Does Justice Remains in Jayalalitha's Case: நீதியே இது நியாயமா?

Does Justice Remains in Jayalalitha's Case: நீதியே இது நியாயமா?

1996இல் தமிழகத்தில் நடைபெற்ற‍ சுடுக்காட்டு ஊழல் வழக்கில் 18 ஆ ண்டுகள் கழித்து சம்பந் தப்பட்ட‍ அமைச்சருக்கு தண்டனை கிடைத்திரு க்கிறது.

மிகப்பெரிய மடாதிபதி வழ க்கில் பல ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வெளியானது. இந் நாள் முதல்வரின் அந் நாள் சொத்துக்குவிப்பு வழக்கு எந்நாள் முடியுமோ தெரிய வில்லை. என்ன‍ தேசம் இது? என்ன‍ சட்ட‍ம் இது?

ஊழல் வழக்காக இரு ந்தாலும் சரி… தேர்தல் வழக்காக இருந்தாலு ம் சரி… நீர் பிரச்சனை, நிலப் பிரச்சனையாக இருந்தாலும் சரி… இந்த நாட்டையே துண்டாடத் துணிந்த தீவிர வாதிகள் மிதான வழக்காக இருந்தாலும் சரி…. தீர்ப்பு வரும் முன் வழக்கே மறந்துபோகும் அள விற்கு ஆமைவேக நடவடிக் கை. யார் கண்டு பிடித்த‍ நடை முறைகள் இவை?

குற்ற‍வாளிகள் தப்பிக்க‍லாம்… நிரபராதி தண்டிக்க‍ப்படக்கூடா து என்கிற உப்புமா வேதாந்தத் தை பேசிப்பேசியே குற்ற‍வாளி களைத் தப்பிக்க‍ விடுவதுதான் நீதி என்றால் அது நீதியல்ல‍… அநீதி! குற்ற‍ம் செய்தவரை காப்பா றுவது மட்டுமே சட்ட‍த்தின் கடமை என்றால் அப்ப‍டிப்பட்ட‍ சட்ட‍ த்தை மாற்ற‍முடியாத அரசியல் அமை ப்பு நமக்கெதற்கு?

பல ஆயிரம் கோடி மக்க‍ள் … பல மொழி கள்…. பல ஜாதிகள்… பல இனங்கள்… எல்லாம் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை ஆஹா! இதுதான் இந்தியா என்று மார்த்த‍ட்டி பேசுவதல்ல‍ ஜன நா யகம். வலிமையான சட்ட‍ம்… கடுமை யான தண்டனை … விரைவான தீர்ப்பு என்று செயல்படுவதல்ல‍வா உண்மையான ஜனநாயகம்.

கட்ட‍ப்பஞ்சாயத்து… ஊர் பஞ் சாயத்து… நகரப் பஞ்சாயத்து… மாவட்ட‍ நீதிமன்றம் … உயர் நீதிமன்றம் … உச்ச‍ நீதிமன்றம் … விரைவு நீதிமன்றம் … நுகர் வோர் நீதிமன்றம்… மகளிர் நீதிமன்றம் என இத்தனை நீதி மன்றங்களும் நீதியரசர்களு ம், வாசற்படிக்கு வாசற்படி வழக்க‍றிஞர்களும் இருந்துங்கூட வண்டி வண்டியாய் வழக்குகள் தீர்க்க‍ப்படவில்லை என்பது நம் தேச நிர்வாகத்தின் செயலற்ற‍த் தன்மையை வெட்கமே இல்லா மல் உலகுக்கு வெளிச்ச‍ம் போட்டுக் காட்டுவதாகும்.

இந்த லட்சணத்தில் நீதிமன் றங்களுக்கு பால்வாடி பள் ளிகள்போல் கோடை விடு முறை வேறு. இதுபோன்று காவல்துறைக்கும் மருத்து வத்துறைக்கும் தீயணைப்பு த் துறைக்கும் விடுமுறை விடால் என்ன‍ ஆகும்?

குறைந்த பட்சம் டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறைவிட்டால் சில குடிமக்க‍ளாவது திருந் துவார்கள்.த‌வறுகள் திருத்த‍ப்பட வேண்டும். ஆனால் தப்பு கள் உடனே கண்டிக்க‍ப்படவேண்டும். இல்லா து போனால் குற்ற‍ங்கள் பெருகுமே தவிர கு றையாது.

புதிய ஆட்சியை எவரமைத்தாலும் இந்த தேசத்தின் சட்ட‍ப்பிரிவுகளை விசாரணை முறைகளை தண்டனைக் குரிய கால வரை முறையை மாற்றி அமைக்க‍ வேண்டும்.

நீதி தேவதையின் கண்களில் இருக்கும் கருப்பு த் துணியை அகற்றுவோம். அவளது நெற்றிக் கண் பார்வையால் குப்பையாய் இருக்கும் குற்ற‍ங்களையும் தப்பிக்க‍ நினைக்கும் குற்ற‍ வாளிகளையும் பொசுக்குவோம்.

Subscripe to our Email News letter for more articles like Does Justice Remains in Jayalalitha's Case: நீதியே இது நியாயமா? 

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf