் இருந்து உங்களை நீக்கிட்டாங்களாமே?’னு கேட்டாங்க. 'ராணா படமா இருந்தாலும் சரி, கானா படமா இருந்தாலும் சரி... இல்லை என் கேரியரே அவ்வளவுதான்னாலும் சரி... என் பிரசாரத்தைத் தொடரவே செய்வேன்’னு வடிவேலு சொன்னேன். இதில் அவரை நான் எந்த இடத்தில் திட்டுறதா அர்த்தம் வருது? எனக்குச் சிக்கலை உண்டாக்கணும்னு அவரோட மோதல்னு கிளப்பிவிடுறது நியாயமா? அவரை வடிவேலு ரொம்ப மதிக்கிறேன். 'சந்திரமுகி’ பார்த்த ரஜினி ரசிகர்களுக்கு என்னை நல்லாத் தெரியும்!''
''அரசியலில் அடுத்த கட்டம்?''
''கல் எறிஞ்சு களைப்பாகிக்கிடக்கிறவங்கதான் அதைத் தீர்மானிக்கணும். அவங்க நடந்துக்கிறதைப் பொறுத்துதான்... என்னோட நடவடிக்கையும் இருக்கும்... ஆமா!''
Thanks : Vikatan | http://new.vikatan.com/article.php?aid=6635&sid=186&mid=1
அமைச்சர் ந.மரியம் பிச்சை மரணம் | N.Mariyam Pitchai, The Tamilnadu Minister Passes Away
தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுப்புறச் சூழல் துறை அமைச்சர் ந.மரியம் பிச்சை இன்று அகால மரணமடைந்தார்.Tamil movie songs
எங்கள் G+
விளம்பரதாரர்
வலைப்பூ பெட்டகம்
-
▼
2014
(
109
)
-
▼
August
(
12
)
- Venture Capital in tamil :- வென்ச்சர் கேபிட்டல்
- Poultry Farming:- கோடிகளில் பணம் சம்பாதிக்க கோழி ப...
- TN TET 2014 results
- Business'es That you can do from home:- சிறந்த 10 ...
- Hand Gloves Making:- கையுறை தயாரிப்பு தொழில்
- Microsoft Office 2013:- எம்.எஸ்.ஆபீஸ் 2013
- டெஸ்க்டாப் பகுதியில் சேவ் செய்வதில் உள்ள பிரச்னைக...
- Get 100 GB Storage by Using Bing |
- Heart proplems and T.M.T: இதய ரத்தக்குழாயில் அடைப்...
- கெடுவான், கேடு நினைப்பான் - ஜெயதேவர்
- Chrome browser tips in tamil :- குரோம் பிரவுசர் டி...
- Facebook beats Microsoft and Google: முதல் இடத்தி...
-
▼
August
(
12
)






