வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல் தேவையானவை:
வஞ்சிர மீன் - 4 துண்டு
எலுமிச்சம் பழச்சாறு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த் தூள் - 25 கிராம்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தனியாத் தூள் - 10 கிராம்
மிளகுத் தூள் - 5 கிராம்
சீரகத் தூள் - 5 கிராம்
அரிசி மாவு - 10 கிராம்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல் செய்முறை:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மசாலாவைச் சேர்த்து மீனை ஊற வைக்கவும். உப்பை சரிபார்க்கவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். எண்ணையில் பொரித்தெடுத்த கறிவேப்பிலையை, மீன் துண்டுகளின் மீது தூவி விடவும்.
எலுமிச்சை துண்டுகளை வைத்து பரிமாறலாம்.
இது சாதம் சாம்பாருடன் சாப்பிடவும், வெறுமனே சாப்பிடவும் சுவையானதொரு வறுவலாகும்.
குறிப்பு
மீன் கலவையை ஊற வைக்க சிறிது இஞ்சி, பூண்டு விழுதும் தேவையானால் சேர்க்கலாம்.
இதே வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல் முறைப்படி இறாலைக் கொண்டு கறிவேப்பிலை பிரான்ப்ரையும் தயார் செய்யலாம்.
No comments :
Post a Comment