கீமா பொடிமாஸ் தேவையானவை
கொத்துக்கறி - 1/4 கிலோ
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி - சிறு துண்டு (விழுதாக்கவும்)
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப அரைக்க
மிளகாய் வற்றல் - 3
மிளகு - 10
தனியா விதை - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கீமா பொடிமாஸ் செய்முறை
மசாலா சாமான்களை வறுத்துப்பொடி செய்யவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். தொடர்ந்து சுத்தம் செய்த கறியைப் போட்டு வதக்கவும்.
கொத்துக்கறி வதங்கியதும், தூள் செய்த மசாலா பொடியைச் சேர்த்து நீர் ஊற்றி போதுமான உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
கொத்துக்கறி நன்கு வெந்ததும், குறைந்த தீயில் வைத்து நன்கு டிரை ஆனதும் துருவிய தேங்காய் சேர்த்துக் கிளறி கீமா பொடிமாஸ் இறக்கவும்.
`செப்' தாமு
No comments :
Post a Comment