Palak Pakkoda Recipe: `பாலக்’ பக்கோடா

பாலக் பக்கோடா தேவையானவை:

நறுக்கிய பசலைக்கீரை - 1 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
கடலை மாவு - 3 கப்
அரிசி மாவு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 4 பல்
பச்சைமிளகாய் - 2
கறி மசாலாதூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

பாலக் பக்கோடா செய்முறை:

கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கவும். பசலைக் கீரையையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

கடலை மாவுடன் அரிசி மாவு, நறுக்கிய பசலைக்கீரை, வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், கடலைப் பருப்பு, கறி மசாலா தூள், எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து காய்ந்த எண்ணெயில் 2 டீஸ்பூன் விட்டு சிறிது தண்ணீர் தெளித்து பிசிறினாற்போல பக்கோடா மாவு கலவை தயாரித்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை சிறிது சிறிதாக உதிர்த்தாற்போல போட்டு, வேகவிட்டு முறுகியதும் எடுக்கவும்.

இதை சாப்பாட்டிற்கும் தொட்டுக்கொள்ளலாம். மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். மொறுமொறுவென சாப்பிட சுவையாக இருக்கும்.

கீதா தெய்வசிகாமணி

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf