[How Not to Talk]: எப்படி எல்லாம் பேசக் கூடாது

பிறருடன் பேசும் போது, கேட்பவரால் சகித்துக் கொள்ள முடியாதவாறு பேசுவர் சிலர். இப்படி பேசுவதில் முக்கியமாக ஆறு வகைகள் உள்ளன.

இஷ்டமில்லாமல் பேசுபவர்: தனக்கே இஷ்டமில்லாமல் பேசுவது ஒருவகை. இதை, எதிராளிக்கும் கேட்க இஷ்டம் இருக்காது.

இரைந்து உணர்ச்சி வசப்பட்டுப் பேசுபவர்: இதனால் கேட்பவரின் கவனம் பேசுபவரின் உணர்ச்சியில்தான் இருக்குமே தவிர, என்ன கூறு#கிறார் என்பதில் இருக்காது.

முணுமுணுப்பவர்: எத்தனை கவனமாக கவனித்தாலும், இவர் என்ன சொல்கிறார் என்றே புரியாது.

மூக்கால் பேசுபவர்: இவர் பேசுவதை கேட்கும் போது, இவர் ஏன் உடனடியாக ஒரு டாக்டரைப் பார்க்கக் கூடாது என்று நினைக்கத் தோன்றும்.

வேகமாக பேசுபவர்: மூச்சு விடாமல் சிலர் வேகமாக பேசும் போது, சில சமயம் என்ன பாஷை பேசுகிறார் என்றே புரியாது.

தயங்கி, தயங்கி பேசுபவர்: என்ன பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம் என்றே புரியாமல், தயங்கி, தயங்கி நீண்ட நேரம் எடுத்து, சில வார்த்தைகளைப் பேசுவர். இவைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
நன்றாக பேச...: பேசும் போது, உங்கள் குரல் சரியாக இல்லை என்று நினைத்தீர்களானால், அதற்கு காரணம் சரியாக மூச்சு விடு வதில்லை என்று அர்த்தம். தேவையான அளவுக்கு பேசும் போது, வாயையும் திறப்பதில்லை என்பது ஒரு முக்கியக் காரணம். யார் மூச்சு விடுவதில் சீராக வைத்துக் கொள்ளாமல் இருக்கிறாரோ, அவரால் சரியாகவும் பேச முடியாது. சரியாக பேச தொண்டைக்குப் பயிற்சி தேவை. பேசுவது தெளிவாகப் புரிய எந்த அளவுக்கு திறக்க வேண்டுமோ, அந்த அளவுக்குத் திறப்பதால் நஷ்டம் ஏதுமில்லை. தனிமையான இடத்தில் இரைந்து எதையாவது படிப்பதன் மூலம், தெளிவாகப் பேசுவதற்குப் பயிற்சி பெறலாம்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf