பகவத் கீதையை கற்றுக்கொடுக்க ஆர்.எஸ்.எஸ் மடத்திற்கு 40 கோடி ரூபாய்: கர்நாடகா மாநிலத்தை ஆளும் பாசிச பா.ஜ.க அரசு

கர்நாடகா மாநிலத்தை ஆளும் பாசிச பா.ஜ.க அரசு பள்ளிக்கூடங்களில் பகவத் கீதையை போதிக்க ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டிலுள்ள மடத்திற்கு 40 கோடி ரூபாய் அளித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள சிர்ஸியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மடத்திற்கு பா.ஜ.க அரசு இவ்வளவு பெரிய தொகையை அனுமதித்துள்ளது.

மாநிலத்தில் ஏராளமான பள்ளிக்கூடங்கள் அடிப்படை வசதியில்லாமல் மூடவேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் வேளையில் ஹிந்துத்துவா கொள்கையை பரப்பும் நோக்கில் பகவத் கீதையை போதிப்பதற்காக 40 கோடி மானியமாக அளித்துள்ளது.
கர்நாடகாவில் கீதையை கற்பது கட்டாயமாக்கவில்லை என அறிக்கை வெளியிட்ட அம்மாநில கல்வி அமைச்சரின் கூற்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி என்பது தெளிவாகியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பகவத் கீதையை கற்று கொடுப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவை பிறப்பித்தது கர்நாடகா பா.ஜ.க அரசு. கடந்த 2009 செப்டம்பர் 30-ஆம் தேதி பொது கல்வி துறை வெளியிட்ட 74/2009 உத்தரவின்படி பகவத் கீதையை போதிக்க வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், அதில் குறைவு ஏற்படுத்தக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.

எதிர்ப்பை அஞ்சி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த கல்வியாண்டில் தான் பகவத் கீதையை போதிக்க மாவட்ட கல்வி இயக்குநர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிக்கூட வகுப்புகள் முடிந்த பிறகு பகவத் கீதை வகுப்பை நடத்தலாம் எனவும், மாணவர்களை கட்டாயப்படுத்தி வகுப்புகள் நடத்தவியலாது எனவும் கல்வித்துறை கடிதம் எழுதியிருந்தது.

இதனை மீறி வலுக்கட்டாயமாக பகவத் கீதை வகுப்புகளை நடத்தும் முயற்சியை பாசிச பா.ஜ.க அரசு மேற்கொண்டுள்ளது. பகவத் கீதையை கற்பதை கட்டாயப்படுத்தி பாடத்திட்டத்தில் இடம்பெற செய்ய முயலும் பா.ஜ.க அரசுக்கெதிரான போராட்டம் கர்நாடாகவில் தீவிரமடைந்துள்ளது. குஜராத் மாடலில் காவிமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக சமூக ஆர்வலர்களும், இடதுசாரிகளும், எழுத்தாளர்களும் களமிறங்கியுள்ளனர்.

கடும் எதிர்ப்பை தொடர்ந்து கோலார், சிக்பெல்லாபூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் பகவத் கீதையை போதிக்க இயலாது என அதிகாரிகள் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf