திருமணமாகாத இளம்பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உள்ளது என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்து சமூக சட்டத்தின் படி ஆண்வாரிசுகளுக்கு மட்டுமே சொத்துக்களை நிர்வகிப்பதற்கு உரிமை உண்டு என்ற பழக்கம் கடைபிடித்து வருகின்றது.
தமிழ்நாடு உட்பட ஒரு சில மாநிலங்களில் மட்டும் திருமணமான பெண்களுக்கும் மூதாதையாரின் சொத்துக்களில் பங்கு உண்டு என்று சட்டம் இயற்றியுள்ளது. இருப்பினும் பெரும்பாலான மாநிலங்களில் பெண்களுக்கு சொத்துரிமை என்பது மறுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் வந்த வழக்கு ஒன்றில் ஆஜரான நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் மணமாகாத இந்து சமூக பெண்களுக்கும் வாரிசுரிமை சட்டப்படி தங்களது மூதாதையர் சொத்துக்களில் பங்கு கேட்க உரிமை உள்ளது என்று அவர்கள் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பெண்களுக்கு சொத்துரிமை கிடைக்கச் செய்வதில் அவர்களுக்கு உள்ள உரிமைகள் குறித்து ஒவ்வொரு மாநிலமும் சட்டத்தின் மூலம் அதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். Source : diamalar
No comments :
Post a Comment