ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவை தமிழகத்திற்கு வருமாறு, தமிழக முதல்வர் ஜெயலலிதா தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அமோக வெற்றியை பெற்றமை குறித்து, ரணில் அனுப்பி வாழ்த்து செய்திக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தொலைபேசியில் தொடர்புக்கொண்டு உரையாற்றும் போதே ஜெயலலிதா இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
முதலமைச்சரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், தமிழகத்திற்கு குறுகிய கால விஜயம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடிய இவரும், இலங்கையின் வடக்கு கிழக்கு நிலவரங்கள் குறித்து கவனம் செலுத்தியதாக எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சகல மக்களும் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வு வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த தீர்வானது சகல தரப்பினரின் இணக்கத்துடன் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருடனான தொலைபேசியில் கலந்துரையாட ப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Thanks : Globaltamilnews.Net
No comments :
Post a Comment