Avoid Salt for Diabetic Issues | சர்க்கரை நோயை விரட்ட உப்பை குறையுங்கள்!

நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் இன்றைய எந்திர வாழ்க்கை முறையிலும், உணவு பழக்க வழக்கங்களாலும் நீக்கமற நிறைந்த ஒன்றாக ஆகிவிட்டது.முறையான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மையே சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறபோதிலும், சர்க்கரை நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள், தாங்கள் எடுத்துக்க்கொள்ளும் உணவில் உப்பின் அளவை குறைத்தாலும் சர்க்கரை நோயை விரட்டியடிக்க முடியும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக டைப் 1 அல்லது டைப் 2 ஆகிய ஏதாவது ஒன்றின் பாதிப்புடைய சர்க்கரை நோயாளிகள் 254 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட 13 விதமான ஆய்வுகளில் இது தெரியவந்துள்ளது.இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் சராசரியாக ஒரு வார காலத்திற்கு,தாங்கள் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உப்பின் அளவை வெகுவாக குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு, இதனால் அவர்களது ரத்த அழுத்தம் எந்த அளவுக்கு தாக்கத்திற்கு உள்ளாகிறது என்று ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் பல ஆச்சரியமான முடிவுகள் தெரியவந்ததாக கூறுகிறார் இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற ரெபேக்கா சக்ளிங்.இந்த சர்க்கரை நோயாளிகள் அனைவரும் உடம்பின் திசுக்களுக்கு பிராணவாயுவையும், சத்துக்களையும் கொண்டு செல்கிற பணியை செய்கிற இருதயம் மற்றும் ரத்தக்குழாய்க்கு இடையேயான ரத்த ஓட்ட இயக்கத்தில் எந்த நேரத்திலும் ஆபத்தை எதிர்கொள்ளக்கூடிய ஆபத்தில் இருந்தவர்கள் ஆவர்.

ஆனால் இவர்கள் ஆய்வின்போது தினமும் மிதமான அல்லது மிகக் குறைந்த உப்பை எடுத்துக்கொண்டதால், அவர்களது உயர் ரத்த அழுத்தம் குறைந்து, மேற்கூறிய ஆபத்திலிருந்து அடியோடு விடுபட்டதை தாங்கள் ஆச்சரியத்துடன் கண்டறிந்ததாக கூறுகிறார் ரெபேக்கா சக்ளிங்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf