Take the Decisions like a Genius | புத்திசாலித்தனமாக முடிவு எடுக்க வேண்டுமா?

புத்திசாலித்தனமாக முடிவு எடுக்க வேண்டுமா?, பிரச்சினை இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை இருக்கும். இதற்கு தீர்வு காண்பதில் தான் ஒருவரது வெற்றி அடங்கி இருக்கிறது. அந்த வகையில் பிரச்சினைகளுக்கு புத்திசாலித்தனமாக தீர்வு காண என்ன செய்யலாம் என்று விஞ்ஞானம் ஆலோசனை வழங்குகிறது.

இங்கிலாந்தில் உள்ள மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் இது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்றது. அப்போது ஆழ்ந்த தூக்கத்துக்கும், புத்திசாலித்தனமாக முடிவு எடுப்பதற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்தனர். 54 இளைஞர்களை தேர்வு செய்து அவர்களில் ஒரு பிரிவை நன்றாக தூங்க வைத்து பின்னர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வைத்தனர். மற்றொரு பிரிவினரை தூங்க விடாமல் விழித்திருந்து பிரச்சனைக்கு தீர்வு சொல்லும்படி செய்தனர்.

இதில் நன்றாக தூங்கிய அணியினர் சிறப்பான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டனர். தூக்கத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள், மூளையின் செயல்பாடுகளில் உருவாகும் மாற்றங்கள் காரணமாக ஒருவர் நன்றாக தூங்கிய பின்னர் சிறப்பான முடிவுகளை எடுக்க முடிந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இனி உங்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும், நன்றாக தூங்கி ஓய்வு எடுத்தபின்னர் அதுபற்றி முடிவு எடுங்கள்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf