மாநில அரசுகளின் விருப்பமே சில்லறை வர்த்தம்

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அந்தந்த மாநிலங்களின் விருப்பமே என்று பிரதமர் அலுவலக இணணயமைச்சர் நாராயணசாமி கூறினார்.

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் நிருபர்களிடம் கூறுகையில், "நாட்டில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுகளைக் கொண்டு வர விவசாயிகள், வியாபாரிகள், மாநில அரசுகளைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.பின்னர், 51 சதவீத அன்னிய நேரடி முலீட்டை சில்லறை வணிகத்தில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.இந்த முடிவை பஞ்சாப், மகாராஷ்டிரம், ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள் வரவேற்று, எழுத்துப்பூர்வமாகப் பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளன.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு மூலம் பல கோடி மூலதனம் இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளது. உலகில் உள்ள பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்ய முன்வரும். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.அந்நிறுவனங்கள் நம் நாட்டில் குளிர்சாதன வசதிகளைக் கொண்ட கட்டடங்களைக் கட்டி, விவசாய விளை பொருள்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்கி, மக்களுக்கு விநியோகம் செய்யும்.

இதுவரை இடைத்தரகர்களால் விவசாயிகளின் விளைபொருள்களுக்குக் குறைந்த விலை கிடைத்து வந்தது.சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். மேலும், வரும் 3 ஆண்டுகளில் 2 கோடி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தத் திட்டத்தை விரும்பும் மாநிலங்கள் ஏற்கலாம். எந்த மாநிலத்தையும் மத்திய அரசு வற்புறுத்தாது," என்றார் நாராயணசாமி.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf