கழுத்து வலி - Neck Pain Excercises: கழுத்து வலி தீர்க்கும் எளிய பயிற்சிகள்

கழுத்து வலி என்றால் என்ன? 

கழுத்து வலி என்பது கழுத்து வலி பின்பக்கத்தில் உணரப்படும் வலியாகும். கழுத்து வலி பொதுவாக கழுத்தில் உள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது.

கழுத்து வலி தீர்க்கும் எளிய பயிற்சிகள்

உடல் உழைப்பு குறைந்து, தொலைக்காட்சி,கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு நாளடைவில் கழுத்துத் தசை பாதிக்கப்படும். அந்த இடத்தில் போதிய ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் கழுத்து மற்றும் கை, கால் பகுதிகளில் வலி ஏற்பட்டு, கழுத்து பகுதியை அசைக்க கூட முடியாமல் போகலாம்.

கழுத்து வலி தீர்க்கும் பயிற்சிகள்
கழுத்து வலி தீர்க்கும் எளிய பயிற்சிகள்

பகுதிக்கு வலு சேர்க்கும் சில எளிய பயிற்சிகள் உள்ளன. அவற்றை தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து வலி பிரச்சனையே இருக்காது. இந்த பயிற்சிகளை தினமும் வீட்டில் இருந்த படி 30 நிமிடம் செய்தால் போதுமானது.

அப் அண்ட் டவுன் : தரையில் நேராக நின்று கழுத்தை மட்டும் மேலும் கீழும் அசைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 20 நொடிகள் செய்ய வேண்டும்.

நெக் சைட் : தரையில் நேராக நின்று கொண்டு கழுத்தை வலது புறம் திருப்பி, பின் நேராக்கி அதன் பின் இடது புறம் திருப்ப வேண்டும். இப்படி 20 நொடிகள் செய்ய வேண்டும்.

நெக் ஸ்ட்ரெச்சிங் : கைகளை மோவாயில் வைத்தபடி கழுத்தை பின்னால் சாய்க்கவும். 20 நொடிகள் இருக்கவும். பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.

நெக் ஃபார்வர்ட் பென்ட் : கைகளை பின்னந்தலையில் வைத்தபடி  கழுத்தை  முன் பக்கமாக குனியவும். இந்த நிலையில் 20 நொடிகள் இருக்கவும். மேலே சொன்ன இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

பலன்கள் : தோள்பட்டை தசைகள் வார்ம் அப் ஆகும். கழுத்துத் தசைகள் நன்றாக ஸ்ட்ரெச் ஆகும். இந்த பகுதிகளில் ரத்த ஓட்டமும், வளைந்து கொடுக்கும் தன்மையும் அதிகரிக்கும்.

மேற்கண்ட கழுத்து வலி தீர்க்கும் எளிய பயிற்சிகள் உங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையுடன் 

Read more about கழுத்து வலி - Neck Pain @ கழுத்து வலி - Neck Pain

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf