Jasmine Flowers Medicinal Effect: மலரும் மருத்துவமும் மல்லிகை

மலர்களில் மணம் மட்டும்தான் உண்டு என்று நினைப்பவர்களா நீங்கள். அப்படியென்றால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.  மணத்தோடும் மருத்துவ குணமும் சேர்ந்தவை தான் மல்லிகை மலர்கள்.

இதனால்தான் நம் முன்னோர்கள் இறைவனை பூஜிக்கும் பொருளாக மலர்களை பயன்படுத்தினர்.
மலர்கள் மனதிற்கு அமைதியையும், சாந்தத்தையும்  கொடுக்கிறது.  அதுபோல் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது.  இதை மலர் மருத்துவம் என்கின்றனர்.  தற்போது உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப்பெற்று வருகிறது.

இங்கிலாந்தில் டாக்டர் எட்வர்டு பாட்ச் என்பவர் M.ஆ.ஆ.கு. ஐ.கீ.இ.க, M.கீ.இ.கு படிப்புகளைப் படித்துவிட்டு சில காலம் ஆங்கில மருத்துவராக பணிபுரிந்தார்.  அப்போது ஆங்கில மருந்துகளால் சில நோய்கள் குணப்படாமலும், பக்க விளைவுகளை உண்டுபண்ணியும் வந்ததால் ஹோமியோபதி மருத்துவம் பயின்றார்.  பெரும்பாலான நோய்களுக்கு முக்கியக் காரணம் மனமே என்பதை உணர்ந்து அதற்கு மருந்து கண்டு பிடித்தால் நோய்களைக் குணப் படுத்தலாம் என்று முடிவு செய்து இதற்காக மரப் பட்டை, இலைகள், கனிகள், விதைகள், காய்கள், பூக்கள் என பல வகைகளைச் சேகரித்து பரிசோதனை செய்தார்.  அப்போது பிராய்ட் என்ற மனோதத்துவ அறிஞர் எழுதிய நூல்களில் மனதை செம்மைப்படுத்த மலர்களின் பங்கு பற்றி இருப்பதை அறிந்த அவர் 38 வகையான மலர்களைத் தேர்ந்தெடுத்து பரிசோதனை செய்ததில், அவை பல வகைகளில் மனிதனின் மனதை மாற்றி உள்ளத்திற்கு புத்துணர்வு கொடுக்கின்றன  என்பதை உணர்ந்தார்.  அதனால் நோய்கள் குணம் ஆவதையும் உணர்ந்தார்.  இப்படி உருவானதுதான் மலர் மருத்துவம்.  ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் சித்தர்கள் மலர்களின் மருத்துவப் பயன்களை கண்டறிந்துள்ளனர் என்பதைப் பார்க்கும்போது உலகின் ஆதி மருத்துவம்தான் நம் இந்திய மருத்துவம் என்பது நமக்கு புரிய வரும்.

இந்த வகையில் மல்லிகை மலரின் மருத்துவக் குணங்கள் பற்றி  சித்தர்கள் கூறுவது என்ன என்று பார்ப்போம்.

மல்லிகையை புருன்றி, இருவாட்சி, கொடிமல்லிகை, அனங்கம், மாலதி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும்.  அதிலும் குறிப்பாக மதுரை மல்லிக்கு அதிக மணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே.  மல்லிகை நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  வாசனை திரவியங்களுக்கு அதிகம் பயன்படுத்துவதால் மிகுந்த பொருளாதாரத்தை ஈட்டித் தருகிறது.

மல்லிகைப் பூவை நம் இந்தியப் பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள்.  காரணம் மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது.

மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.   சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.

கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.  கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும்.  கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும்.

தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது.
ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு.

மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.

உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள்.  இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.

தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.

உலர்ந்த மல்லிகைப்பூ - 5 கிராம்

கறிவேப்பிலை -10 இலை

எடுத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf