How to Change Text Size in Excel: எக்ஸெல் எழுத்தின் அளவு

எக்ஸெல் எழுத்தின் அளவு: 

மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் போலவே எக்ஸெல் தொகுப்பிலும் எழுத்தின் அளவு பாய்ண்ட் என்றே குறிப்பிடப்படுகிறது. ஒரு பாய்ண்ட் என்பது ஏறத்தாழ ஓர் அங்குலத்தில் 72ல் ஒரு பங்கு. 

Change Text Size in Excel
How to Change Text Size in Excel: எக்ஸெல் எழுத்தின் அளவு
ஒரு செல் அல்லது செல்லில் உள்ள தகவல் ஒன்றின் எழுத்தின் அளவினை மாற்ற வேண்டியதிருப்பின் நாம் டூல் பாரினைப் பயன்படுத்துகிறோம். டெக்ஸ்ட் சம்பந்தமான டூல்களுக்கு இடது பக்கம் (பாண்ட் டூலின் வலது பக்கம்) பாய்ண்ட் அளவின் பீல்டு கட்டம் உள்ளது. இந்த பீல்டின் வலது பக்கம் உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்தால் எழுத்தின் பாய்ண்ட் அளவுகள் பலவற்றைக் காணலாம். 

டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துவிட்டு இந்த சைஸை மாற்றினால் எழுத் துக்களின் அளவு மாறி இருப்பதனைக் காணலாம். 

ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கிளிக் செய்தால் கீழ் நோக்கி விரியும் அளவுகளில் மட்டுமே எழுத்தின் அளவை மாற்ற முடியும் என்பதல்ல. அளவு கட்டத்தில் சென்று எழுத்தின் அளவை கீ போர்டு வழியாக டைப் செய்து அமைக்க முடியும். எக்ஸெல் தொகுப்பினைப் பொறுத்தவரை 1 முதல் 409 புள்ளி வரை இதனை அமைக்க முடியும். 

இது உங்கள் பிரிண்டரின் திறனைப் பொறுத்தது முழு எண் அளவில் மட்டுமின்றி பாதி அளவிலும் இந்த எழுத்தின் அளவை அமைக்கலாம். 

பிட்ஸ் மற்றும் டிப்ஸ்: 

தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். 

Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும். 

ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும். 

கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+ Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும். 

ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும். 

கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+ Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும். 

கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும். 

இரண்டு கீ வழிகள்: 

Shift + F11 : அப்போதைய ஒர்க் புக்கில் புதிய ஒர்க் ஷீட் ஒன்றை இணைக்கிறது. 
Alt + Shift + F1 :மேலே சொன்ன அதே வேலையை மேற்கொள்கிது. ஆம், இந்த இரண்டு ஷார்ட்கட் கீகளும் ஒரே வேலையைச் செய்கின்றன. நீங்கள் எதனை வேண்டுமானாலும் பின்பற்றலாம்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf