'இலங்கையின் கொலைக்களங்கள்' - ஆவணப் படம் | Sri Lanka's Killing Fields - Film |

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின் இறுதிக்கட்ட நிகழ்வுகளின் பதிவுகள் சிலவற்றை உள்ளடக்கிய பிரிட்டனின் 'சேனல் 4'-ன் ஆவணப் படம் Sri Lanka's Killing Fields வெளியாகியுள்ளது. (வீடியோ - கீழே)

'இலங்கையின் கொலைக்களங்கள்' (Sri Lanka's Killing Fields) எனப் பெயரிடப்பட்ட இந்த 50 நிமிட ஆவணப் படம் Sri Lanka's Killing Fields, போர்க் குற்றங்களுக்கான மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த ஆவணப் படத்தை போலியானது என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

(சேனல் 4 வலைத்தளத்தில் Sri Lanka's Killing Fields ஆவணப் படத்தை காண... http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3200170)

சேனல் 4 வலைத்தளத்தில் இந்த ஆவணப் படம் Sri Lanka's Killing Fields பொதுமக்களின் பார்வைக்காக புதன்கிழமை தொடங்கி ஆறு நாட்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் மக்களை படையினர் துன்புறுத்தும் காட்சிகள், சரணடைந்த சாமானியர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்கள், பொதுமக்கள் தங்குமிடங்கள் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்கள், புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள், அந்தப் பெண்புலிகளைக் கொல்லும் கொடூரங்கள், நிர்வாணமாக நிறுத்தப்பட்டு தமிழ்க் கைதிகள் சுட்டு வீழ்த்தப்படும் நிகழ்வுகள்...

இப்படி இலங்கை ராணுவத்தினரின் போர்க் குற்றங்களை முற்றிலும் துகிலுரிக்கும்படியாக உள்ள இந்த ஆவணப் படம் Sri Lanka's Killing Fields இதோ...


No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf