Blood Creating Leaves: ரத்தம் உற்பத்தி செய்யும் கொடிபசலை, சிறுபசலை கீரைகள்

எண்ணற்ற சத்துக்களும் சுவையும் நிறைந்த கொடி பசலை தரையோடு கொத்து கொத்தாக சிறு செடி போல வளரும் இதுவும் பசலை வகையைச் சேர்ந்த்துதான். இலங்கையில் அதிகம் பயிரிடப்பட்ட இந்த கீரை தற்போது இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த இலையுடன் தண்டையும் சமைத்து சாப்பிடலாம். இரண்டிலும் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது.

கொடி பசலைக்கீரையில் வைட்டமின் ஏ,பி, போன்ற உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்பு, இரும்புச்சத்துக்களும், காணப்படுகின்றன. இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள ரத்தம் சுத்தமாகும். புதிய ரத்தம் விருத்தியாகும். மலச்சிக்கல் நீங்கும்.

சிறுபசலைக்கீரை

பசலைக்கீரையில் ஒன்றான சிறுபசலைக்கீரை தரையோடு தரையாக படர்ந்த இருக்கும். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட இந்த பசலைக்கொடி படர்ந்திருக்கும். இதன் இலை எள்ளின் உருவத்தில் உருண்டு,திரண்டு, வெந்தயம் அளவில் பருமனாக இருக்கும். இலையும், கொடியும் சிவந்த நிறத்துடன் இருக்கும்.

சிறுபசலைக்கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து உண்ணலாம். இது தேகத்துக்கு நல்ல பலத்தை தரக்கூடியது. மலச்சிக்கல் உள்ளவர்கள் பசலைக்கீரையை சாப்பிட இளகி குணமாகும். பாலுணர்வை தூண்டக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உண்டு.

நீர்கடுப்பு குணமாகும்

உஷ்ணம் காரணமாக சிறுநீர் சிவந்து அடிக்கடி இறங்குவது உண்டு. இந்த சமயம் சிறுநீர் துவாரத்தில் எரிச்சல் ஏற்படும். இதை நிறுத்த தரைப்பசலைக்கீரையை மூன்று வேளை சமைத்து சாப்பிட நீர்சுருக்கு குணமடையும்.

உஷ்ணம் காரணமாக வெட்டை, வெள்ளை ஒழுக்கு ஏற்பட்டு சிறுநீர் துவாரத்தில் சதா வெண்ணிறமான நீர் கசிந்து கொண்டிருக்கும். இந்த குறைபாடு உள்ளவர்கள் தரைப்பசலைக்கீரையை மூன்று நாட்கள் சமைத்து சாப்பிட குணமாகும். இது அதிக குளிர்ச்சி தரக்கூடியது என்பதால் சீதாள தேகம் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது. சளி, கபம் இருக்கும் போது கீரையை சாப்பிட்டால் அதிகமாகும்

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf