Dress to Look Slim & Fit: குண்டாக இருப்பவர்கள், ஒல்லியாகத் தெரிய உடையலங்காரம்

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், உடற்பயிற்சி மூலம் உடலைக் குறைக்கலாம்; அதற்கு, கடுமையான முயற்சி தேவை. ஆனால், குறிப்பிட்ட வகையான சில உடைகளை அணிவதன் மூலம், அவர்கள் தங்களை எடை குறைவானவர்களாகத் தோற்றமளிக்கலாம்.

உடலின் எடை சரியாக இருந்த போதிலும், முகத்தில் அதிக தசைப் பிடிப்பு இருப்பதாலும், சிலர் குண்டாகத் தெரிவர். பெண்கள், முன்பகுதியில் உள்ள முடிக்கற்றை அடிக்கடி முகத்தில் விழும் வகையில், லூசாக விட்டு விடலாம் அல்லது "போனி டெய்ல்' முறையில் ஜடை பின்னிக் கொள்ளலாம்.கோடு போட்ட உடை அணிவதாக இருக்கும் பட்சத்தில், செங்குத்தான கோடுகள் கொண்ட உடைகளை அணியலாம். இதன் மூலம், குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாகத் தெரிவர்.பெரும்பாலும் ஒரே நிறமுடைய ஆடைகளை பே ன்ட் - ஷர்ட் / டாப்ஸ் - பாட்டம் அணிவதன் மூலமும், குண்டாக இருப்பவர்கள் தங்களை அழகாக்கி கொள்ள முடியும்.குள்ளமாக, குண்டாக இருப்பவர்கள், வழுவழுப்பான உடைகளை கண்டிப்பாக தவிர்த்தே ஆக வேண்டும். இவ்வகை உடைகள், இன்னும் உயரம் குறைந்தவர்களாகக் காட்டும்.குள்ளமாக, குண்டாக உள்ள பெண்கள், சுடிதார் அணியும் போது, கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்... தொளதொளவென்று அணியக் கூடாது. அதே போல், ரொம்ப இறுக்கமாகவும், இடுப்பு பகுதியில் அளவு குறைத்து, ஓரளவாவது ஸ்ட்ரக்சர் கொண்டு வரும்படி இருக்க வேண்டும். ரொம்ப இறுக்கமாக இருந்தால், பின்புறம் அசிங்கமாகத் தெரியும். எனவே, இடைப் பகுதியில் கவனமெடுத்து சுடிதார் அணிய வேண்டும்.ஒல்லியாக உள்ளவர்கள், மிகவும் மெல்லிய உடையை தவிர்க்க வேண்டும்; இவை, உடலை குச்சி குச்சியாக காட்டும். எலும்புகள் துருத்திக் கொண்டு அசிங்கமாக இருக்கும். சுடிதார் அணியும் போது, கையின் அளவு ரொம்ப குறைவாக வைக்கக் கூடாது. இது, உங்களின் நீண்ட கைகளை (ஒல்லியாக இருப்பதால்) இன்னும் நீண்டதாகக் காட்டும். தேர்வு செய்யும் உடை, திக்கான உடையாக பார்த்துக் கொள்வது நல்லது. நான் குண்டும் இல்ல, ஒல்லியுமில்ல, குள்ளமும் இல்ல; பர்பெக்ட்டானஸ்ட்ரக்சர். இருந்தாலும், ஸ்மார்ட்டாக தெரியலை என்று வருத்தப்படுகிறீர்களா?

இதற்கெல்லாம் காரணம் உடை மட்டுமே. ஏனோ தானோவென்று உடை அணிவதாலே அவ்வாறு தெரிகிறீர்கள். இதற்கும், உங்கள் முக அழகிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.கறுப்பாக, மாநிறமாக இருப்பவர்கள், பிரைட்டான உடைகள் தேர்வு செய்வது நலம். நீங்கள் பேன்ட் அணிபவராக இருந்தால், பெண்களுக்கு என்றே தற்போது பல பிராண்டு களில், அலுவலக உடை வெளியிட்டு உள்ளனர்; நீங்கள் அதை பயன்படுத்தலாம்.

பேன்ட் மற்றும் வழுவழுப்பான சட்டை தான் தற்போதைய பேஷன். மாடர்னாகவும், அதே சமயம் கவர்ச்சியாகவும் இருக்கும். சுடிதார் அணிபவராக இருந்தால், சரியான பிட் உள்ள இடுப்பளவு சின்னதாக உள்ள சுடிதாரை தான் தேர்வு செய்ய வேண்டும். லூசான உடைகளை அணியக் கூடாது.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf