ஆதாரங்களை சேகரிப்பதற்கு தடையாக மாறிய மும்பை போலீஸ்

மும்பை போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினரின் முட்டாள்தனத்தால் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களிலிருந்து ஆதாரங்கள் பல அழிந்துவிட்டதாக தடவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ஜவேரி பஸாரில் பாவு கல்லியில் சிலிண்டர் வெடித்தது என கருதி தீயணைப்பு படையினர் தண்ணீரை பாய்ச்சியது ஆதாரங்களை அழிவதற்கு காரணமானது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு புனேயில் ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பிற்கு பிறகும் இதே அனுபவம் தான் ஏற்பட்டது.

புனே சம்பவத்தில் இருந்து மும்பை போலீஸ் இதுவரை பாடம் படிக்கவில்லை என தடவியல் நிபுணர்கள் குற்றம் சாட்டினர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனேயே சம்பவ இடத்திலிருந்து பொதுமக்களை விலக்குவதிலும் மும்பை போலீஸிற்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.கடுமையான மழையும் தடவியல் நிபுணர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. சம்பவம் நிகழ்ந்த சில மணிநேரங்களுக்கு பிறகே குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களில் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி பரிசோதனை நடத்த சாத்தியமானது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்த பைக்குகள் மற்றும் இதர வாகனங்களை மும்பை போலீஸ் அகற்றியதும் குற்றச்சாட்டிற்கு காரணமாகியுள்ளது.

பொதுவாக ஏதேனும் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்தால் சம்பவம் நிகழ்ந்த இடத்தை மும்பை போலீஸ் ஸார் சுற்றி வளைத்து பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தவேண்டும். தடவியல் நிபுணர்கள் வரும்வரை காத்திருந்து, அவர்கள் ஆதாரங்களையும், மாதிரிகளையும் சேகரிக்கும் வரை இந்நிலை தொடரவேண்டும். இதனை போலீசாரும் ஒப்புக்கொள்கின்றனர்.அம்மோனியம் நைட்ரேட் வெடிப்பொருள் குண்டுவெடிப்பிற்கு உபயோகிக்கப்பட்டுள்ளதாக தடவியல் நிபுணர்கள் கருதுகின்றனர். வெடிக்குண்டிலிருந்த ஆணிகள், கண்ணாடி சில்லுகள் ஆகியன குண்டுவெடிப்பின்போது சிதறியதில் பலருக்கு காயமேற்பட்டுள்ளது. மூன்று இடங்களில் ஏழு ஐ.இ.டிக்கள்(Improvised explosive device) உபயோகிக்கப்பட்டுள்ளதாகவும், டைமர் இணைக்கப்பட்டிருந்ததாகவும் தடவியல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf