Unnai Unarvaai: Know yourself better | உண‌ர்வாய் உன்னை-நேர்மை! |

உங்கள் மனதின் நேர்மையைத் தவிர புனிதமானது வேறில்லை. நேர்மையும், நேர்மையோடு கூடிய தைரியத்தையும் தவிர உலகில் உயர்ந்தது வேறென்ன இருக்கப்போகிறது.


நாம் உண்மையாக வாழ்ந்தால் உண்மையாக பார்க்கலாம்.. உங்களை வலியுறுத்துங்கள், ஒருபோதும் பிரதி எடுக்காதீர்கள்.

உங்களைத்தவிர வேறு எதுவும் உங்களுக்கு அமைதியைத் தரமுடியாது. கொள்கைகளின் வெற்றி தவிர வேறு எதுவும் உங்களுக்கு திருப்திதர முடியாது.

தன் சொந்த இயல்போடு ஒத்திசைந்து வாழும் வாழ்வே சந்தோஷமானது. அப்போதுதான் நீங்கள் யாரென்பதை உங்களாலேயே அறிய முடியும். மற்றவரை அறிந்தவன் புத்திசாலி, தன்னை அறிந்தவன் ஞானி.

மனிதன் செல்லக்கூடிய எல்லாப் பாதைகளிலும் ஒரு சமயத்தில் ஒரு பாதை மிகவும் சிறந்ததாக இருக்கிறது.

இயல்பாக எப்பொழுதெல்லாம் இருக்கிறீர்களோ, அப்படியே தொடர்ந்து இருங்கள். உங்கள் திறமையை விட்டுவிடாதீர்கள். இயற்கை உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறதோ அப்படியே இருங்கள், வெற்றி பெறுவீர்கள்.

தன்னை ஒரு மனிதன் உண்மையாக கையாள முடியாவிட்டால் அவனால் ஒருபோதும் உயர்ந்த விஷயங்களை கையாள முடியாது.

ஒரு மனிதன் தன் கூட்டாளிகளுடன் கூடவே ஒத்திசைந்து செல்லாவிட்டால் ஒருவேளை அவன் வேறு தாளத்தைக் கேட்டுக் கொண்டிருக்கலாம். எனினும் அவன் கேட்கும் இசைக்கேற்ப அவன் நடக்கட்டும். எவ்வளவு கச்சிதமாக இருந்தாலும், விலகி இருந்தாலும் சரி. அவன் அவனாகவே இருப்பதே நல்லது.

உங்களை உருவாக்கியதற்காக இந்த சமுதாயத்திற்கு பட்ட கடனை உங்கள் திறமைகளைப் பயன்படுத்துவதில் தீர்க்கலாம். அதற்கு முதலில் உங்களுக்கு நீங்களே தந்த நல்ல உறுதிமொழிகளை நிறைவேற்றுங்கள்.






நேர்மையான ஒரு மனிதனே கடவுளின் உன்னதப்படைப்பு.

நற்பெயர் கொண்டவர்கள், பொய் பேசாதவர்கள், தந்திரமான வார்த்தைகளுக்கு எடுபடாமல் இருப்பவர்கள், மக்களுக்கான கடமையிலும், தனிமனித சிந்தனையிலும் உயர்வாக உள்ளவர்கள் பனியை விலத்தும் சூரியனாக பிரகாசிக்கும் சமுதாயப் பகலவன்கள்.

இந்த அமெரிக்க அதிபர் பதவியை நான் எப்படி நடாத்த விரும்புகிறேன் என்றால், இந்தப் பதவியை விட்டு விலகும் சமயத்தில், உலகில் உள்ள எல்லா நண்பர்களையும் இழந்துவிட்டாலும், ஒரேயொரு நண்பனாவது இருப்பான் அவன் என்னுள்ளேயே இருப்பான். – ஆபிராகம் இலிங்கன்.

அன்பு, சுயநலமற்ற தன்மை, அடுத்தவர் நலன் பேணுதல் போன்றவை எப்போதுமே முக்கியமான குணங்களாக மதிக்கப்படுகின்றன. ஒரு மனிதன் அவனுடைய ஒட்டு மொத்தமான குணங்களோடு சேர்த்தே மதிக்கப்படுகிறான். இதை மிகவும் அவதானமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

மற்றவர் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அதை நீயே அவர்களுக்கு முதலில் செய். ஒரு நண்பனைப் பெற ஒரே வழி நீயும் நண்பனாக இருப்பதுதான்.
அன்பு, தருமம், மற்றவர்களுக்கு சேவை செய்தல் இவைகள்தாம் மனிதனின் அடிப்படைக் குணங்கள். அன்பு எப்போதும் தோற்பதில்லை. நம்பிக்கை, விசுவாசம், அன்பு ஆகிய மூன்றில் உயர்ந்தது அன்புதான்.

அன்பு இல்லாதவர்கள் வானத்தில் உள்ள தேவர்களின் மொழியில் பேசினாலும் அந்தப் பேச்சு உயிரற்ற ஜால்ராவாகத்தான் இருக்கும்.

நாம் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும், வல்லமை உள்ளவராக இருந்தாலும் அன்பு,நேர்மை இல்லை என்றால் ஒன்றுமே இல்லை.



தீர்க்கதரிசனங்கள் பொய்யாகலாம் : மொழிகள் அழியலாம் : அறிவு மறைந்து போகலாம் ஆனால் அன்பு எப்போதுமே அழிவதில்லை.

அன்பு தகாதசெயலில் ஈடுபடாது, தனக்காக எதையும் செய்யாது, எளிதில் உணர்ச்சிவசப்படாது, தீயதை எண்ணாது. அநீதி செய்துவிட்டு சந்தோஷப்படுவது குற்றம், உண்மையைப் பார்த்து, சந்தோஷப்படுவதே மேன்மையானது.

உன் உடலைத் தானம் செய்ய விரும்புகிறாயா.. அப்படியானால் உன்னிடம் அன்பு இருக்கிறதா என்று உன்னை நீயே கேட்டுப்பார். அன்பில்லாத உன் உடல் உறுப்புகள் இன்னொரு மனிதனில் பொருத்தப்பட்டால் அவனும் அன்பற்ற இயந்திரமாகிவிடுவான்.

தீர்க்க தரிசனம் என்பது கடவுளால் கிடைப்பதல்ல, தேடிக் கொண்டு சென்று பாதி விடயங்களை அறிந்தால் மீதி தீர்க்கதரிசனமாகவே தெரியும். மேலும் முழுமையானது வந்துவிட்டால் பாதி மறைந்துவிடும்.

இறக்கவோ கொல்லப்படவோ முன்னர் உன்னால் முடிந்ததை ( நல்லதை ) எல்லாம் செய்துவிட்டு உன் கையில் உள்ள விளக்கை மற்றவரிடம் ஒப்படைத்துவிடு.

தன் சக மனிதனை நேசிக்காதவர்கள் உபயோகமற்ற வாழ்வை வாழ்கிறார்கள்.

தரும்போதுதான் நாம் பெறுகிறோம் : மன்னிப்பதால்தான் மன்னிக்கப்படுகிறோம் : இறப்பதனால்தான் எல்லையற்ற வாழ்வை பெறுகிறோம்.

தன் சக மனிதர்களை நேசிக்காதவர்கள் உபயோகமற்ற வாழ்வை வாழ்கிறார்கள்.

வெறுப்பு இருக்கும் இடத்தில் அன்பு செலுத்துங்கள் : சந்தேகம் உள்ள இடத்தில் நம்பிக்கை கொடுங்கள் : மனச்சோர்வு உள்ள இடத்தில் விசுவாசம் கொடுங்கள் : இருள் உள்ள இடத்தில் வெளிச்சம் கொடுங்கள் : துக்கம் உள்ள இடத்தில் சந்தோசம் கொடுங்கள்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf