How to start a Dairy Farm in Tamil: How to Choose Cattle Feed - பால் பண்ணை கால்நடைகளை தேர்ந்தெடுக்கும் முறை

பால் பண்ணை கால்நடைகளை தேர்ந்தெடுக்கும் முறை
பால் பண்ணை கால்நடைகளை
 தேர்ந்தெடுக்கும் முறை

 வங்கி கடன் கிடைத்தவுடன் தகுந்த கால்நடை வளர்ப்பவரிடமிருந்தோ அல்லது அருகிலுள்ள கால்நடை சந்தையிலோ கால்நடைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

பால் பண்ணை கால்நடைகளை தேர்ந்தெடுக்கும் முறை:

வங்கியின் தொழில்நுட்ப அலுவலரின் உதவியால் ஆரோக்யமான மற்றும்  அதிகபடியான பால் தரும் கால்நடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். கால்நடை மருத்துவர்/ கால்நடை வளர்ப்பு பராமரிப்பவர் மாநில அரசு/வட்டார.
புதிதாக இரண்டாவது/மூன்றாவது கன்றுகுட்டி ஈன்ற பசுவை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
வாங்குவதற்கு முன் கறவை மாட்டின் பால் வளம் மற்றும்  மூன்று முறை பால் கறக்கும் திறன் உடையதா என நன்கு ஆராய்ந்தறிந்து வாங்க வேண்டும்.
புதிதாக  வாங்கிய கறவை மாட்டை அடையாளம் காண்பதற்கு தகுந்த அடையாளக் குறியிட வேண்டம். (காது குத்தல் (அ) பச்சை குத்துதல்)
புதிதாக வாங்கப்பட்ட கறவை மாட்டுக்கு நோய் தடுப்பு மருந்து வழங்க வேண்டும்.
புதிதாக வாங்கப்பட்ட கறவை மாட்டை முதல் இரண்டு வாரத்திற்கு தனி கவனம் செலுத்தி பார்க்க வேண்டும். பிறகு அதை மற்ற மாடுகளுடன் ஒன்றாக சேர்க்கலாம்.
குறைந்த பட்ச பொருளாதால வளத்திலேயே இரண்டு பால் தரும் கறவை மாடுகளை வாங்க வேண்டும்.
வாங்கக்கூடிய இரண்டாவது கறவை மாடு/ கறவை மாடு தொகுப்பு முதலில் வாங்கிய கால்நடைகளுக்கு 5-6 மாதம் கழித்து வாங்க வேண்டும்.
பருவகாலத்திற்கேற்ப வளாப்பவரிடமிருந்து எருமை மாடுகளை ஜீலை-பிப்ரவரி மாதங்களில் வாங்க வேண்டும்
இரண்டாவதாக வாங்கப்படும் கால்நடையானது ஏற்கனவே உள்ள கால்நடையின் பால் வளம் வற்றும் போது அல்லது குறையும் போது வாங்கினால் தொடர்ந்து பாலின் உற்பத்தி சீராக இருக்கும். மேலும் இது தொடர் வருமானத்திற்கும், பால் வற்றிய மாட்டினை பராமரிப்பதற்கும் உதவியாக இருக்கும்.
பால் வளம் குன்றிய கால்நடையை ஆராய்ந்து அதற்கு பதிலான கால்நடையை வாங்க வேண்டும்.
தரம் குறைந்த மாட்டை அது 6-7 முறை கன்று ஈன்ற பிறகு நீக்கி விட வேண்டும்

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf