Gloabl Warming: குளோபல் வார்மிங்

குளோபல் வார்மிங்  அதாவது பூகோள சூடேற்றம் என்பது சமீப காலமாக உலகளாவிய பிரச்சனையாக முன்னிறுத்தப்பட்டு வருகிறது. Intergovernmental Panel on Climate Change என்ற ஐநா அமைப்பு தனது அறிக்கையில் மனித யத்தனத்தால்தான் இது நிகழ்கிறது என்று அறிவியல் சமூகம் ஒப்புக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. கார்பன் க்ரெடிட் என்று சொல்லப்படும் கார்பன் கடன் திட்டம் விரைவிலேயே அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது. ஜெர்மனி, ஃபிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் இந்த கார்பன் கடன் திட்டத்தில் தீவிரமாக இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டுக்குமான கார்பன் கால்தடம் (Carbon Footprint) என்ற கருத்தாக்கத்தை பிரேசில், இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளின் மீது கியோடா ஒப்பந்தம் மூலம் திணிக்கும் முனைப்பில் ஐரோப்பிய நாடுகளும் ஐநா சபையும் முன்னணி வகிக்கின்றன. இதற்காக பல வகையிலும் சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் பராக் ஒபாமா ஆட்சிக்கு வந்தபின் பசுமைச்சக்தி (Green energy) அரசின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு, பசுமைச்சக்தி துறைகளுக்கும், பொருட்களுக்கும் பல மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகங்களில் இதற்காக தனித்துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பசுமைச்சக்தி தொடர்பான தொடக்க நிலை தொழில்நிறுவனங்களில் பண முதலீடு பெருமளது அதிகரித்துள்ளது. பன்னாட்டு பெரு நிறுவனங்களும், எண்ணெய்க்கம்பெனிகளும்கூட பசுமைச்சக்தியை அதிகரிப்பது பற்றியும், கார்பன் கால்தடத்தைக் குறைப்பது குறித்தும் முனைப்பில் உள்ளதாய் செய்திகள் வருகின்றன. ஆக குளோபல் வார்மிங் என்ற ரயில் வண்டி நகரத் தொடங்கி விட்டது போலத்தான் தெரிகிறது. ஆனால் எதை நோக்கி என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. ஏனெனில் குளோபல் வார்மிங் குறித்த பல ஆதாரக் கேள்விகள் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றன.
"என்ன பெருசா குளோபல் வார்மிங், உலகம் சூடாவுது அவ்ளோதான்".
ஒரு சனிக்கிழமை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஸ்பென்ஸர் ப்ளாசா செல்கிறீர்கள். உள்ள போய் அதே பிகர் அதே சமுசா அதே கிசுகிசு என்று பிடிக்காமல், "நான் கார்லயே இருக்கேன் நீங்க போய்ட்டு வாங்க" என்று சொல்லிவிட்டு  பாட்டு கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். கார் ஜன்னல் மூடியிருப்பதாலும் வெளியே வெயிலாக இருப்பதாலும், கொஞ்ச நேரத்திற்கு பிறகு உள்ளே வேர்த்துக் கொட்டுகிறது அல்லவா. அது தான் குளோபல் வார்மிங்.
கடந்த நூறு ஆண்டுகளில் உலகத்தில் ஆவரேஜ் தட்ப வெட்பம் ஒரு டிகிரி பாரன்ஹீட் ஏறியிருக்கிறது. ஏன் என்று விஞ்ஞானிகள் இன்னும்  விவாதித்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறாக உலகம் சூடாவதால், தட்பவெட்ப நிலையில் பலவித மாற்றங்கள் வர வாய்ப்புண்டு. பனிப்பாறைகள் சீக்கிரம் உருகி வெள்ளம் வரலாம், மும்பையை போல நிறைய மழை பெய்யலாம், கடலின் மட்டம் அதிகமாகி மெரினாவில் வாக்கிங் போகிறவர்களை இழுத்துச் செல்லலாம்.  ஆவரேஜ் தட்ப வெட்பம் ஒரு டிகிரி பாரன்ஹீட் எறிய அதே நூறு ஆண்டுகளில் கடல் மட்டம் ஆறு முதல் எட்டு இன்சுகள் உயர்துள்ளன.
உலகம் சூடாகிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. அது இயற்கையாக் நிகழ்கிறதா அல்லது மனிதனின் அலட்சியத்தின் விளைவா என்பது தான் விவாதமே. மனிதனால் induce செய்யப்படுவதை Anthropogenic Effect என்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு ஆன்த்ரோபோஜெனிக் விளைவுதான் க்ரீன் ஹவுஸ் எஃபக்ட்(Green house effect). மேலை நாடுகளில் குளிர் காலத்தில், க்ரீன் ஹவுஸ் என்று ஒரு குட்டிக் கண்ணாடி வீட்டில் செடிகளை வளர்ப்பார்கள். நம் ஊட்டியில் கூட உண்டு. இதற்கு காரணம், கண்ணாடி வீட்டிற்க்குள் சூரியனின் கதிர்கள் பாய்ந்து உள்ளே உள்ள செடிகள், குளிரால் அழியாமல் கதகத என்று இருக்கும். உள்ளே இருந்து வெப்பம் அவ்வளவாக வெளியே போகாது. உலகம் அந்த மாதிரி ஒரு க்ரீன்ஹவுஸ்.
சூரிய கதிர்கள் அட்மாஸ்பியர்(beer அல்ல) முலமாக பாய்கின்றன. அந்த atmosphereல் உள்ள CO2, நைட்ரஸ் ஆக்ஸைட், மீத்தேன் போன்ற சில வாயுக்கள் அந்த கண்ணாடி வீட்டின் கண்ணாடி போல செயல்படுகின்றன. அட்மாஸ்பியர் இல்லாமல் போனால் உலகம் ஒரு அறுபது டிகிரி உஷ்ணம் கம்மியாக இருக்கும். நாம் குளுரில் மாண்டு விடிவோம். உலகத்தின் உள்ளே வரும் அந்த உஷ்ணத்தை உலகம் உள்வாங்கிக் கொள்கிறது. அந்த உஷ்ணம் மீண்டும் எனர்ஜியாக மேலே எழும்புகிறது. அப்படி செல்லும் எனர்ஜியை முழுவதும் வெளியே விடாமல் உலகத்தை கதகத என்று வைத்துக்கொண்டிருகின்றன greenhouse gases.
ஆனால் அட்மாஸ்பியர் கார்பன் டையாக்ஸைட் அதிகமாகி, எந்த உஷ்ணமும் உள்ளே வரலாம் ஆனால் வெளியே போக முடியாமல் போய் விட்டால், ஸ்பென்ஸர் ப்ளாசா கார் போல உலகத்திற்கு வேர்த்துக் கொட்டும். அதுதான் குளோபல் வார்மிங். இதற்க்கெல்லாம் காரணம் நீங்கள்தான். நானும்தான்.
இதை நீங்கள் படிக்கும் போதும், நீங்கள் பாட்டு கேட்கும் போதும், குளோபல் வார்மிங்கை ஆளுக்கு கொஞ்சூண்டு அதிகமாக்கி கொண்டிருக்கிறோம். இது மட்டும் அல்ல, மெகா சீரியல் பார்க்கும் போதும், குளோபல் வார்மிங் கவுண்டர் ஏறிக் கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் தேவையாயிருப்பது மின்சாரம். அவை வருவதோ கரியை எரிப்பதால். க�® �ி மற்றும் எண்ணெய் எரிக்கும் போது அவை இந்த க்ரீன்ஹவுஸ் வாயுக்களை உருவாக்குகின்றன.
50 வருடங்களுக்கு முன் இருந்த இரண்டு பில்லியன் உலக ஜனத்தொகை, 50 வருடங்களில் ஆறு பில்லியனானது என்ற கேள்வி . அதாவது கடந்த 50 வருடங்களில் நாம் 4 பில்லியன் பேர் பிறந்து இந்த உலகத்தின் population pressureஐ அதிகமாக்கி இருக்கிறோம். வேறெப்போதும் இல்லாத அளவுக்கு உலகில் உள்ள நீர் நிலம் ஆகியவற்றை உபயோகித்து வருகிறோம்.
டைம் பத்திரிக்கையும் சமீபத்தில் இந்த உஷ்ணத்தை தணிக்க 51 வழிகள் என்று  நோட்ஸ் போட்டுள்ளது. வீடுகளில் fluorescent bulbs போடுங்கள் என்பதில் ஆரம்பித்து, கார்பன் வரி கட்டுங்கள், ஸிந்தடிக் உடைகளுக்கு பதில் vintage துணிவகைகளை பயன்படுத்துங்கள், உங்கள் மாத பில்களை ஆன்லைனில் செலுத்துவதால் பேப்பர் மிச்சமாகும், ஜன்னல் கதவை திறந்தால் காற்று வரும் ஏசியின் பயன் குறையும், இரண்டு மூன்று பிளைட் பிடித்து சியாட்டலிருந்து நியுயார்க் சென்றால் பெட்ரோல் அதிகமாவதால் ஒரே ப்ளைட்டில் காசதிகமானாலும் செல்லுங்கள், உங்கள் ஊரின் உழவர் சந்தையில் காய்கறி வாங்கினால் மிச்சமாகும் பெட்ரோல் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். முக்கியமாக எல்லா நிறுவனங்களும் தனது தொழிலாளர்கள் ரொம்ப தூரம் பயணம் செய்ய விடாமல் அவர்களின் வீட்டின் அருகிலோ அல்லது வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதை ஊக்குவியுங்கள் என்கிறார்கள். கொஞ்சம் அபத்தமாய் இருந்தாலும் நமக்கு நன்மை இருப்பதால் அப்படி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கலாம்.

வானவெளியிலே முடிவற்ற கோள்கள் இருக்கையிலே நமது பூமியில் மட்டும் உயிரினங்கள் எப்படி செழிப்பா வாழ முடிகிறது? அதுக்கு முக்கிய பதில் நமது பூமியின் தட்ப வெப்பநிலைதான். இந்த மாதிரி தட்ப வெப்பநிலை இருப்பதால்தான் நமது பூமியின் தண்ணீர் எல்லாம் வற்றி போகாமல் நம் வாழ்வுக்கு வசதியாக இருக்கிறது. நீர் இல்லாத பூமியை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அதே போல் அளவுக்கு அதிகமாக உலகம் முழுவதும் குளிரா போய் நாங்கள் இங்கே இருக்க முடியாமல் போக முடியாதபடி ஒரு மிதமான தட்ப வெப்பநிலை இருக்கு.
இப்படி நம்ம பூமியின் தட்ப வெப்பநிலை நாங்க வாழகூடிய அளவுக்கு இருக்குதுன்னு பார்த்தா அதுக்கு முக்கிய கரணம் நம்மை சுற்றி இருக்கும் கற்று வெளிதான். ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், கார்பன் டையாக்ஸைட் எனப் பல வாயுக்குள் எல்லாம் கலந்து செய்த கலவை இந்த காற்றுவெளி. இதில கரியமில வாயு மற்றும் சில வாயுக்கள் (கார்பன் டையாக்சைடு, மீத்தேன்)சேர்ந்து சூரியக் கதிர்களால் நம் பூமி சூடு ஆகாமல், மற்றும் அந்த சூடு மொத்தமும் அப்படியே போய்விடாமல் இருக்க உதவுகின்றன. இவை பூமியின் மேற்பரப்பில் இயற்கையாக உருவாகும் தன்மை கொண்டவை. இவை போதிய அளவு வெப்பத்தை உருவாக்கி, பாதுகாப்பு கவசம் போல, பூமி உறைந்து போகாமல் பாதுகாக்கின்றன.
இயற்கையாக ஏற்படும் மாற்றங்களினால் காற்றுவெளியில் இந்த வாயுக்களின் சதவிகிதம் மாறுகிறது. அதனால் நம் புவியின் தட்பவெட்ப நிலையும் மாறுகின்றது. பல முறை நீண்ட உறைபனிக்காலமும் (Ice Age) அதன் பின் உண்டாகும் மாற்றங்கள் எல்லாம் இதனால்தான். இது போன்ற சுழற்சி இயற்கையாக ஏற்படுவதுதான். ஆனால் இப்பொழுது மனிதன் அதிக அளவில் நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற, பூமியிலிருந்து எடுக்கப்படும் படிம எரிபொருள்களை பயன்படுத்துவதால் மற்றும் காடுவெளிகளை அழிப்பதாலும் குளிர்சாதனப் பெட்டி, ஏர்கண்டிஷனர் போன்றவற்றில் உபயோகப்படுத்தும் நவீன இரசாயனங்களாலும் காற்றில் நாம் முன் சொன்ன வாயுக்களின் சதவிகிதம் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இதனால் இன்று பூமியில் சராசரி வெப்பநிலை அதிகமாகிக் கொண்டே போகிறது. இதைத்தான் புவிவெட்பநிலை அதிகரிப்பு எனச் சொல்கின்றனர். இதனால் இன்று என்ன நடக்கிறது? கடந்த நூறு ஆண்டுகளில் நம்ம பூமியின் சராசரி வெப்பம் உயர்ந்திருக்கும் அளவு 0.74 ± 0.18 °C (1.3 ± 0.32 °F). கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் பூமியில் 0.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரித்து வருவதாக நியூயார்க்கில் உள்ள நாசாவின் கோடார்ட் வளி ஆய்வுக் குழு தலைவர் ஜேம்ஸ் ஹான்சென் தெரிவித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில் க்ரீன்லாந்தில் உரு�® �ிய பனிப்பாறைகளின் அளவு இரு மடங்காகிவிட்டது. இருபதாம் நூற்றாண்டில் கடல் மட்டம் 4 முதல் 8 இஞ்சு வரை உயர்ந்திருக்கிறது. உலகின் பல பகுதிகளில் மழையளவு சராசரிக்கு அதிகமாகவும் மற்ற இடங்களில் குறைவாகவும் பெய்யத் தொடங்கி இருக்கிறது. மலைப்பகுதிகளில் வராத மலேரியா போன்ற நோய்கள் தென்னமெரிக்காவின் ஆண்டிஸ் மலைப்பகுதிகளில் கடல் மட்டத்தில் இருந்து 7000 அடிக்கு மேல் பரவத் துவங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட 300 விதமான செடிவகைகளும் பறவை மிருகங்களும் வெட்பம் தாங்காமல் துருவப் பகுதி நோக்கி நகரத் தொடங்கி விட்டன. (20 ஆம் நூற்றாண்டின் கடைசி 50 ஆண்டுகளில் ஒவ்வொரு பத்தாண்டிலும் 1700 தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சி உயிரினங்கள் சராசரியாக 6.5 கிலோ மீட்டர் துருவ முனைகளை நோக்கி இடம் பெயர்ந்து கொண்டிருப்பதாக நேச்சர் என்ற பத்திரிக்கை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.)

குளோபல் வார்மிங்குக்கு பங்களிப்பு செய்யும் உலக நாடுகளும் கண்டங்களும்
இயற்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் பல நாடுகளுக்கு ஆபத்து ஏற்படும். இதை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் அமைவதற்கு முன்பு, பூமி வெப்பம் கட்டுக்குள் இருந்தது. பூமி தாங்கக் கூடிய அளவிலிருந்து 2 முதல் 2.4 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பம் அதிகரித்தால் ஆபத்து இல்லை. அதற்கு மேல் அதிகரித்தால் ஆபத்து தான்.அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் வாயுக்களைக் கட்டுப்படுத்த, பூமியிலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி மற்றும் எண்ணெய் எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். மாற்று எரிபொருளைப் பயன்படுத்த உலக நாடுகள் தயாராக வேண்டும்.
நீர் மின் நிலையங்கள், அணுசக்தி, சூரிய சக்தி, காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தயாரிப்பதை அதிகரிக்க வேண்டும். குறைந்த எரிபொருளில் ஓடும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனித்தனியாக வாகனங்களில் செல்வதை தவிர்த்து ரயில்கள் மற்றும் பஸ்கள் போன்ற வாகனங்களில் செல்ல வேண்டும். பயிர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும். பசுமையை அதிகரித்து, காற்று மாசுபடுவதை தடுக்க வேண்டும். நெல் விளைச்சலில் புதிய யுக்திகளை பயன்படுத்த வேண்டும். கால்நடைகள் வளர்ப்பு மற்றும் எருவை பயன்படுத்தும் முறையை மேம்படுத்த வேண்டும். இதனால் மீத்தேன் வாயு வெளிப்படுவது குறையும். சிறந்த மின்சார சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றை சரியான முறையில் பொருத்த வேண்டும். குளிர்படுத்தவும், வெப்பப்படுத்தவும் சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு பல விஷயங்களை ஐ.நா., வலியுறுத்தியுள்ளது. இவற்றை பின்பற்றுவதாக இந்தியா, சீனா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. தங்களின் வாழ்க்கை முறையையும், பொருட்கள் பயன்பாட்டில் மாறுதலையும் ஏற்படுத்தி கொள்வதாக வளர்ந்த நாடுகள் தெரிவித்துள்ளன. உலக மக்கள் தொகையில், 20 சதவீதம் பேரே வளர்ந்த நாடுகளில் உள்ளனர். ஆனால், உலகளவில் 50 சதவீத அளவுக்கு, சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் வாயுக்களை அந்த நாடுகள் தான் வெளிப்படுத்துகின்றன. அந்த நாடுகளில் மாற்றம் கொண்டு வந்ததால் தான் புவி வெப்பமடைவதை தடுக்க முடியும்.
நன்றி-RADO

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf