ராம்லீலா மைதான சம்பவம்: ராம்தேவ் அறக்கட்டளை பதிலளிக்க வேண்டும்- உச்ச நீதிமன்றம் உத்தரவு

தில்லி ராம்லீலா மைதானத்தில் யோகா குரு ராம்தேவின் ஆதரவாளர்கள் நள்ளிரவில் வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு ராம்தேவின் அறக்கட்டளைக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

 தில்லி ராம்லீலா மைதானத்தில் தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் ராம்தேவ் கடந்த ஜூன் 4-ம் தேதி உண்ணாவிரதம் இருந்தார். நள்ளிரவில் மைதானத்துக்குள் நுழைந்த தில்லி போலீஸôர் அங்கிருந்தவர்களை வெளியேற்றினர்.

 இந்த விவகாரத்தை தாமாகவே முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிபதிகள் பி.சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

 ராம்லீலா மைதானத்திலிருந்து ராம்தேவின் ஆதரவாளர்களை வெளியேற்றுவதற்கு போலீஸôர் எந்தவிதமான சக்தியையும் பிரயோகிக்கவில்லை என்று தில்லி போலீஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் யூ.யூ.லலித் வாதிட்டார்.

 இதற்கு ஆதாரமாக சில விடியோ பதிவுகளையும், புகைப்படங்களையும் நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்தார்.

 இவற்றைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், "நீங்கள் அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறீர்கள். இவை தொடர்பாக அவர்களும் பதிலளிக்கட்டும்' என்று தெரிவித்தனர்.

 இதன்படி, ராம்லீலா மைதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பாரத் ஸ்வாபிமான் அறக்கட்டளைக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

 முன்னதாக போலீஸôர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், "போலீஸôர் மீது ராம்தேவின் ஆதரவாளர்கள் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட பிறகே, போலீஸôர் அவர்களை நோக்கி 8 கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்' என்று கூறப்பட்டிருந்தது.

 ராம்லீலா மைதானத்தில் யோகாசனப் பயிற்சி நடத்துவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அதை மீறும் வகையில் அங்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டதாகவும் போலீஸôர் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

 இதனிடையே இந்த வழக்கில் தம்மையும் சேர்த்துக்கொள்ளுமாறு வழக்கறிஞர் அஜய் அகர்வால் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

 வழக்கின் விசாரணை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf