To Keep the Home Clean: வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள

வீட்டு வேலை என்றாலே நமக்கு அலர்ஜிதான். நம் வீட்டு ஹால், சமையலறை, குளியலறை, படிக்கும் அறை, பூஜை அறை என ஒவ்வொன்றும் ஒருவிதமான தூசியையும், தூசு சார்ந்த அசுத்தத்தையும் காட்டும். எனவே இவற்றை அவ்வப்போது சுத்தம் செய்யவில்லை என்றால், நமக்குத்தான் தலைவலி, நோய் என முடியும்.
இவை தான் இப்படி என்றால், இவற்றைச் சுத்தம் செய்திட நாம் பயன்படுத்தும் பொருட்கள் தரும் பிரச்னை இன்னொரு வகை. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி பராமரிப்பதுவும் ஒரு வகை வேலைதான்.

அறைகள் தான் என்றில்லை; வாஷ் பேசின், கழிவறை டேங்க், சமையலறை சிங்க் தொட்டி, ஸ்டவ் அடுப்பின் மேல்புறத் தகடு, மைக்ரோவேவ் அடுப்பின் உள், வெளிப்புறம், எவர்சில்வர் பாத்திரங்கள், திரைச்சீலைகள், சிறிய பெரிய மேஜைகள், கீ போர்டுகள், மின்விசிறிகள், வாஷிங் மெஷின், ட்ரையர்கள் என நாம் பயன்படுத்தும் சாதனங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஏறத்தாழ இவை அனைத்தின் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்வது குறித்து ஓர் இணைய தளம் நமக்குக் குறிப்புகளைத் தருகிறது. ஒரு சட்டைய எப்படி சில நொடிகளில் மடிப்பது என்று கூட இந்த தளத்தில் குறிப்பு உள்ளது. இந்த தளத்தின் முகவரி

http://www.renest.com/renest/roundup/housekeepingbasics35stepbystepguidestoeverychoreinyourhome156566.

இந்த தளம் சென்றால், மேலே சொன்னவற்றுடன் இன்னும் பல பணிகள் குறித்து நமக்கு லிங்க்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கிளிக் செய்து நமக்குத் தேவையான தகவல்களைப் பெறலாம். சில தகவல்களைப் படித்தால், மிகவும் பயனுள்ளதாகத் தோன்றும். சிலவற்றைப் படித்தால், அ ட! இது எனக்குத்தெரியாதா!! என்று எண்ணத் தோன்றும். எதற்கும் ஒருமுறை இந்த தளத்தைப் பார்த்துவிடுங்களேன்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf