Pre- Diabetes: பிரிடயபடீஸ்

உலகிலேயே அதிக செலவு வைக்கக் கூடிய வியாதியாக `டைப் 2' சர்க்கரை நோய் கருதப்படுகிறது. சர்க்கரை நோயுள்ள வயது வந்தோருக்கு, சர்க்கரை நோயில்லாதவர்களை விட இதய நோயால் உயிரிழப்பு அபாயம் நான்கு மடங்கு அதிகம் என்று அச்சுறுத்துகிறார்கள்.

சர்க்கரை நோய்க்கு முந்திய `பிரிடயபடீஸ்' நிலையும் தற்போது அதிகரித்து வருகிறது. விடலைப் பருவத்தினர் மற்றும் வயது வந்தோரில் 13 சதவீதம் பேருக்கு `பிரிடயபடீஸ்' இருக்கிறது. இவர்கள் போதுமான தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், 10 ஆண்டுகளில் `டைப் 2' சர்க்கரை நோய் ஏற்படக்கூடும்.

`டைப் 2' சர்க்கரை நோய் ஏற்பட்டபின் அதைக் குணப்படுத்துவது கடினம். எனவே, `வருமுன் காப்போம்' அடிப்படையில் ஜாக்கிரதையாக நடந்துகொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

`பிரிடயபடீஸ்' அல்லது சர்க்கரை நோயை ஏற்படுத்தக்கூடிய சில அபாய காரணிகள் இருக்கின்றன. பின்வரும் அவற்றை அறிந்து, தகுந்த தற்காப்பு நடவடிக்கைகளை எடுங்கள்:

1. உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது.

2. சர்க்கரை நோயுள்ள பெற்றோர் அல்லது சகோதர, சகோதரிகளைப் பெற்றிருப்பது.

3. வெளிநாடு வாழ் இந்தியராயிருப்பது. (வளர்ந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் சர்க்கரை நோய் அபாயம் எட்டு மடங்கு அதிகம்.)

4. நான்கு கிலோவுக்கு மேல் எடையுள்ள குழந்தையைப் பெற்றெடுப்பது.

5. அதிக ரத்த அழுத்தம் (120/எம்.எம்.எச்.சி.) இருப்பது அல்லது அதற்காகச் சிகிச்சை பெறுவது.

6. எச்.டி.எல். அல்லது நல்ல கொலஸ்ட்ராலை 35 எம்.ஜி./டி.எல்.-க்குக் கீழே கொண்டிருப்பது.

7. `பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம்' (பி.சி.ஓ.எஸ்.) இருப்பது.

8. முந்திய ரத்தப் பரிசோதனைகளில், `பாஸ்டிங் குளுக்கோஸ்' மற்றும் `குளுக்கோஸ் டாலரன்ஸ்' பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வருவது.

9. இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடைய அதிக எடை, `அகன்தோசிஸ் நிக்ரிகன்ஸ்' (கழுத்தைச் சுற்றி அல்லது அக்குளில் அடர்நிற, பஞ்சு போல் மென்மையான தடிப்புகள்) போன்ற அறிகுறிகள்.

10. `கார்டியோவாஸ்குலார்' பாதிப்புக்கு உட்பட்டவராக இருப்பது.

உங்களுக்குத் தற்போதைய சோதனையில் சர்க்கரை நோய் இல்லை என்று தெரியவந்தாலும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அச்சோதனையைச் செய்துகொள்வது அவசியம். சோதனை முடிவுகள், அபாயக் காரணிகள் அடிப்படையில் மேலும் குறுகிய இடைவெளியில் சோதனைகளைச் செய்யும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கூடும்.

`டைப் 2' சர்க்கரை நோய் ஏற்படக்கூடிய அபாயம் உள்ள லட்சக்கணக்கானவர்கள், எடையைக் குறைப்பது, தினசரி உடற்பயிற்சிகள், கொழுப்பு, கலோரிகள் குறைந்த உணவுமுறை மூலம், நோய் அபாயத்தைத் தள்ளிப் போட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எடைக் குறைப்பும், உடல் உழைப்பும், இன்சுலினைப் பயன்படுத்துவது, குளுக்கோஸை சிதைப்பது ஆகியவற்றில் உடலின் திறமை மேம்படுத்தி, சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்கின்றன.

உடல்நல பாதிப்புச் சிக்கல்களைத் தவிர்க்க, நீடித்த `குளுக்கோஸ் கண்ட்ரோல்' மிகவும் முக்கியம்.

அதற்குச் சரியான மருத்துவ முறை, அடிக்கடி சர்க்கரை நோய் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதிப்பது, வாழ்க்கைமுறையில் பின்பற்ற வேண்டிய விஷயங்களைக் கண்டிப்பாகக் கடைபிடிப்பது, சுய கட்டுப்பாடு, பிற மருத்துவப் பரிந்துரைகளை தவறாது பின்பற்றுவது போன்றவை அவசியம்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf