Tamilnadu's Decision is Awesome and Jayalalitha Departs to Delhi on 13th June | ஜெயலலிதா முதன் முதலாக டில்லி பயணமாகிறார்

இலங்கையில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசு மீது, ஐ.நா. சபை போர்க் குற்றவாளி என்று அறிவித்து, விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு ஐ.நா. சபையை வற்புறுத்த வேண்டும் என்றும், மேலும் தமிழர்களுக்கு சிங்கள அரசு துன்பம் விளைவிப்பதைத் தடுக்கவும் தமிழர்களுக்குப் பாதுகாப்பான நிலை ஏற்படுத்தவும் இலங்கை அரசு மீது பிற நாடுகளோடு சேர்ந்து இந்திய அரசும் பொருளாதாரத் தடை கொண்டு வர வேண்டும் என்றும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.சட்டமன்றத்தில் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழகத்திலும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறது என வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் ஜெயலலிதா முதன் முதலாக டில்லி பயணமாகிறார். வருகிற 13-ஆம் தேதி அரசு முறை பயணமாக டில்லி செல்லும் ஜெயலலிதா தமிழக அரசுக்கான கூடுதல் நிதிகளைக் கோருவதும், மின் தட்டுப்பாடு தொடர்பாக உதவி கோருவதும் முதன்மை பயண நோக்கமாக இருக்க இதற்கப்பால் திமுக, காங்கிரஸ் உறவு கசந்து வரும் நிலையில் ஜெயலலிதாவின் டில்லிப் பயணம் அரசியல் அரங்கில் முக்கியத்தும் பெருகிறது. ஜெயலிதாவோடு தமிழக நிதியமைச்சர் பன்னீர்செல்வமும், தலைமைச் செயலாளரும் டில்லி செல்கின்றனர்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf