கறுப்புபணம் குறித்து மத்திய அரசின் நடவடிக்கை என்ன? What is the stand on Illegal Money

கறுப்புபணம் குறித்து மத்திய அரசின் நடவடிக்கை என்ன என்பதனை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டால், 6 லட்சம் கிராமங்களுக்கு செலவிடாலம் என பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி கூறினார். ஊழலுக்கு எதிராகவும், கறுப்புபணத்தை மீட்க வலியுறத்தியும், பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி, கடந்த 11-ம் தேதி தனது ரத யாத்திரையை துவக்கினார். இந்நிலையில் தனது ரதயாத்திரை ஒடிசா வந்தடைந்தது.

கட்டாக் நகரில் செய்தியாளர்களிடம் அத்வானி கூறியதாவது: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கறுப்புபணத்தை மீட்க நடவடிக்கை எடுப்பதாக கூறிவருகிறது. ஆனால் அதற்கான முயற்சியை எடுத்ததாக தெரியவில்லை. தற்போது, சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புபணம் 25 லட்சம் கோடிவரை பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சுவிட்சர்லாந்து அரசுடன் இந்தியர்களின் கறுப்புபணம் குறித்து சட்ட ரீதியான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசு கூறிவருகிறது. . மேலும் இந்தியர்களின் கறுப்புப்பணத்தை மீட்டு கொண்டு வந்தால். இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களுக்கு தேவையான, பள்ளி, கல்வி, சுகாதாரம், மின்சாரம் , சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு செலவிடலாம். கறுப்புப்பணம் பதுக்கியவர்களின் ஒவ்வொரு சல்லி காசும் இந்திய கிராமங்களுக்கு ‌‌பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அத்வானி கூறினார்.

கறுப்பு பண விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தற்போதைய நிலை என்ன ? என்ன நடவடிக்கைகள் எடு்த்துள்ளது என்பது குறித்து வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்


Thanks: Dinamalar

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf