We Lost Because of D.M.K- Anbumani Ramdoss | சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவினால்தான் தோற்றோம் - அன்புமணி ராமதாஸ்

பாமகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சிக்கு அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார். அதன் விவரம்:

 தோல்விக்குக் காரணம்? பொதுவாக மக்கள் மாற்றம் வர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதனால் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர். 30 ஆண்டு காலமாக மாறிமாறிதான் அரசுகள் வந்து கொண்டிருக்கின்றன. கேரளத்தில் 50 ஆண்டுகளாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. அதுபோலத்தான் இந்தத் தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுக்கும் மேலாக பல காரணங்கள் உள்ளன.

 விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, 2ஜி அலைக்கற்றை என்று பல்வேறு காரணங்கள் உள்ளன.

 2ஜி அலைக்கற்றை பிரச்னையை திமுக அமைச்சர்களே சொல்லுகிறார்கள். அதுதான் என் எண்ணமும். இப்படிப்பட்ட காரணத்தால்தான் மக்கள் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

 திமுகவுக்கு எதிரான வாக்குகள்: 2006 தேர்தலில் எந்த அலையும் வீசவில்லை. அது நடுநிலையான தேர்தல். இந்தத் தேர்தலைப் பொருத்தவரை பாமகவுக்கு எதிரான வாக்குகள் கிடையாது. திமுகவுக்கு எதிரான வாக்குகள்தான். அதற்கும் மேலாக சொல்லப்போனால் அதிமுகவுக்குச் சாதகமான வாக்குகளும் கிடையாது. ஆளும் கட்சிக்கு (திமுக) எதிரான வாக்குகள்தான்.

 தோல்வி அல்ல சரிவு: இந்தத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு தோல்வி என்று சொல்ல முடியாது சரிவு என்றுதான் சொல்ல வேண்டும். வெற்றிபெற்ற அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 90 லட்சம். தோற்ற திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 45 லட்சம். வெறும் 45 லட்சம் வாக்குகள்தான் அதிமுக கூட்டணி அதிகம் பெற்றிருக்கிறது. இதனால் இதைத் தோல்வி என்று சொல்ல முடியாது. சரிவு என்றுதான் சொல்ல வேண்டும்.

 அதேசமயம் இந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். இது எங்களுக்கு எதிரான வாக்குகள் கிடையாது. ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள். அந்த அலையில் நாங்கள் சிக்கிக் கொண்டோம்.

பாமக வாக்கு வங்கியில் சரிவா? 2006 சட்டப்பேரவை தேர்தலில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தோம். இப்போது 19 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம். 80 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகவே பெற்றுள்ளோம். 2006 தேர்தலில் எந்த அலையும் இல்லாததால் 55 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தாலே வெற்றிபெற முடிந்தது. 2011 - தேர்தலில் 75 ஆயிரம் வாக்குகள் பெற்றும் ஜெயிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் நடுநிலையாளர்கள் அதிக அளவில் வாக்களித்ததுதான். ஒவ்வொரு தொகுதியிலும் 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை கூடுதல் வாக்குகள் பதிவாகி உள்ளன.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf