How to start a Dairy Farm in Tamil: பால் பண்ணை துவங்க வழி முறைகள்

பால் பண்ணை என்பது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய ஒரு முக்கிய உப தொழிலாகும். கால்நடைகளினால் கிடைக்கும் எரு உரம் மூலம் இயற்கை உரம் தயாரிக்கவும், மண்ணை வளப்படுத்தவும், பயிர்கள் நன்கு வளரவும் உதவுகிறது.

பால் பண்ணை
பால் பண்ணை

கால்நடைகளின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் சாண எரிவாயு வீட்டு உபயோகத்திற்கு எரிபொருளாக மட்டுமின்றி கிணற்றிலிருந்து நீர் இறைக்க தேவைப்படும் இன்ஜீன்களுக்கும் எரிபொருளாக பயன்படுகிறது.

வேளாண்மையின் உபரி பொருள்களான உப பொருள்களே கால்நடைகளுக்கான இலாபகரமான தீவனமாக அமைகிறது. பெரும்பாலும் பால் பண்ணை செயல்பாடுகளுக்கும், போக்குவரத்துக்கும், அதிக அளவில் எருதுகள் பயன்படுகின்றன. ஆரம்பத்திலிருந்தே வேளாண்மை சார் தொழில்களில் , பெரும்பாலான வேலைவாய்ப்பும், இலாபம் ஈட்டக்கூடிய தொழிலாக பால் பண்ணை அமைகிறது. பால் பண்ணை வருடம் முழுவதும் வேலைவாய்ப்பை வழங்குகிறது. பால் பண்ணை மூலம் முக்கியமாக சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்களும் பயனடைகின்றனர்.

இரண்டு கறவை மாடுகளினால் ஒரு விவசாயிக்கு  ஒரு வருடத்திற்கு  கிடைக்கும் மொத்த உபரி தொகை 12,000 ரூபாய்.  இரண்டு கறவை மாடுகளை வாங்குவதற்கு தேவைப்படும் முதலீடு தொகை ரூ.18,223/- அதன் பிறகு வருடத்திற்கு திருப்பி செலுத்த வேண்டிய வட்டியுடன் கூடிய கடன் தொகை ரூ.4,294/- ஆனால் விவசாயிக்கு கிடைக்கும் நிகர லாபம் தோராயமாக ரூ.6000 – 9000.

இதற்கு தேவையான மாதிரி திட்டம்  இணைக்கப்பட்டுள்ளது .

கால்நடைகளின் தரம், பராமரிக்கப்படும் முறை, விற்பனை திறன் இவற்றைப் பொருத்தே கிடைக்கக்கூடிய வருமானம் அதிகரிக்கும்.

உலக வங்கி கணக்கின்படி இந்தியாவில் 75% 940 மில்லியன் மக்களில் 5.87 மில்லியன் கிராமம், 145 மில்லியன் ஹெக்டேரில் விவசாய நிலம். சராசரியாக பண்ணை அளவு 1.66 ஹெக்டேர். அதில் 70 மில்லியன் கிராம வீடு, 42%  2 ஹெக்டேர் வரையிலும் மற்றும் 37% நிலமற்ற வீட்டார்.

இந்த நிலமற்ற சிறு விவசாயி தங்களுடைய உடைமையில் 53% கால்நடை வளர்ப்பு மற்றும் 51% அதனுடைய பால் உற்பத்தியாகும். பால் உற்பத்தியில் இந்த சிறு / நடுத்தர விவசாயி மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

பால் தேவை அதிகமாக உள்ள நகர பகுதிகளிலும் பால் பண்ணை ஒரு முக்கிய லாபகரமான தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது.

2001-02.ம்  வருடத்தின் மொத்த பால் உற்பத்தி 84.6 மில்லியன் மெட்ரிக் டன்ஸ். ஒரு நாளைக்கு 226 கிராம்  இந்த உற்பத்தி, ஒரு நாளைக்கு ஒரு நபருக்கான பால் தேவையின் அளவு 226 கிராம், ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பால் பரிந்துரைக்கப்படும்அளவு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கான அளவு 250 கிராம்.

பேராற்றல் வாய்ந்த நோக்கம்/செயலாற்றலின் மூலம் பால் உற்பத்தயை அதிகரிக்க வேண்டும். 3 வருட காலத்தில் கறவை மாடுகள் மற்றும் எருதுகளின் எண்ணிக்கை முறையே 62.6 மில்லியன் மற்றும் 42.4 மில்லியன்

மத்திய மற்றும் மாநில அரசு பால் உற்பத்தியை பெருக்குவதற்கு நிதி உதவிகளை செய்து வருகிறது. 9வது ஐந்தாண்டு திட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.2345 கோடி.


பால் பண்ணை பால் உற்பத்திக்கான பொதுவாக வழங்கப்படும் பயிற்சி:

விவசாயிகள்:

பால் பண்ணையின் அதிகப்படியான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நாகரிக மற்றும் சிறந்த அறிவியல் கொள்கைகள் மற்றும் பயிற்சிகளை பயன்படுத்த வேண்டும். பெரும்பாரும் பயன்படுத்தப்படும் வேறு சில பயிற்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Dairy Farm Housing - பால் பண்ணை வீட்டமைப்பு

How to Choose Cattle Feed - பால் பண்ணை கால்நடைகளை தேர்ந்தெடுக்கும் முறை

Feed Management in Dairy Farm: கறவை மாடுகளுக்கான உணவளித்தல்

Milking in Dairy Farm: கால்நடைகளிடம் பால் கறத்தல்

Dairy Farm Disease Management in Tamil: நோய்க்கு எதிரான தடுப்பு முறைகள்

Management of Breeding/Conceived Cow's in Dairy Farm: கறவை மாடுகளின் இனப்பெருக்க & கருவுற்றகால பராமரிப்பு

Calves management in Dairy Farm: கன்று குட்டிகளை பராமரித்தல்

Selling Milk from Dairy Farm: பால் விற்பனை செய்தல்

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf