Chettinaad Chicken Masala | செட்டிநாடு சிக்கன் மசாலா

செட்டிநாடு சிக்கன் மசாலா - தேவையான பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
காய்ந்த மிளகாய் - 10
மிளகு - 1 டீஸ்பூன்
தனியா - ஒரு கையளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
மராட்டி மொக்கு - 4
கடல் பாசி - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கொப்பரைத் தேங்காய் - சிறிதளவு
துவரம் பருப்பு - சிறிதளவு
கடலைப் பருப்பு - சிறிதளவு
பட்டை - 4 சிறுதுண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
உப்பு - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 1 குழிக்கரண்டி

செட்டிநாடு சிக்கன் மசாலா - செய்முறை

* வாணலியில் எண்ணையில்லாமல் தனியா, மிளகாய், மிளகு, சீரகம், சோம்பு, பருப்பு வகைகள், கடல்பாசி, மராட்டி மொக்கு, கொப்பரைத் தேங்காய் இவற்றை நன்கு வறுக்கவும். அதை ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும். (இந்த மசாலா பொடியை தயாரித்து வைத்திருந்தும் உபயோகிக்கலாம்.)

* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.

* பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி ஆகியவை சேர்த்து வதக்கவும்.

* அத்தோடு சுத்தப்படுத்தி நறுக்கிய சிக்கனை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு, தேவையான நீர் சேர்த்து சிக்கனை வேக விடவும்.

* சிக்கன் வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை தேவைக்கேற்ப சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வேகவிடவும்.

* சிக்கன்- மசாலா கலவை திக்கானதும் இறக்கி விடவும்.

* இது டிபன் வகைகளுக்கு மட்டுமல்லாது சாதம் வகைகளுக்கும் தொட்டுக்கொள்ள ருசியாக இருக்கும்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf