Want to be a Diabetes Patient: நீரிழிவு நோயாளியாக மாற விரும்புகிறீர்களா?

நீரிழிவு நோயாளியாக மாற விரும்புகிறீர்களா?

சர்க்க‍ரை (நீரிழிவு) நோயாளியா க மாற விரும்புகிறீர்களா?

என்ன‍டா இது தலைப்பே விவகா ரமா இருக்கேன்னு யோசிக்கிறீங் களா, கீழே வரும் வரிகளைத் தொடர்ந்து படிங்க

பரோட்டா- கொத்து, வீச்சு, சில்லி, ஆலு, கைமா, நெய், முட்டை… தமிழகத்தில் ரவுடிகளைவிட அதி க அடைமொழிகள் பரோட்டாக்க ளுக்குத்தான் உண்டு.

இழை இ ழையாகப் பிரிந்து வரும் நேர் த்தியோ, அல்லது குருமாவுடன் கூ ட்டணி சேரும் பக்குவமோ… ஏதோ ஒன்றால் இது சாப்பாட்டுப் பிரியர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. விசிறி அடித்துத் தேய்க்கிற போதே எச்சில் ஊற வைக் கிற இந்த பரோட்டாக்கள் சர்க்கரை நோய்க்குக் கார ணமா கிறது என்கிறது சமீ பத்திய ஆய்வு ஒன்று!

‘ பரோ ட்டா என்ன அத்தனை ஆபத் தான உணவா?’ என்றால், கொஞ்சம் தயங்கினாலும் பின்பு ஆமோதிக்கவே செய்கிறார்கள் நிபுணர்கள்.

‘‘பொதுவாவே நார்ச்சத்து இ ல்லாத எந்த உணவுப் பொரு ளும் உடம்புக்கு நல்லதில் ல. உணவுல இருக்கற நார்ச் சத்து தான் அதைச் சரியான நேரத்துல செரிக்கச் செய்யு து. செரிமானம் கரெக்டா நட ந்தாதான் உடம்புக்கு எல்லா சத்துகளும் முறையா கிடைக்கும்.

உடலின் இயக்கமும் இயல்பா இருக்கும். கோதுமையில இருந்து நார்ச்சத்தை யெல்லாம் பிரிச் ச பிறகு கிடைக்கற மைதாவு லதான் பரோட்டா தயாரிக்கப் படுது. ஆக, பரோட்டா சாப்பி ட்டா செரிக்க லேட் ஆகும்ங் கிறது நிஜம்.

அதனால அடிக்கடி பரோட்டா சாப்பிடறதைக் கூடுமானவரை தவிர்க்கலாம்!’’ என்றார் சென் னையைச் சேர்ந்த ஊட்டச் சத்து நிபுணர் ஷைனி சந்திரன்.

‘செரி மானப் பிரச்னை இருக்கட்டும். நேரடியாகவே சர்க்கரை நோய்க் கு பரோட்டாக்கள் காரணமாகு துங்கிறதை மக்கள் புரிஞ்சுக்க ணும்’ என்று பரோட்டாவைப் புர ட்டிப்போட்டிருப்பது ‘கேரளா கிளப் ஆஃப் நியூட்ரிஷனிஸ்ட்’ என்கிற அமைப்பு.

ஆய்வு முடிவில் அந்த அமைப் பைச் சேர்ந்தவர்கள் சொல்லியிருப்பது இதுதான்… ‘‘மையாக அ ரைக்கப்பட்ட கோதுமையில், கடைசியாக மிஞ்சுவது பழுப்பு கல ந்த மஞ்சள் நிற மாவு. இந்த மாவுடன் பென்சாயில் பெராக் ஸைடு என்னும் வேதிப்பொரு ள் சேர்க்கும் போது அது பளிச் சென வெள்ளை நிறமாகிறது.

தொடர்ந்து ‘அலெக்ஸான் ’  என் னும் இன்னொரு வேதிப்பொரு ள் கலந்து மாவை மிருதுவாக் க, அது மைதாவாகிறது. மேற் சொன்ன இரண்டு வேதி ப்பொருட்களுமே நேரடியாக சர்க்கரை நோயை வரவழைக்கக் கூடியவை.
பென்சாயில் பெராக்ஸைடு ‘ஹேர் டை’யில் பயன்படுத்தப்ப டுகிற ரசாயனப் பொருள். மாவி லுள்ள புரோட்டீனுடன் சேர்ந்து இதை எடுத்துக் கொள்ளும் போது உடலில் இன்சுலின் சுர ப்பு பாதிக்கப்படு கிறது.

நீரிழிவு நோயாளியாக மாற விரும்புகிறீர்களா?

‘அலெக் ஸான்’ என்பது இன்னும் மோ சம். சர்க்கரை நோய் தொடர்பா ன ஆராய்ச்சிகளில், சோதனை க் கூடத்தில் எலிகளுக்கு சர்க்கரைநோயை வரவழைக்கக் கொ டுக்கப்படுபவை இவை!’’

இந்த எச்சரிக்கை கண்ட மறு நாள் முதலே கேரளாவில் பரோட்டா குறித்த விழிப்புண ர்வுப் பிரசாரத்தைத் தொட ங்கி விட்டன சில நுகர்வோர் நல அமைப்புகள். தமிழ்நாட் டில் இந்த விஷயம் அவ்வள வாகத் தெரியவில்லை. சென் னையின் பிரபல நீரிழிவு மரு த்துவர் விஜய் விஸ்வநாதனி டம் இதுகுறித்துப் பேசினோம்.

‘‘சர்க்கரை நோய் வர்றதுக்கு முன் னாலயும் பின்னாலயும் முக் கிய காரணியா இருக்கறது உணவுப் பழக்கம்தான். சரிவி கித உணவை எடுத்துக்கறது ஒண்ணுதான் இதுல இருந்து தப்பிக்க ஒரே வழி. சிலர், ‘இதுதான் பிடிக்கும்’னு குறிப் பிட்ட ஒரு உணவுப்  பதார்த்தத்தைச் சாப்பிட்டே பழக்கப் பட்டுட றாங்க.

அதுதான் தப்பு. ஒரே பொருளை திரும்பத் திரும்ப சாப்பிடறப்ப, அதுல அதிகமா இருக்குற சத்துக்கள் மட்டுமே உடல்லயும் அதிக மாச் சேருது. எல்லாப் பிரச்னைகளு ம் அங்க இருந்தே தொடங்குது. எல் லா உணவுப் பொருட்களுமே சில பல வேதி நிகழ்வுக ளைக் கடந்து தான் தயாராகுது.

மைதாவுல கலக் கப்படுற பொருட் கள் பத்தி உறுதியா தெரியாம அதைப் பத்தி நாம கருத்து சொல்ல முடியாது. ஆனா, சில வே திப்பொருட்கள் உடல்ல சேர்றப்ப ரத் தத் துல சர்க்கரையோட அளவு பாதிக்கப்படுதுங்கறது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டதுதான்.

தவிர, பரோட்டாவுல ஆயில், கலோரி அதிகமா இருக்கறதால உடல் வெயி ட் போடறதையும் தடுக்க முடியாது.

அதுவே சர்க்கரை நோய்க்குக் கார ணமாவும் அமையலாம்’’ என்றார் வி ஸ்வநாதன். மத்தியான பரோட்டாக் கடை ஒன்றில் மாவு பிசைந்து கொ ண்டிருந்த மாஸ்டர் ஒருவரிடம் இ தையெல்லாம் நாம் விளக்கிச் சொல் ல, ‘‘இது ஒழைப்பாளிங்க சாப்புடுறது சார்.

ஒடம்புக்கு ஒண்ணும் வராது. ரெண்டு பரோட்டா சாப்பிட்டுப்பாருங் க… அப்புறம் பேசுங்க’’ என்று நம்மை ஆஃப் செய்தார். மைதா தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பேசியபோ து, ‘‘மைதா மாவு என்ன மோ முந்தா நேத்து வந்து இறங்கின மாதிரி பேசுறீங்க

பிரிட்டிஷ் காலத்துல இருந்து இதுலதான் கேக், பிஸ்கட்ய்யிறாங்க.  சும்மா எதையாச்சும் கிளப்புறவங்களை ப் பத்தியெல்லாம் நாங்க கவலை ப்படலை’’ என்று முடித்துக் கொ ண்டார்கள். இப்படி அசா ல்ட்டா நம்மால இருக்க முடியலையே! - நீரிழிவு நோயாளியாக மாற விரும்புகிறீர்களா?

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf