War Crime in Eelam | ஈழத் தமிழர்களின் கண்ணீர் உங்கள் கண்களுக்கு தெரிய வில்லையா? வைகோ

இலங்கை அதிபர் ராஜபச்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் ஐநா விளக்க அறிக்கை பொதுக்கூட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடியில் நடத்தியது அக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட வைகோ தொண்டர்களிடையே பேசும் போது, ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழரின் கண்ணீர் துடைப்போம் என்று ஓட்டுக் கேட்டுதான் ஜெயலலிதா வென்றுள்ளார். ஆனால் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஈழ மக்களுக்கான அறிவிப்புகள் எதுவுமே இல்லை. போர்க்குற்றம் புரிந்த ராஜபட்சேவை தண்டிக்கக் கோரியும் மத்திய அரசு தனது தூதரக உறவை துண்டித்துக் கொள்ளக் கோரியும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

பெல்ஜியத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசும்போது, ஈழத்தமிழர்களின் கண்ணீர் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? அவர்களின் ஈனக்குரல், பெண்கள், குழந்தைகள், தாய்மார்கள் அழுகுரல் அனைத்துலக காதுகளுக்கு கேட்கவில்லையா? என்று பேசினேன். இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க ஈழத்தமிழர்கள் என்ன பாவம் செய்தார்கள்?. தமிழர்களாக பிறந்தது தான் அவர்கள் செய்த பாவமா? என்று கேட்டேன். எனக்கு 15 நிமிட நேரம் தான் ஒதுக்கினார்கள். அதற்குள் என்ன முக்கிய விஷயங்களை சொல்ல முடியுமோ? அதனை கூறினேன்.

பதுங்கு குழிகளில் பதுங்கி இருந்த பெண்கள், குழந்தைகள், முதியோர் என எல்லோரையும் குண்டு வீசி கொன்றது இலங்கை அரசு. குண்டுவீச்சு நின்று விட்டது என நினைத்து வெளியே வந்த குழந்தைகள் மீதும் குண்டுவீசி கொன்றது இலங்கை ராணுவ விமானங்கள்.அறம் வெல்லும். நீதி வெல்லும். உண்மை ஒரு நாள் வெல்லும். என் வாய் பேச முடியும் வரை நான் இவற்றை பேசிக்கொண்டு தான் இருப்பேன். ஐரோப்பிய மாநாட்டில் இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதில்லை. வேறு பல உதவிகளும் நிறுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். போர்க்குற்றம் புரிந்தவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்றார்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf