அரைக்கீரையும் அற்புத குணங்களும்

அரைக்கீரை.பொதுவாக ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பு உண்டு. அந்த வகையில், வீடுகளில் அடிக்கடி சமைக்கும் கீரைகளில் ஒன்றான அரைக்கீரையின் அற்புத குணங்களை இப்போது பார்ப்போம்.

இன்றையச் சூழலில் பெரும்பாலானோர் வாயு தொடர்பான பிரச்சனைகளில் அவதிப்படுகிறார்கள். ஆனால், அரைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், வாயு தொடர்பான எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் நம்மை அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளும்.அரைக்கீரையுடன், பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து புளி சேர்க்காமல் கடைந்து சாப்பிட்டால் வாயு தொடர்பான தொல்லைகள் உடனடியாகத் தீரும்.

கிருமி தொற்றுகளால் ஏற்படும் தொண்டைப்புண், இருமல், சளிப்பிடிப்பு போன்றவற்றிற்கு அரைக்கீரை சிறப்பான மருந்தாகச் செயல்படுகிறது.ஏதாவது ஒரு நோய்க்கு ஆளாகி உடல் பலவீனமாக இருப்பவர்கள் அன்றாடம் உணவில் அரைக்கீரையைச் சேர்த்துக்கொண்டால் உடல் பலம் பெறுவதுடன், இழந்த தெம்பும் திரும்ப வரும்.

காய்ச்சல் காரணமாகவோ, வயிறு கோளாறு காரணமாகவே சில வேளைகளில் நாக்கு அதன் ருசி தன்மையை இழந்துவிடும். அந்த சமயங்களில் அரைக்கீரையுடன் புளி சேர்த்து கடைந்து சாப்பிட்டால் நாக்கு இயல்பான நிலைக்குத் திரும்பும்.இது எல்லாவற்றிற்கும் மேலாக, அரைக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது வளம் பெறும். இளம் வயதில் பல்வேறு காரணங்களால் ஆண்மைத் தன்மை இழப்பிற்கு பலர் ஆளாகிறார்கள். அவர்கள், இந்தக் கீரையைத் தொடர்நது சாப்பிடுவதன் மூலம் இழந்த ஆண்மைத் தன்மையை மீண்டும் பெற்றுவிட முடியும்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf