Nithyananda Ranjitha Hot: சாமியார் நித்யானந்தா குற்றச்சாட்டு - மீடியாவை ஆயுதமாகக் கொண்டு தன்னை அழிக்க சன் டி.வி., முயற்சி

சாமியார் நித்யானந்தா நீண்ட நாட்களுக்குப்பிறகு தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க சென்னையில் உள்ள மெரினா டவர்ஸ் ஓட்டலில் நிருபர்களை சாமியார் நித்யானந்தா சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சன் டி.வி.,யில் கடந்த சில மாதங்களுக்கு முன் தானும் ரஞ்சிதாவும் படுக்கையறையில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சன் டி.வி., மற்றும் சில இணைய தளங்களில் ஒளிபரப்பானது. இது முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றின் உண்மைத்தன்மை அறிய தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையிலேயே சன் டி.வி.,யில் ஒளிபரப்பான அந்த சி.டி., தான் அனுப்பப்பட்டதா என்பதை தெளிவாக்க வேண்டும் என்று கூறினார் சாமியார் நித்யானந்தா.

மீடியாவை ஆயுதமாகக்கொண்டு தன்னை அழிக்க சன் டி.வி., மற்றும் தினகரன் நாளிதழ் ஆகிய ராட்சசர்கள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், தானும் ஒரு பத்திரிக்கைக்காரன் தான். இது ஒரு ஒழுக்கப்பிரச்னை. தன் மீது ஏதேனும் புகார் இருந்தால் தனது மூத்த சீடர்களோ அல்லது மூத்த நடுநிலை பத்திரிக்கையாளர்களோ தன்னிடம் நேரிடையாகவே கேட்டிருக்கலாம். அதை விடுத்து தன்னை அழிக்க சன் டி.வி., முயற்சித்தது என்று தெரிவித்தார் சாமியார் நித்யானந்தா.

இந்த பிரச்னைக்கு மூல காரணம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சக்சேனாவின் கூட்டாளியான ஐயப்பனும், வக்கீல் ஸ்ரீதரும் தான் காரணம் என்று குற்றம் சாட்டிய சாமியார் நித்யானந்தா, இவர்கள் இருவரும் எங்களிடம் நில அபகரிப்பு, பணம் கேட்டு மிரட்டல், அடித்து உதைத்தல் மற்றும் பணப்பிரச்னைகளை ஏற்படுத்துதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். முதலில் ரூ. 100 கோடி கேட்டு மிரட்டிய அவர்கள், பின் 60 கோடி கேட்டு மிரட்டியதாக தெரிவித்தார். ஆனால் தனக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக தனது சீடர்கள் அவர்களிடம் 25 முதல் 30 லட்சம் வரை தந்துள்ளனர் என்று கூறிய சாமியார் நித்யானந்தா, எனினும் அவர்கள் தொல்லை தொடர்ந்தாக தெரிவித்தார்.

தனக்கு என்ன நடந்தாலும் அதற்கு சன் டி.வி.,யும், தினகரன் நாளிதழுமே முழுப்பொறுப்பு என்று தெரிவித்த சாமியார் நித்யானந்தா, இது தொடர்பாக தாங்கள் அளித்த புகாரை எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார். தமிழகம் மற்றும் பெங்களூரில் 120 தியான மையங்கள் சன் டி.வி., ரவுடிகளால் அடித்து நொறுக்கப்பட்டதாகவும், பிடதி, திருவண்ணாமலை போன்ற ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தங்கள் சீடர்கள் 17 பேரின் வேட்டியை உருவி விட்டும், 7 பேர் மீது கொலை வெறி தாக்குதலும் நடத்தப்பட்டதாக நித்யானந்தா தெரிவித்தார். தாரமங்கலம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஏம்பலம் தியான பீடத்தில் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிடதியில் உள்ள எங்களது ஆசிரமத்தின் மீது பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே சன் டி.வி., நிருபர்களும், கேமிரா மேன்களும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டனர். இவை அனைத்தும் சன் டி.வி.,யின் தூண்டுதலின் காரணமாகவே நடந்துள்ளது என்று சாமியார் நித்யானந்தா குற்றம் சாட்டினார்.

தன் மீது 376 சட்டப்பிரிவின் கீழ் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதில் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறிய நித்யானந்தா, தனது மீதான தாக்குதல் மற்றும் பொய்ப்பிரச்சாரம் குறித்து சில மாதங்களுக்கு முன் அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்தித்து கடிதம் கொடுத்ததாகவும், ஆனால் அதற்கு பின்னும் எங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படவில்லை. ஆசிரமத்தின் முன்னாள் சீடரான லெனின் கையாள் பிரசன்னா என்பவர் ரூ. 100 கோடி பணம் கொடுத்தால் இப்பிரச்னைகளை எல்லாம் ஊதித்தள்ளிவிடலாம் என தனது ஆசிரமத்தில் உள்ளவர்களுடன் பேசிய ஆடியோ டேப் தன்னிடம் உள்ளது என்றும் நித்யானந்தா தெரிவித்தார்.

இப்பேட்டியின் போது, நடிகை ரஞ்சிதாவும் சாமியார் நித்யானந்தாவுடன் இருந்தார். எங்களுடன் நடிகை ரஞ்சிதாவும் பேட்டியில் அமர்ந்திருப்பது தனது நேர்மையையும், தைரியத்தையும் எடுத்துக்காட்டுவதாக சாமியார் நித்யானந்தா தெரிவித்தார். மேலும் இலங்கை பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளித்த நித்யானந்தா, இலங்கை போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆசிரமம் ஒன்று ஏற்படுத்தவிருந்ததாகவும் ஆனால் அப்போதைய ஆட்சியாளர்கள் இதற்கு ஒப்புதல் அளிக்க வில்லை என்று தெரிவித்தார்



No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf