8' Tips to reduce Weight: எடையை குறைக்க எட்டே வழிகள்!

1.தினசரி காலை எழுந்தவுடன், 1 - 2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

2.குறைந்தது, 35 நிமிடம் உடற்பயிற்சி, வேக நடை, ஸ்பாட் ஜாகிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்றவையோ அல்லது இதர பயிற்சிகளோ செய்யவும்.

3.அப்போதே தயாரித்த வெண்பூசணிச் சாறு அல்லது வாழைத்தாண்டு சாறு ஒரு டம்ளர் குடிக்கவும்.

4.காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை, 3- 
4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது.

5. காலை சிற்றுண்டி (8.00 - 9.00 மணிக்குள்): வெண்ணெய் எடுத்த மோர் - 1 டம்ளர், அதனுடன் கொய்யா (சிறியது), பாலாடை கட்டி அல்லது வெண்ணெய் தடவாத இரண்டு (4 துண்டு) வெஜிடபிள் ரொட்டி, சாண்ட்விச் அல்லது இட்லி இரண்டு.

6. மதிய உணவு (12.00 - 1.00 மணிக்குள்): 2 கரண்டி ஏதேனும் ஒரு வகை கீரையும், 2 கரண்டி நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகள் (வெண்பூசணி, புடலங்காய்) பருப்பு சேர்த்து தேங்காய் சேர்க்காமல் கூட்டு, ஒரு கரண்டி சாம்பார், ஒரு கப் சாதம் அல்லது எண்ணெய் சேர்க்காத இரண்டு கோதுமை சப்பாத்தி, ஒரு கரண்டி வெண்ணெய் எடுத்த தயிர் அல்லது ஒரு டம்ளர் மோர்.

7. இரவு உணவு (7.00 - 8.00 மணிக்குள்): வேக வைத்த காய்கறிகள் மூன்று கப் அல்லது சூப், பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது பைன் ஆப்பிள் (6 துண்டு) அல்லது கொய்யா 3 துண்டு.

8. பகலில் உறங்குவதை தவிர்த்தல் நல்லது. எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் நொறுக்குத் 
தீனிகளை தவிர்க்கவும். உப்புள்ள ஆகாரங்களை (ஊறுகாய், சிப்ஸ், உப்பு பிஸ்கட்) தவிர்க்கவும். இரவில் உண்ட பின் குறுநடை செய்த பிறகு உறங்க ல்லவும். "இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு' என்ற பழமொழிக்கு ஏற்ப காலையில் கொள்ளு கஞ்சி குடிப்பது நல்லது.

நன்றி-தினமலர்

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf