Goodness of Vegetables | காய்க‌றிக‌ளின் ந‌ற்குண‌ங்க‌ள்

பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிகவும் அவசியம். அதனால் தான் மருத்துவர்கள் உணவில் அதிக அளவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன.

பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது. தினமும் எதாவது ஒரு கீரை வகை சேர்ப்பது உடல் நலத்துக்கு ஏற்றது.

குறைந்த பட்சம் வராத்திற்கு இரண்டு தடையாவது கிரை சேர்க்க வேண்டும் . அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி௧2 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது. வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது.
 
தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன.

இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன. 

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf