தனி ஆவர்த்தனம் தொடரும் : தங்கபாலு | Congress will March Ahead

"உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் தனித்தே போட்டியிட்டது என்ற பெருமை காங்கிரசுக்கு மட்டுமே உண்டு. இந்த தனி ஆவர்த்தனம் தொடரும்' என, தமிழக காங்., தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் தனித்தே போட்டியிட்டது என்ற பெருமை, காங்கிரசுக்கு மட்டுமே உண்டு. இனி வரும் காலங்களில், காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும். அப்போது தான் கட்சியின் பலத்தை நிரூபிக்க முடியும். ஆளுங்கட்சியான அ.தி.மு.க., ஆண்ட கட்சியான தி.மு.க., ஆகியவை, உள்ளாட்சித் தேர்தலிலும் தங்களோடு சில கட்சிகளை கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தல் களம் இறங்கின.
மற்ற கட்சிகளும், அவரவர் நிலைகளுக்கேற்ப கூட்டணி சேர்ந்துக் கொண்டு போட்டியிட்டன. உள்ளாட்சித் தேர்தல் நல்ல முறையில் நடந்தது. ராஜிவ் கொண்டு வந்த பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும். அரசியலில் வெற்றி தேல்வி சகஜம். தேர்தல் முடிவு குறித்து ஆய்வு செய்ய தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் விரைவில் நடக்கவுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை வைத்து கட்சிகளை எடை போடக் கூடாது. உள்ளாட்சித் தேர்தல் வேறு, சட்டசபை, லோக்சபா தேர்தல் வேறு. மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு, இந்த தோல்விக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
இளங்கோவன், யுவராஜா கூறும் குற்றச்சாட்டுகளை பற்றி நான் கவலைப்படவில்லை. சத்தியமூர்த்திபவனில் நடந்த கலவரத்திற்கு யுவராஜா தான் காரணம். அவர் ஒரு வேட்பாளரை மாற்றச் சொன்னதால் அந்த சம்பவம் நடந்தது. கூட்டணிக் கட்சித் தலைவர் என்றமுறையில் சோனியாவை கருணாநிதி சந்தித்து பேசியுள்ளார். அதில் விமர்சிக்க ஒன்றுமில்லை. இவ்வாறு தங்கபாலு கூறினார்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf