MIcrosoft Mango: இந்தியாவில் மைக்ரோசாப்ட் மாங்கோ

விண்டோஸ் மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை MIcrosoft Mango மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் அறிமுகப் படுத்தியது. இதற்கு குறியீட்டுப் பெயராக "மாங்கோ' MIcrosoft Mango என மைக்ரோசாப்ட் பெயரிட்டி ருந்தது. இந்த சிஸ்டம் வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின்னர் இந்தியாவிற்கு வந்துள்ளது.

விண்டோஸ் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் "மாங்கோ' MIcrosoft Mango தரும் இன்டர்பேஸ் மிக எளிதானதாகவும், பயனாளர் விரைவாகப் பயன்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது. இதனை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தலாம். இதில் வழக்கமான ஐகான்களுக்குப் பதிலாக, ஓடுகள் போல அப்ளிகேஷன்கள் காட்டப் படும். போனில் புதியதாக இணைக்கப் படும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் இசை பைல்களுக்கும் இதே போல ஓடுகள் பாணியில் ஐகான்களை உருவாக்கலாம்.

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், மொபைல் போனுக்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 தரப்பட்டுள்ளது. எனவே, பயனாளர்கள், பெர்சனல் கம்ப்யூட்டரில் பெறும் இணைய தேடல் அனுபவத்தினை இதில் பெறலாம். அத்துடன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்கலாம். வேர்ட், எக்ஸெல், ஒன் நோட் மற்றும் பவர்பாய்ண்ட் அப்ளிகேஷன்களின் மொபைல் பதிப்பு இதில் தரப்பட்டுள்ளது.

இந்த சிஸ்டம் மூலம் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவினை பயனாளர்கள் எளிதாக அணுக முடியும். இதனால், தங்கள் பைல்களை ஸ்கை ட்ரைவில் சேவ் செய்து வைக்க முடியும். மேலும் ஆபீஸ் 365 மற்றும் ஷேர் பாய்ண்ட் தளங்களுடன் இணைக்கவும் இயலும்.

சமூக இணைய வலைத் தளங்களுக்கு நேரடி இணைப்பு தரப்பட்டுள்ளது. டெக்ஸ்ட் மற்றும் இந்த தளங்களுடன் ஒரே நேரத்தில் இயங்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் இன் பாக்ஸ்களை அமைத்து இயக்க முடியும். வாய்ஸ் டு டெக்ஸ்ட் மற்றும் டெக்ஸ்ட் டு வாய்ஸ் இருப்பதால், கரங்களைப் பயன்படுத்தாமல் செயல்பட முடியும்.

பிங் தொடர்பு கொண்டு ஒரு முகவரியைத் தேட முடியும். நாம் செல்ல வேண்டிய திசைகளை அறிய முடியும். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென ஏறத்தாழ 33,000 அப்ளிகேஷன்கள் தயாரிக்கப்பட்டு இணைய தளத்தில் கிடைத்து வருகின்றன.ஸ்மார்ட் போன் சந்தையில் தன் பங்கினை இழந்து வரும் நோக்கியா நிறுவனம், விண்டோஸ் சிஸ்டம் மூலம் அதனைப் பெற்றுவிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கான ஸ்மார்ட் போனை இன்னும் முடிவு செய்யவில்லை.

இந்நிலையில், எச்.டி.சி. (ரேடார் மொபைல் போன் - விலை ரூ.23,990) மற்றும் ஏசர் (அல்லக்ரோ மொபைல் - விலைரூ.16,000 என்ற அளவில் இருக்கலாம்.)நிறுவனங்கள், விண்டோஸ் மாங்கோ ஆப்பரேட்டிங் MIcrosoft Mango சிஸ்டத்துடன் கூடிய மொபைல் போன்களை, இந்த சிஸ்டம் அறிமுகப் படுத்தும்போதே விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது. சாம்சங் தன் ஆம்னியா டபிள்யூ ஸ்மார்ட் போனை விண்டோஸ் சிஸ்டத்துடன் ஏற்கனவே கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 80 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகி வருகின்றன. இதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் என எடுத்துக் கொண்டால், நோக்கியாவின் சிம்பியன் 68% பங்கினைக் கொண்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் படா 15%, ஆண்ட்ராய்ட் 10% கொண்டுள்ளன. மாங்கோ சிஸ்டத்தினால் MIcrosoft Mango, இந்நிலை தலை கீழாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf